பசு மாட்டுக்கு அகத்திக்கீரை | Benefits of Giving Agathi Keerai to Cow
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பாசு மாட்டிற்கு ஏன் அகத்திக்கீரை கொடுக்கிறார்கள் என்று தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். பொதுவாகவே எல்லாரும் விரதம் இருந்தால் காகத்திற்கு உணவு அளிப்பார்கள், அதேபோல் நாய்களுக்கும் உணவு அளிப்பார்கள். பிற உயிரினங்களுக்கு உதவி செய்தும் வருவார்கள்.
குறிப்பாக அமாவாசை நாட்களில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது வழக்கம். இது எதனால் கொடுக்கிறோம் என்றே தெரியாமல் பசுமாட்டிற்கு அகத்திக்கீரையை உணவாக அளித்து வருகிறோம். பசு மாட்டுக்கு அகத்திக்கீரை கொடுப்பதற்கான காரணம் என்ன என்பதே நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. ஆகையால், அதனை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, அமாவாசை நாளில், பசுவிற்கு ஏன் அகத்திக்கீரை தருகிறார்கள் என்பதை விவரித்துள்ளோம்.
மகாளய அமாவாசை வழிபாடு |
பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன்?
பொதுவாகவே வீட்டில் வளர்க்கும் பசுக்கள் மற்றும் ரோட்டு ஓரங்களில் நிற்கும் பசுக்களுக்கும், பண்ணைகளில் இருக்கும் பாசுக்களுக்கும் அகத்திக்கீரையை கொடுத்து வருகிறார்கள். பொதுவாகவே ஜீவ பிராணிகளுக்கு எல்லா நாட்களிலும் உணவு கொடுப்பதுதான் மிகவும் நல்லது. ஒரு சிலர்கள் அம்மாவாசை மட்டும் மாடுகளுக்கு அகத்திக்கீரையை கொடுக்கிறார்கள்.
அமாவாசையில் மாடுகளுக்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வாழைப்பழம் கொடுப்பதற்கு காரணம் என்ன தெரியுமா, இறந்து போன முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அன்றைய காலகட்டத்தில் நம் முன்னோர்கள் பசு மாட்டிற்கு அகத்திக்கீரையை கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இப்படி அமாவாசையில் செய்வதால் வீட்டில் ஏற்படும் கஷ்டம், திருமண தடை, குழந்தை இன்மை போன்ற தடைகள் எல்லாம் நீங்கி வாழ்க்கையில் சிறந்து வாழ்வதற்காக முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.இவை அம்மாவசையில் மட்டும் செய்யவேண்டும் என்று அவசியமில்லை, மாத பிறப்புகளான சித்திரை, வைகாசி இந்த மாறி இருக்க கூடிய முதல் மாதத்தில் பசுவிற்கு அகத்திக்கீரை, பச்சரிசி, வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்து வரலாம்.
அதேபோல் பசுமாட்டிற்கு அருகம்புல் கொடுப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும். ஒரு பிடி அளவிற்கு அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுப்பதால் ப்ரம்மஹத்தி என்னும் தோஷம் நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அப்படி இல்லையென்றால் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களில் அகத்திக்கீரை பசுவிற்கு கொடுக்கலாம். இவை எல்லாம் செய்வதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி பசுமாடுகளை வளர்ப்பதிலும், அதை பாதுகாப்பதாலும் பல நன்மைகளும், புண்ணியங்களும் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. எல்லா ஜீவராசிகளுக்கும் கருணை காட்டுவது நல்லது. தாய்க்கு அடுத்ததாக பால் தருவது நமக்கு பசு என்பதால் அதை பாதுகாப்பது மிகவும் நல்லது என்றும் சொல்லப்படுகிறது.
எனவே இத்தகைய காரணங்களால் நீங்கள் செல்லும் இடங்களில் உள்ள சாலைகள், ரோட்டில் இருக்கும் மாடுகளுக்கு அகத்திகீரையே அல்லது உங்களால் முடிந்த பழங்களை பசுமாட்டிற்கு கொடுத்து வாருங்கள்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |