நீங்கள் நாய்களுக்கு உணவு அளிப்பீர்களா..! அப்படி என்றால் இதை தெரிந்துகொள்ளுங்கள்.!

Advertisement

நாய்க்கு உணவு அளித்தால் என்ன பலன்

வணக்கம் நண்பர்களே.! பெரும்பாலானவர்கள் வீட்டில் நாய் செல்லப்பிராணியாகவே இருக்கிறது. நாய்கள் வளர்ப்பதற்கு மிகவும் விரும்புகிறார்கள். இன்னும் சிலர் வீட்டில் ஆன்மிக அடிப்படையில் நாய் வளர்த்தால் நல்லது என்று வளர்ப்பார்கள். நாய்கள் வளர்க்கிற வீட்டில் நாய்களுக்கு உணவு அளிப்பீர்கள். நாய்கள் வளர்க்காத வீட்டில் தெரு நாய்களுக்கு உணவு அளிப்பார்கள். இது போல் நாய்களுக்கு உணவு அளிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒ பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் தெரியுமா?

நாய்களுக்கு உணவு அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

ஜோதிடத்தின் படி நாய் பைரவருடைய விலங்காக இருக்கிறது. நாய்களுக்கு உணவு அளிப்பதால் உங்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கும். மேலும் நீங்கள் செய்யும் செயல்களில் ஏற்படும் கஷ்டங்களும் நீங்கி உங்களது வாழ்க்கையில் நன்மைகள் நடக்கும்.

நீங்கள் செய்யும் செயல்களில் முன்னேற்றம் ஏற்படும். அதுமட்டுமில்லாமல் உங்களின் மேல் உள்ள கண் திருஷ்டி நீங்கும்.

நீங்கள் நாய்க்கு தேய்பிறை அஷ்டமியில் உணவு அளிப்பது மிகவும் நல்ல பலன்களை தரும். மேலும் தினமும் இரவில் வெல்லத்தை சிறிதளவு சாதத்தில் கலந்து கொடுத்தால் உங்களின் முன் வினை பாவங்கள் நீங்கும்.

நீங்கள் வளர்க்கும் நாய்க்கு உணவளிப்பது உங்களின் கடமை. அதனால் மேல் கூறப்பட்டுள்ள எந்த பலன்களும் கிடைக்காது. அதுவே தெரு நாய்களுக்கு உணவளிப்பது மிகவும் நல்ல பலன்களை கொடுக்கும். மேல் கூறப்பட்டுள்ள பலன்கள் எல்லாம் கிடைக்க தெரு நாய்களுக்கு உணவு அளியுங்கள். அதுவும் இரவு நேரத்தில் உணவு அளிப்பது மிகவும் சிறந்தது.

அதுமட்டுமில்லாமல் நாய்களுக்கு கெட்ட சக்திகளை கணிக்க கூடியது. நீங்கள் நடந்து கொண்டிருக்கும் போது விஷ பூச்சிகள் வந்தாலும் நாய் குழைக்கும். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் திரும்பி பார்த்து உஷார் ஆகுவீர்கள். அதனால் நீங்கள் ஒரு முறை தெரு நாய்களுக்கு உணவு அளித்து பாருங்கள். காலம் முழுவதும் உங்களுக்கு துணையாக இருக்கும்.

நாய்களுக்கு கொடுக்க கூடாத உணவுகள்:

கடவுளின் வாகனமாக கருதப்படுவதால் எக்காரணத்தை கொண்டும் அசைவ உணவுகளை கொடுக்காதீர்கள். சைவ உணவுகளை கொடுப்பது நல்லது.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement