கடன் பிரச்சனை வராமல் இருக்க வெள்ளி கிழமையில் இந்த செயல்களை செய்யாதீர்கள்..!

Advertisement

வெள்ளிக்கிழமை செய்யக்கூடாதவை

ஆன்மிக நண்பர்களுக்கு வணக்கம்..! உங்களுக்கு கடன் பிரச்சனை வந்து கொண்டே இருந்தால் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். உங்கள் வீட்டில் கடன் இல்லாமல் பணம் மழை பொழிய வெள்ளிக்கிழமைகளில் இந்த தவறுகளை செய்யாதீர்கள். நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்வார்கள் பொழுது போன நேரத்தில்பால், தயிர், அரிசி போன்றவை கொடுக்க கூடாது என்று சொல்வார்கள். ஏன் சொல்கிறார்கள் என்று தெரியுமா.? எதற்கு சொல்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களை திட்டுவோம். திட்டுறோதடு இல்லாமல் அவர்களுக்கு தெரியாமல் பொருட்களை கொடுப்போம். வெள்ளிள்கிழமைகளில் எந்தெந்த செயல்களை செய்யலாம், செய்ய கூடாது என்று படித்து தெரிந்துகொள்வோம்.

மகாலட்சுமி வீட்டில் தங்குவதற்கு என்ன செய்ய வேண்டும்:

வீட்டில் மகாலட்சுமி தங்குவதற்கு வெள்ளிக்கிழமையில் உப்பு, அரிசி, தானியங்கள் போன்றவை புதிதாக வாங்கலாம். வெள்ளிக்கிழமையில் வீட்டில் நெய் விளக்கு ஏற்றுவது நல்லது. விளக்கு ஏற்றி கடவுளுக்கு ஏற்ற பாடல்களை பாடலாம். இதனால் பணவரவு கிடைக்கும்.

வீட்டில் ஒட்டடை:

வீட்டில் ஒட்டடை அதிகமாக இருந்தாலே கடன் பிரச்சனை ஏற்படும். வெள்ளிக்கிழமை அன்று ஒட்டடை மற்றும் வீடு துடைக்க கூடாது. வெள்ளிக்கிழமை அன்று வீடு துடைத்தல் மற்றும் ஒட்டடை அடித்தல் போன்ற செயல்களை செய்வது வீட்டில் உள்ள மகாலட்சுமியை வெளியில் போ என்று சொல்வதற்கு  சமம் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் வெள்ளிக்கிழமையை தவிர மற்ற நாட்களில் இந்த செயல்களை செய்யுங்கள்.

துணி துவைக்கும் பெண்கள்:

வெள்ளிக்கிழமையில் வீட்டை சுத்தப்படுத்துவது, துணியை துவைப்பது போன்ற செயல்கள் செய்ய கூடாது. இன்னும் சொல்ல போனால் அழுக்கு துணியே வெள்ளிக்கிழமையில் இருக்க கூடாது. இப்படி இருந்தால் கடன் பிரச்சனை அதிகரிக்கும். அதனால் வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் இந்த செயல்களை செய்து விடுங்கள்.

எண்ணெய் தேய்த்து குளிப்பது:

வெள்ளிக்கிழமை அன்று ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது, முடி வெட்டுவது போன்ற செயல்கள் செய்ய கூடாது. இப்படி செய்தால் கடன் பிரச்சனை ஏற்படும். பெண்கள் வெள்ளிக்கிழமையன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது.

அதிக செல்வம்:

பசும்பால், வலம்புரி சங்கு, துளசி, தேன், செந்தாமரை, வெண்தாமரை போன்ற பொருட்களை பூஜை அறையில் வைத்து வழிபடுவது செல்வதை அதிகரிக்க செய்யும். ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் பெண்கள் தினமும் அதிகாலை அல்லது மாலை நேரத்தில் வாசிக்கலாம் அல்லது கேட்கலாம் இது போல் செய்வதனால் வீட்டின் செல்வ நிலை அதிகரிக்கும்.

விரதம் இருக்கும் நாட்கள்:

வெள்ளிக்கிழமையில் விரதம் இருப்பது நல்லது. ஏன்னென்றால் வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கும், குபேரனுக்கும் ஏற்ற நாள். இதனால் வீட்டில் கடன் பிரச்சனை இல்லாமல் செல்வம் அதிகரிக்கும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement