செல்வம் பெருக பரிகாரம் | Selvam Peruga Pariharam in Tamil
Selvam Peruga Pariharam in Tamil – நமது அத்யாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய கண்டிப்பாக வேலைக்கு செல்கிறோம். அங்கு நாள் முழுவது பலமணி நேரம் உழைக்கிறோம். அதில் பலருக்கு என்ன தான் நாய் மாதிரி உழைத்தாலும் 1000 ரூபாய் கூட கூலி கிடைப்பதில்லை. சிலருக்கு பணம் எளிதில் கிடைத்துவிடும் அதனால் அந்த பணத்தை தண்ணீர் போல் செலவு செல்வார்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்கிறான் என்று சொல்வார்கள். அந்த தண்ணீர்தான் பணத்தை ஈர்க்கும் மிகப்பெரிய பொருளாக. தண்ணீர் எப்படி பணத்தை ஈர்க்கும் பொருள் என்று தானே யோசிக்கிறீங்க. அதை தெரிஞ்சிக்கணும்னா இந்த பதிவை முழுமையாக படியுங்கள்.
பணம் ஈர்க்கும் பொருள் தண்ணீர்:
தண்ணீரை சேமிப்பது என்பது பணத்தை ஈர்க்க கூடிய நேரடி தொடர்பு கொண்டது. நம்முடைய வீட்டில் கூட ஈசான்ய மூலையில் தண்ணீரை கீழ்நிலை தொட்டியில் சேகரிப்பார்கள். பண்டைய காலங்களில் ஈசான்ய மூலையில் கிணறு வெட்டியது கூட வாஸ்து படி செல்வம் சேரத்தான்.
பலர் தண்ணீரை அதிக அளவு செலவு செய்வார்கள் அவர்களுக்கு கண்டிப்பாக கையில் பணம் தாங்கவே தாங்காது, ஆக தண்ணீரை எவ்வளவு சிக்கனமாக செலவு செய்கிறீர்களோ அதேபோல் பணத்தையும் சிக்கனமாக தான் செலவு செய்வீர்கள். இதனை வைத்தே நீங்கள் பணத்தை எப்படி செலவு செய்யும் நபர் என்று தெரிந்துவிடும். சரி வாங்க வீட்டில் பணம் பெருக தண்ணீரை வைத்து ஒரு பரிகாரம் செய்துடுவோம்.
பணம் வரவு அதிகரிக்க:
பொதுவாக வீட்டில் மகாலட்சுமியின் சிபிச்சம் நிறைந்திருந்தால் மாட்டும் தான் வீட்டில் செல்வம் செழிப்பாக இருக்கும். ஆக வீட்டில் பணம் பெருக, மகாலட்சுமி நிலைத்திருக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்துவிடுங்கள்.
பொதுவாக பெண்கள் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலை கூட்டி கோலம் போடுவார்கள், வாசல் படியில் கோலம் போடும்போது இதை மட்டும் செய்யுங்கள்.
செல்வம் பெருக பரிகாரம் – Selvam Peruga Pariharam in Tamil:
அதாவது ஒரு சொம்பில் சுத்தமான நீரை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் இரண்டு ஏலக்காய், இரண்டு பச்சை கற்பூரம், வெட்டிவேர் மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்று ஆகியவற்றை சேர்த்து கலந்துவிடுங்கள் பின் அதனை வாசல் படிக்கு எடுத்து செல்லுங்கள். பிறகு வாசல் படிக்கு உள்புறம் நின்றுகொண்டு அந்த சொம்பை உங்கள் கைகளினால் மூடிக்கொள்ளுங்கள், அதாவது இடது கையில் சொம்பை வைத்துக்கொள்ளுங்கள், வலது கையால் சொம்பை மூடிக்கொள்ளுங்கள். இப்பொழுது 10 முறை மகாலட்சுமியே நமஹ என்று சொல்லிவிட்டு அந்த நீரை வாசல்படியில் தெளித்து விட்டு கோலம் போடுங்கள். பிறகு வீடு முழுவதும் தெளித்துவிடுங்கள். இந்த முறையை தொழில் செய்யும் இடத்திலும் செய்யலாம். குறைப்பாக இந்த பரிகாரத்தை காலையில் தான் செய்ய வேண்டும். தண்ணீர் நிறைய இருந்தால் அதன் நீரை வீடு முழுவதும் தெளித்துவிட்டு செடிகளில் ஊற்றிவிடலாம். இவ்வாறு தினமும் செய்யலாம், அல்லது வெள்ளி செவ்வாய் கிழமைகளில் செய்துவரலாம்.
இவ்வாறு செய்து வருவதினால் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். செல்வ வளமும் அதிகரிக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |