Can The Husband Fast On The New Moon While Pregnant
இன்றைய ஆன்மிகம் பதிவு பொதுநலம் பதிவின் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாம் வாழும் இந்த அவசர உலகம் அந்த காலத்தை விட எவ்வளவோ மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக இருக்கிறது. இன்றைய நிலையில் பலரும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதுபோல நாம் ஒரு விஷயம் செய்ய போகிறோம் என்றால் அதற்கு நல்ல நாள் பார்த்து தான் செய்வோம்.
உதாரணத்திற்கு நாம் இப்பொழுது ஒரு தொழில் தொடங்க போகிறோம் என்றால் அந்த நாள் நல்ல நாளா, அந்த நாளில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா, அன்று பௌர்ணமியா என்று பல விஷயங்களை பார்த்து தான் செய்வோம். அதுபோல மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா..? இதற்கான பதிலை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? |
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா..?
பொதுவாக இந்து சமய மக்கள் மாதம் மாதம் கடைபிடிக்கும் விரதங்களில் அமாவாசை விரதமும் ஓன்று. அமாவாசை விரதம் எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்று நம் அனைவருக்குமே தெரியும். மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நாளை தான் நாம் அமாவாசை என்று சொல்கின்றோம்.
என்னதான் அமாவாசை மாதம் மாதம் தவறாமல் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலும் அந்த நாளில் சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள். அதுபோல பலருக்கும் அமாவாசை அன்று இதை செய்யலாமா, இந்த தொழில் தொடங்கலாமா என்று பல கேள்விகள் இருக்கும். அப்படி அனைவருக்கும் இருக்கும் கேள்விகளில் இதுவும் ஓன்று.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் இருக்கலாமா என்பது பலருக்கும் இருக்கும் கேள்வியாகும். அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை அன்று முன்னோர்களுக்காக விரதம் இருக்கலாம். அதில் ஒன்றும் தவறு இல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அதனால் மனைவியின் கர்ப்ப காலத்தில் கணவன் அமாவாசை விரதத்தை கடைபிடிக்கலாம்.கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்..? |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |