வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

லிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள் | Lingashtakam Lyrics in Tamil

Updated On: December 26, 2025 5:21 PM
Follow Us:
Lingashtakam Lyrics in Tamil
---Advertisement---
Advertisement

லிங்காஷ்டகம் பாடல் வரிகள் | Shiva Lingashtakam Lyrics in Tamil

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்..! வாழ்க்கையில் அனைவருமே சவால்களை கடந்து தான் வெற்றி பெறுகிறோம். அந்த சவால்களை சமாளிப்பதற்கு இறைவனுடைய அருளும் வேண்டும். சிவபெருமான் கருணை உள்ளம் அதிகம் கொண்டவர். மக்கள் கேட்கும் குறைகளை உடனே தீர்க்க கூடியவர். இறைவனுடைய அருள் மட்டும் நமக்கு கிடைத்துவிட்டால் நமது அனைத்து குறைகளும் முற்றிலும் மறைந்துவிடும்.

வாழ்க்கையில் நமக்கு நடக்கக்கூடிய அனைத்து விதமான தீய எண்ணங்கள், சவால்கள், பிரச்சனைகள் இன்றே விட்டொழிய தினமும் இந்த லிங்காஷ்டமம் பாடல் வரிகளை பாடினால் அனைத்து கஷ்டங்களும் பறந்தோடும். ஓகே வாங்க பிரண்ட்ஸ் லிங்காஷ்டகம் பாடல் (lingashtakam lyrics in tamil) வரிகளை படிப்போம்..

சாய்பாபா ஆரத்தி பாடல் வரிகள்

லிங்காஷ்டகம் பாடல் தமிழில் | Lingashtakam Lyrics in Tamil

Lingashtakam  Lyrics Uses in tamil

1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப்ப விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

4. கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்
தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

சிவபுராணம் பாடல் வரிகள்

5. குங்குமசந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தி பிரேவச லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்
லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள
சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே

Lingashtakam  Lyrics Uses:

மனிதனாக பிறந்த அனைவருக்கும் வாழ்க்கையானது இன்பம் துனபம் கலந்ததாக தான் இருக்கும். அதில் நீங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் இப்படி தைரியமாக செயல்படுவதற்கு கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். அப்படி உங்களுக்கு சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றால் தினமும் இந்த லிங்காஷ்டக பாடல்களை கூறி வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கு வரும் பிரச்சனைகளை தைரியமாக செய்வீர்கள் என்று ஆன்மிகத்தில் கூறப்படுகிறது.

மேலும் இந்த பாடாய் தினமும் கூறுவதன் மூலம் இறந்த பிறகு சிவலோகத்தை அடையலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இந்த பாடலை தினமும் கூறி வாருங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now