நவாம்சம் பலன்கள் | Navamsa Palangal in Tamil
அதென்ன நவாம்சம்..புதுசா இருக்கே? அதனை என்னவென்று படித்து தெரிந்துக்கொள்ளுவோம். நவாம்சம் என்பது ஒரு ராசியை 9 சமபாகங்களாக பிரித்து ராசியில் உள்ள கிரகம், கிரகம் எந்த பகுதியில் இருக்கிறது என்பதை விளக்கி கூறுவதுதான் நவாம்சம். ராசி சக்கரம் என்பது கிரகங்களின் உண்மையான தோற்றம். நவாம்சம் என்பது அதனுடைய நிழல்கள். ஒரு கிரகத்தினையுடைய சுப மற்றும் அசுப வர்க்கங்களை கணிப்பதற்கு நவாம்சம் செயல்பட்டது. மேலும் நவாம்சத்தை வைத்து ஒருவருடைய திருமண வாழ்க்கையை பற்றி முழுமையான பலன்களையும் கூறமுடியும். இந்த பதிவில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன நவாம்ச லக்ன பலன்கள் இருக்கிறது என்று படித்தறிவோம்.
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2021 |
நவாம்சத்தில் மேஷ லக்னம்:
இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்கள். எதிலும் விடாமுயற்சியுடன் வெற்றியை அடைய கூடியவர்கள். எப்போதும் புன்சிரிப்பை கொண்டவர்களாக இருப்பார்கள். நவாம்சம் பலன் ஆண்களுக்கு எல்லா வகையிலும் பொருத்தமாக பெண்கள் அமைவார்கள். பெண்களுக்கு நவாம்சம் பலன் அப்படி கிடையாது. மற்றவர்களுடன் இணைந்து இருக்கமாட்டார்கள். இவர்களுக்கு 30 வயதிற்கு மேல் பணவரவு செழித்து காணப்படும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: மேஷ ராசியினருக்கு சூரியன் எப்போதும் தேக பொலிவினை கொடுப்பார். இவர்களுக்கு பரிசும், பாராட்டு மழையும் குவியும். மற்றவர்கள் இவர்களை நோக்கியே இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். வேவுபார்க்கும் வேலையை திறம்பட செய்வார்கள். மேஷத்தில் சூரியன் உள்ளவர்களுக்கு அரசாங்க காரியம் நன்மையில் முடியும்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: அடுத்தவர்களுக்கு உதவியினை தேடி சென்று செய்வார்கள். மற்றவர்களின் விஷயத்தில் வீணாக தலையிட்டு மாட்டிக்கொள்வார்கள். எப்போதும் தான் செய்த தவறினை ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு காயம், தழும்புகள் ஏதேனும் ஏற்படும்.
நவாம்சம் பலன்கள் – புதன்: கூர்ந்த மதியுடையவர்கள். நையாண்டி கலையில் வல்லவராகும் வாய்ப்பை இங்கே உள்ள புதன் தருவார். நாளுக்கு நாள் இவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்.
நவாம்சம் பலன்கள் – குரு: எந்த ஒரு காரியத்தையும் உறுதியுடன் பேசுவார்கள். ஆன்மீக சடங்குகளை குறைவில்லாமல் நடத்துவார்கள். அனைவராலும் இவர்களுடைய தேவைகள் நிறைவேறும்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: இவர்களிடம் நல்ல திறமை இருக்கும். அனைத்து விஷயங்களும் தெரிந்தது போன்று காட்டிக்கொள்வார்கள். உல்லாச பிரயாணங்கள் நிறைய இருக்கும். இவர்கள் திறமைசாலிகள் என்று குறிப்பிட முடியாது ஆனாலும் வாய்ப்புகளும் ஆதரவுகளும் கை கொடுத்து தூக்கி விடும்.
நவாம்சம் பலன்கள் – சனி: தன்னுடைய தேவைகளை பொருட்படுத்தாமல் தம்மை நாடி வந்தவர்களை அக்கறையுடன் கவனிப்பார்கள். பிறருடைய நம்பிக்கையை மட்டுமே விரும்புவார்கள்.
நவாம்சம் பலன்கள் – ராகு: மனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். ஆளைப்பார்த்து எடைப்போடாதே என்பது இவர்களுக்கு பொருந்தும். தனக்கு நன்றாக வரும் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். சூழ்நிலைக்கேற்ப விருப்பப்பட்ட செயல்களை செய்து அதையே தொழிலாக மேற்கொள்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – கேது: எதிர்ப்புகள், இன்னல்கள் என பல பிரச்சனைகளை கொடுப்பார் மேஷ கேது. பெரும்பாலும் மற்றவருக்கு உதவி செய்தல், பிறரைமன்னித்து ஏற்றல், ஸ்தல யாத்திரைகளுக்கு சென்று வருவதும் நன்மை தரும்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: நீண்ட காலம் புது உறவுகள் நீடிக்க செய்யும். காரணம், உதவி செய்ய முன்வரும் குணம் இவர்களது குணமே. துணிந்து உதவுவார்கள். இவர்களை பற்றி மற்றவர்கள் குறை கூறும் அளவிற்கு விடமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் ரிஷபம்:
நவாம்ச பலனில் ரிஷபம் லக்னமாக அமையப் பெறுவது ஒரு நல்ல அமைப்பாகும். அறிவும், அதிர்ஷ்டமும் ஒன்றாக வாய்க்கும். இவர்கள் இளம் வயதில்லையே பல திட்டத்தினை போட்டு பார்ப்பார்கள். நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தன் குடும்பமே முக்கியம் என்பது போல் இவர்கள் செயல்கள் இருக்கும். உழைப்பை விட இவர்கள் பெயருக்கே பெரும் வருமானம் கிடைக்கும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: தனது வருமானத்தை உடன்பிறந்தவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள். பண பிரச்சனையினை திறமையாக கையாளுவார்கள். ஏதேனும் பெரிய செயல்களில் பங்கேற்கும் போது மட்டும் சூரியன் போல் சூடாக இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: தன்னுடைய வளர்சிக்காக எதையும் செயல்படுத்துவார்கள். தன்னை பற்றி யாரும் தப்பாக கூறக்கூடாது என்று கவனமாக இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: இவர்களுடைய பேச்சுத்திறனில் எப்போதும் உறுதி காணப்படும். மற்றவர்களுக்கு நல்ல கருத்தினை கூறுவார்கள். ஒதுக்கப்பட்ட பெண்களை தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து மீட்க முயலுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: அனைவரும் விரும்பும் நாடகம், நடிப்பு, இசை, ஜோதிடம் எளிய வைத்தியம் போன்ற பல துறைகளில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவார்கள். முதலீடு செய்யாமலையே இவர்களுக்கு பணம் அதிகமாக வந்தடையும்.
நவாம்சம் பலன்கள் – குரு: பெருந்தன்மையும், கர்வமும் சேர்ந்த குணம் கொண்டவர்கள். நன்கொடைகள் அதிகமாக சேரும்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: அனைவர்க்கும் பிடித்த வகையில் இவர்கள் செயல் இருக்கும். இவர்களை நம்பி எந்த பொறுப்பினையும் கொடுக்கலாம்.
நவாம்சம் பலன்கள் – சனி: பணத்தினுடைய அருமை தெரியாமல் செலவு செய்வார்கள். அடுத்தவர்கள் எப்போதும் இவர்களை தாழ்த்தியே எடைபோடுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – ராகு: மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு இவர்களிடம் தனித்திறமை இருக்கும். எப்போதும் புதிய யோசனைகளையும், விசயங்களையும் வெளியிட்டு அசத்துவார்கள்.
நவாம்சம் பலன்கள் – கேது: சுகமான வாழ்க்கை எதாவது ஒரு வழியில் வந்து சேரும். இவர்களின் நடத்தையில் நேர்மை குறைவே என பேச்சு வந்தாலும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் மிதுனம்:
மிதுன நவாம்ச லக்னத்தை சேர்ந்தவர்கள் காண்போரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். இசை, இலக்கியம், நாடகம், கதை, கவிதை, காவியம் மற்றும் எழுத்து துறைகளில் அறிவு மிக்கவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களை போல் கேலியாக நடித்து காட்டுவதில் வல்லவர்கள். இவரது வார்த்தையை பின்பற்ற பெரிய கூட்டமே காத்திருக்கும் என்றாலும் பேச்சில் இருக்கும் வேகம் செயலில் இருக்காது. எந்த ஒரு செயலிலும் முன் யோசனை இல்லாமல் முடிவு எடுப்பார்கள். இதனால் இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் இறுதியில் குழப்பத்தில் முடியும்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: சந்திரன் 10-ஆம் இட தொடர்பானால் உணவும், கேளிக்கையும் என உற்சாகமாக பணம் சம்பாதிக்கலாம்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: சமையல துறை, செக்ஸ் வைத்தியர், கிரிமினல் வக்கீல், உலோக வியாபாரங்கள் போன்ற துறைகளில் உலா வரலாம்.
நவாம்சம் பலன்கள் – புதன்: இவர்களுக்கு எழுத்து துறையும், கமிஷன் சார்ந்த துறையும் சிறப்பாக அமையும்.
நவாம்சம் பலன்கள் – குரு: பணவரவு அதிகமாக இருக்கும். வங்கி, வட்டிக்கடை, தங்கம், வெள்ளி வியாபாரங்கள் என தாரளமாக பணம் சேர்க்க வாய்ப்புள்ளது.
நவாம்சம் பலன்கள் – சனி: காரியத்தில் முழு கருத்தாகவும், கிடைத்த வாய்ப்பினை தவற விடாமல், பிறரை இகழாமல் இருக்க வேண்டும் என முழுக்கவனத்துடன் செயல்படுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: தான் மகிழ்ச்சியாக இருந்தால் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள். மிதுன நாவம்சதில் சுக்கிரன் இருப்பவர்கள் சகலகலா வல்லவர்கள்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: ஆகாய கோட்டை கட்டி அதில் அரசராகவாழ கூடியவர்கள். மகிழ்ச்சியோ, துக்கமோ, வறுமையோ, கடனோ எதையும் மற்றவர்களிடம் மறைத்து பேசமாட்டார்கள். இதனால் இவர்களைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்து விடும்.
நவாம்சம் பலன்கள் – ராகு கேது: ராகு, கேது பத்தாம் இட தொடர்பு பெற்றதால் குருவுக்கு குறிப்பிட்ட தொழில்களே அமையும்.
2021-ம் ஆண்டிற்கான குரு வக்ர பெயர்ச்சி பலன்கள் |
நவாம்சம் பலன்கள் கடகம்:
எதிலும் பொறுமை குணம் கொண்டவர்கள். இவர்களுக்கு உடன்பிறந்தவர்களின் பெரிய உதவிகள் எதுவும் கிடைக்காது. எந்த ஒரு பிரச்சனையையும் தீர்த்து வைக்க முன் வருவார்கள். இவர்களுக்கு குடும்பத்தால் எப்போதும் கடன் வந்துகொண்டே இருக்கும். சினிமா, அரசியல் நீண்ட கஷ்டத்திற்கு பிறகு பெயர் தரும். கடக நவாம்ச பெண்கள் இயற்கையாகவே அழகானவர்கள். மேலும் எப்போதும் சுறுசுறுப்பாகவும் திறமை அதிகமாக இருக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – குரு: இன உணர்வுஅதிகம் கொண்டவர்கள்., பெற்றோர் முன் பணிவும், அடக்கமும் காட்டுவார்கள். தனக்கு தெரியாமல் மற்றவர்கள் எந்த செயலையும் செய்யக்கூடாது என்று நினைப்பவர்கள். தன்னுடைய பிரச்சனைகளை ரகசியமாக வைத்தே தீர்த்துக்கொள்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: இவர்களை வளர்ச்சி நிலைக்கு கொண்டுபோகப் பலரும் கைக்கொடுப்பார்கள். இவர்கள் திருமணம் ஒரு பரபரப்பான நிகழ்வாக அமையும். அந்தஸ்தில் ஏற்ற தாழ்வு உள்ள திருமணம் அமைய வாய்ப்பு அதிகம்.
நவாம்சம் பலன்கள் – சனி: தாய் தந்தையால் எதிர்பார்க்கும் அளவிற்கு உதவிகள் கிடைக்காது. ஏற்றத்தாழ்வு வாழ்க்கையை சந்திக்க வேண்டிய நிலை வரும்.
நவாம்சம் பலன்கள் – ராகு: மற்றவர்களுக்கு அனைத்து தகவலையும் எடுத்துரைப்பவர்கள். இவர்களுக்கு ஒவ்வாமை நோய் அடிக்கடி தொந்தரவு தரும்.
நவாம்சம் பலன்கள் – கேது: இவர்களை எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. இவர்களுக்கு சினிமா, சங்கீதம் என மேடை வாய்ப்புகள் கிடைக்கும்.
நவாம்சம் பலன்கள் சிம்மம்:
சுயமரியாதை அதிகம் உள்ளவர்கள். அரசியல் சம்பந்தமான தொடர்புகள் கிடைக்கும். கௌரவமான பதவியை அடைய கௌரவ குறைச்சலான வழிகளையும், ஆட்களையும் அணுகும் குணம் கொண்டவர். இந்த ராசி உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போன்ற பாவனை இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: தனித்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எப்போதும் தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே மனதில் நினைத்து கொண்டிருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: எந்த பொறுப்புகளையும் நிறைவேற்றி கொடுப்பவர்கள். மனதில் விரும்பியதை அடைந்தே தீருவார்கள். தன்னை நம்பி வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாமல் உதவியினை வழங்கும் பெருங்குணத்தினை கொண்டவர்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: யாரும் தன்னை புரிந்துக்கொள்ளவில்லை என்று மனதில் ஆதங்கப்படுவார்கள். உதவியை எதிர்பார்க்கும் உறவுகள் இவரின் கண்டிப்புக்கு பயந்து விலகிசெல்வார்கள்.
நவாம்சம் பலன்கள் கன்னி:
நல்ல பிள்ளைகளாக வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பவர்கள் யார் என்றால் அது கன்னி நாவம்சகாரர்கள். அதிகமாக கற்பனை திறன் கொண்டவர். புத்திசாலித்தனம் கொண்டவர். இளம் வயதிலையே இவர்களுக்கு வாகன வசதி இருக்கும். செய்யும் தொழில் நல்ல முன்னேற்றத்துக்கு வருவார்கள். தெரியாத தொழிலை செய்வதை தவிர்ப்பார்கள். குடல் சம்பந்தமான நோய்கள் பல கோளாறுகளை வரவழைக்கும். திருமணத்திற்குப் பிறகு வீடு, வாகனம், சொத்து என வரிசையாக வந்து சேரும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: மற்றவர்களிடம் லாபம், நஷ்டம் பார்த்து பேசுவார்கள். தாய்வழியை சேர்ந்த உறவினர்களால் பலன் கிடைக்கும்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: இவர்களால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. பல தொழிலை ஒரே நேரத்தில் செய்யக்கூடியவர்கள். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: வாழ்க்கையில் வளர்ச்சி நிலைக்கு வர பல முயற்சிகளை செய்து பார்ப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: எந்த ஒரு விஷயத்தினையும் எளிமையாக புரிந்துக்கொள்வார்கள். உலக நடப்பு தெரிந்தவர். ஆனாலும் எதையும் தொடர்ந்து செய்ய மாட்டார். இடத்தையும் தொழிலையும் இஷ்டப்படி மாற்றுவார்.
நவாம்சம் பலன்கள் – குரு: அதிக அறிவாற்றல் உடையவர். அனைத்து மதமும் சமம் என்று கூறுபவர்கள். இவர்களுடைய குடும்பத்தில் ஏற்படும் குழப்பம் அனைவருடைய மனதையும் திகைக்க வைக்கும்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: தகுதியில் குறைவானவர்களுக்கு பல உதவிகளை செய்வார்கள். வியாபார திறமை இயல்பாகவே இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – சனி: இளம் வயதில் மிக சாதாரணமாகவும் பாதி வயதுக்கு மேல் விறுவிறுவென உயர் நிலைக்கும் வருவார். இவரின் அனுபவமே இவரை வளர்ச்சி நிலைக்கு கொண்டு போகும்.
நவாம்சம் பலன்கள் – ராகு: எதிலும் அலட்சியம் இல்லாமல் விவரத்துடன் இருப்பார்கள். பேரம் பேசும் குணம் இவர்களிடம் இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – கேது: எப்போதும் ஒவ்வொரு முடிவுகளையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மனதில் குழப்பத்துடன் இருப்பார்கள். வசதியான வாழ்க்கை அமையும். ஆனால் நிர்வாக திறமை இல்லாமல் சொத்துகள் பலவற்றை விற்கவாய்ப்பு ஏற்படும்.
நவாம்சம் பலன்கள் துலாம்:
இவர்களுக்கு திருமணத்திற்கு பிறகு வருமானம் அதிகரிக்கும். அதற்கேற்ப செலவுகளும் அதிகரித்து காணப்படும். எதிலும் முதலீடு செய்வதற்கு மிகவும் யோசிக்கக்கூடியவர். விலை அதிகமுள்ள ஆடைகள், வாசனை பொருட்கள் போன்றவற்றை வாங்குவார்கள். சிறிது நாளிலே அதனை பயன்படுத்தமாட்டார்கள். துலாம் நவாம்ச பெண்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: எதிர்காலத்தை தெரிந்து வரும் முன் செயல்படுவார். அவர்களது விருப்பத்தின் படி வாழ்க்கையினை அமைத்துக்கொள்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையினை மாற்றிக்கொள்வார்கள். ஒருவரை நம்பி விட்டால் என்ன பிரச்சனை வந்தாலும் அந்த நபரை விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: ஒரு முறையாவது காவல் அதிகாரிகளிடம் சிக்குவார்கள். ஊர் உலகம் தன்னைப் பற்றி பேசும் படி நடந்து கொள்வார்.
நவாம்சம் பலன்கள் – புதன்: அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். படித்த பெண்ணினையே திருணம் செய்துகொள்ள விரும்புவார்கள்.
நவாம்சம் பலன்கள் – குரு: கோபம் அதிகமாக வந்து விட்டால் தன்னையே மறந்துவிடுவார்கள். பெண்களின் மூலம் நிறைய இழப்பதற்கு வாய்ப்புள்ளது.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: மற்றவர்களால் வளர்ச்சி நிலை அடைவார்கள். நன்றியை மறக்காமல் இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சனி: இவர்களுக்கு இறைவனின் நம்பிக்கையே முற்றிலுமாக கைகொடுக்கும். தீடீர் வீழ்ச்சியையும் அனுபவிப்பார்.
நவாம்சம் பலன்கள் – ராகு: துலாம் அம்ச ராகு விபத்துகளை உருவாக்குவார்கள். வரும் வருமானமானது சரியான வழியில் வராது.
நவாம்சம் பலன்கள் – கேது: ஏதேனும் ஒரு கலையில் நன்கு திறமை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் வீட்டில் இருப்பதை விட வெளியிலையே அதிகமாக இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் விருச்சிகம்:
எதிலும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். இவர்கள் பார்ப்பதற்கு குழந்தைத்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். மனதிற்குள் இருக்கும் ஆசைகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல் பழகுவார்கள். இவர்களை சீண்டாமல் இருப்பது மிகவும் நல்லது. இவர்களுக்கு வருமானம் நிலையாக இருக்காது. இவர்களிடம் பொறுமை குணமும் இருக்காது. இவர்களை நம்பி முதலீடு செய்தவர்களை வருத்தப்பட வைப்பார்கள். தலைவர் போன்று இவர்கள் இருந்தாலும் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: சுதந்திரமாக தன் போக்கில் எதையும் செய்வார். எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் மனம் தளரமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: புரட்சிகளை பற்றி பெரும்பாலும் பேசுவார்கள். உலகினை திருத்த வேண்டும் என்று முயற்சி எடுப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: சண்டைக்கோழி என்று மற்றவர்களிடம் பெயர் வாங்குவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்களை மதித்து நடக்கமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: மற்றவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள். மற்றவர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏதேனும் புதிதாக கண்டுபிடிப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: வரவுக்கு மீறிய அதிக செலவுகள் இருக்கும். இவர்களுடன் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சி நிலைக்கு செல்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – சனி: இவர்களுக்கு தன்னலம் மிகுந்து காணப்படும். பணியில் உள்ளவர்களுக்கு சனி பகவான் உயர்வுகளை கொடுப்பார்.
நவாம்சம் பலன்கள் – ராகு: இவர்களுக்கு தொல்லைகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும். எதற்கும் பணிந்து நடக்கமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – கேது: நண்பர்கள் பகைவர் ஆவார்கள். வெளியில் நடக்கும் குற்றங்களை கண்டுபிடிப்பார்கள். மற்றவர்களது பிரச்சனைகளை அறிந்து கொள்வதே இவருக்கு துன்பத்தை வர வைக்கும்.
நவாம்சம் பலன்கள் தனுசு:
மற்றவர்களிடம் சவாலினை விட்டு வெற்றி பெறக்கூடியவர்கள். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு வளர்ச்சி நிலையை அடைவார்கள். இவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. இவர்கள் தவறுகள் எதுவும் பெரிதாக செய்ய மாட்டார்கள். மற்றவர்கள் செய்த உதவியினை எப்போதும் மறக்க மாட்டார்கள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: இவர்களிடம் ஆராய்ச்சி மனப்பான்மை இருக்கும். ஏதோ ஒரு செயலை செய்துகொண்டே இருப்பார்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: இவர்களுக்கு பகைவர்கள் இருக்கமாட்டார்கள். புராண கதைகளை விரும்பி படிப்பார்கள். வரும் வருமானத்தினை அதிகமாக செலவு செய்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: தனி வழியில் நடப்பவர்கள். சோம்பேறியாக இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பார்கள். மனதில் அதிக துணிவு மிக்கவர்.
நவாம்சம் பலன்கள் – புதன்: கல்வியில் தடங்கல், பிரயானங்களில் அவதி, நஷ்டம் என இளம் வயதிலேயே பல சோதனைகளை அனுபவிப்பார். எப்போதும் மற்றவர்களை நம்பி இருக்க மாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – குரு: மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணத்தினை கொண்டவர். அறிவாளிகளுடன் சேர்ந்து காணப்படுவார்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: இவர் ஒரு வித்தியாசமான மனிதர். பல வழிகளில் பணத்தினை சம்பாதிப்பார்கள். தனுசு சுக்கிர பெண்களுக்கு திருமணத்திற்குப் பிறகு வேறு ஆண்களால் அவஸ்தைகள் ஏற்படும்.
நவாம்சம் பலன்கள் – சனி: ஆன்மீக சம்பந்தமான ஆராய்ச்சிகளை செய்வார்கள். பொது விஷயங்களில் கலந்துகொள்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – ராகு: பொது சொத்துக்களை வசப்படுத்திக் கொள்வார். பரம்பரையான நோய்கள் இவர்களுக்கு இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – கேது: இவர் கூறும் கருத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். ஆன்மீகத்தில் இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும்.
நவாம்சம் பலன்கள் மகரம்:
காலப்போக்கில் இவர்கள் உண்மையான பக்தர்களாக மாறுவார்கள். முழு நேரமும் வேலை பார்ப்பது போன்று இருப்பார்கள். ஆனால் கண்ணை மூடிக் கொண்டு தூங்குவார்.புண்ணிய ஸ்தலங்கள் செல்வார்கள். இவர்களது வீட்டிற்கு எப்போதும் விருந்தினரின் வருகை அதிகரித்து காணப்படும். விருப்பத்திற்கேற்ற வாழ்க்கை துணை அமைவார்கள். குடும்பத்தில் உள்ள நபர்களின் கடன்களை ஏற்றுக்கொள்வதால் கடனுக்கு சுமை ஆகுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆன்மீக நம்பிக்கை அதிகமாக இருக்கும். எடுத்த காரியத்தினை சிறப்பாக முடிப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: மற்றவர்களை அடக்கி ஆள முயற்சி செய்வார்கள். தொழிலதிபர் ஆவார்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: தான் பிறந்த குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்வார்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: இவர்களிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் எளிதாக வாங்கிட முடியாது. மற்றவர்களிடம் இருந்து நல்ல பெயர் எடுப்பதற்கு பொது காரியங்களை செய்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – குரு: அதிகமாக மன சோகத்துடன் இருப்பார்கள். எப்படியாவது நல்ல வேலையை பெற்றுவிடுவார். சம்பாத்தியம் வந்ததும் கஞ்சத்தனம் தலைதூக்கும்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: இவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும். பல வழிகளில் வருமானம் வரும். திருமணமானது அந்த வயதில் நடைபெறாது. காலம் கடந்து நடந்தாலும் செல்வாக்கு மிக்க இடத்திலேயே பெண் அமையும்.
நவாம்சம் பலன்கள் – சனி: உயிரை துச்சமாக நினைத்து வீர் தீர சாகசங்கள் புரிவார். பணம் பெரிய அளவில் சேர்க்க முடியாது.
நவாம்சம் பலன்கள் – ராகு: வசதி இல்லாத இடத்தில் சில காலம் வாழ்க்கையை களிக்க நேரிடும். அதிகமாக இடமாற்றம் ஏற்படும்.
நவாம்சம் பலன்கள் – கேது: கல்வி அறிவை விட சொந்த அறிவால் தொழிலில் வளர்ச்சி நிலையை அடைவார்கள். உணர்சிகளை வெளியிடாமல் மறைக்கும் சாமர்த்தியம் இருக்கும். ஒன்றினை பேசிக்கொண்டு மனதில் வேறொன்றை நினைத்து கொண்டிருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் கும்பம்:
அடுத்தது என்ன நடக்கும் என்று முன்கூட்டியே அறிந்து நடக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும். இவர்களுக்கு தனிமையே பிடிக்கும். ஆனால் எந்த ஒரு காரியத்தினையும் தனியாக செய்யமாட்டார்கள். நேர்மறை குணங்கள் கொண்டவர்கள் கும்ப நவாம்சதினர். எல்லோரிடத்திலும், எல்லா இடத்திலும் கலகலப்பாக இருக்க வேண்டும் என்பதே இவர் விருப்பம். எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியே சொல்லி விடுவார்கள். வாழ்க்கை துணைக்கு அதிகமாக மரியாதை கொடுப்பார்கள். வீடு மற்றும் வாகனம் அமையும்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: பணம் சேர்க்க கும்பத்தில் உள்ள சூரியன் உதவுவார். ஆன்மீக பக்தி அதிகமாக இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: அரசியல் பேசுவார்கள். கல்விதுறை, பயிற்சி துறை மூலம் பலன் அடைவார்கள். பாலுறவு நோய்களுக்கு ஆளாக நேரும். கவனம் தேவை.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: இவர் என்ன செய்யப் போகிறார் என்று ஒரு கூட்டமே கவனித்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு நண்பர்கள் மூலம் பல பிரச்சனைகள் வரும். நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: மற்றவர்களுடன் நெருங்கி இருக்கமாட்டார்கள். அனைத்தும் தெரிந்தது போல் நடப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – குரு: பழமையை கடைபிடிப்பார். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாட்டுடன் பேசுவார்கள். இவர்களுக்கு வருமானம் வரும் வழிகள் ரகசியமாக இருக்கும்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்கள். பெயர் எப்போதும் நிலைத்து நிற்கும்.
நவாம்சம் பலன்கள் – சனி: எந்த வகையிலும் இவர்களுக்கு வெற்றி வந்தடையும். மற்றவர்களை அனுசரித்து போகக்கூடியவர்கள்.
நவாம்சம் பலன்கள் – ராகு: எதற்கும் அச்சம் கொள்ளமாட்டார்கள். எல்லாவற்றையும் மாற்றி அமைக்க துணிந்து செய்வார்கள்.
நவாம்சம் பலன்கள் – கேது: எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். விளம்பர வகைகளும் இவர்களுக்கு கை கொடுக்கும்.
நவாம்சம் பலன்கள் மீனம்:
சுத்தமான ஆடைகளை அணிந்து பளிச்சென்று காட்சி தரக்கூடியவர்கள். குடும்பத்தில் இவர்களின் ஆலோசனை கேட்கப்படும். திருமண வாழ்க்கையானது செல்வ செழிப்பு நிறைந்த குடும்பத்தில் இருந்து பெண் அமைவார்கள். தனக்கு மரியாதை இல்லாத இடத்தில் கோடி பணம் கொடுத்தாலும் இருக்க மாட்டார்.
நவாம்சம் பலன்கள் – சூரியன்: வேண்டும் என்றே பிறர் செய்வதற்கு எதிராக செய்வார். தனக்கு பகைவரானவர்களை அழிக்க முயற்சி எடுப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சந்திரன்: வெளி உலகிற்கு உத்தமர் போன்று காட்டிக் கொள்வார். தவறுகள் நிறைய செய்யக்கூடியவர்கள்.
நவாம்சம் பலன்கள் – செவ்வாய்: இவர்களால் பலரும் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். ஒரு இடத்தில் எப்போதும் நிலையாக இருக்கமாட்டார்கள்.
நவாம்சம் பலன்கள் – புதன்: மற்றவர்களால் ஏமாற்றம் அடைவார்கள். மற்றவர்கள் இவர்களுக்கு செய்யும் தவறினை தெரிந்தும் கூட கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.
நவாம்சம் பலன்கள் – சுக்கிரன்: நல்ல உள்ளம் கொண்டவர்கள். தன்னையே மறந்து அதிகமாக செலவு செய்வார்கள். தொட்டது இவர்களுக்கு துலங்கும்.
நவாம்சம் பலன்கள் – சனி: இவரது வளர்சியை யாரும் பார்க்கமாட்டார்கள். எப்படியாவது பிரச்சனை ஏற்படுத்தி விடுவார்கள்.
நவாம்சம் பலன்கள் – ராகு: உறவு முறைகளால் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். பண பிரச்சனை ஏற்படும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.
நவாம்சம் பலன்கள் – கேது: பதவி உயர்வு கிடைக்கும். மத சார்ந்த பற்று இருக்கும்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |