பண வரவு அதிகரிக்க மந்திரம்
பணம் சேர வழிகள்: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் பணம் வர பரிகாரம் சிலவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..! சிலர் வீட்டில் பணவரவு அதிகமாக வந்தாலும் ஏதோ ஒரு வகையில் பணமானது செலவாகிக்கொண்டே இருக்கும். இதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்காலத்தினை நினைத்து மனதில் வருத்தப்பட்டு கொண்டே இருப்பார்கள். வீட்டில் பணவரவு தங்க சில பரிகார முறையை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளுவோம் வாங்க..!
வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..! |
இல்லத்தில் எப்போதும் மகிழ்ச்சி தங்க:
panam vara manthiram in tamil: ஒவ்வொரு பெளர்ணமி நாளில் காலை நேரத்தில் அரச மரத்தில் தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்றி வழிபாடு செய்த பிறகு வீட்டில் உள்ள லட்சுமி தேவிக்கு விளக்கு ஏற்றி லட்சுமி தேவிக்கான மந்திரத்தினை கூறி வழிபாடு செய்யவும். ஒவ்வொரு மாதமும் இந்த பரிகாரத்தினை தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பண பிரச்சனை நீங்கி நிம்மதி இருக்கும்.
வீட்டில் பணம் தங்க:
panam vara pariharam: வீட்டில் பணம் தங்குவதற்கு அரிசி மற்றும் மாவு வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் 5 துளசி மற்றும் 2 குங்குமப்பூ போன்றவை வைக்கவும். இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்தால் வீட்டில் பணம் அதிகரிக்கும்.
மன விருப்பம் நிறைவேற:
ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் ஒரு ரூபாய் நாணயத்தை சிறிய சிவப்பு துணியில் வைத்து கட்டி அதை ராதை கிருஷ்ணா சிலை அல்லது உங்களுக்கு பிடித்த ஏதோ ஒரு தெய்வ சிலைக்கு பின்னால் வைத்து உங்கள் மன விருப்பத்தினை இறைவனிடம் கேட்கவும். இப்படியே 41 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் மன விருப்பம் நிறைவேறும்.
வீட்டில் செல்வம் செழிக்க லட்சுமி மந்திரம்..! |
பண பிரச்சனை நீங்க:
ஒரு நல்ல நாள் அன்று அதிகாலையிலே எழுந்து நல்ல நேரத்தில் ஒரு சிவப்பு பட்டுத் துணியை எடுத்து அதில் 21 தானியம் வைத்து, நெல், சிறிது அரிசி சேர்த்து துணியுடன் கட்டுங்கள். இதற்குப் பிறகு, லட்சுமி தேவியை வணங்கி, கட்டி வைத்த பட்டு துணியை லட்சுமி தேவியிடம் வைத்து வணங்குங்கள். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய பண பிரச்சனை நீங்கிவிடும்.
வீட்டில் எதிர்மறை ஆற்றல் நீங்க:
ஆன்மீக சாஸ்திரத்தின் படி, வீட்டில் தினந்தோறும் அன்னை காளியை மனதில் நினைத்து வணங்கி, வெள்ளிக்கிழமை அன்று தவறாமல் காளி கோயிலுக்குச் சென்று விளக்கு ஏற்றி வழிபடுதல் வேண்டும். காளிக்கு உகந்த பாடலை பாடி வணங்கி வரலாம். இந்த பரிகாரத்தை செய்தால் மனதில் எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |