இசைத்தமிழ் நீ செய்த பாடல் வரிகள் | Isai Thamizh Nee Seitha Ragam
ஆன்மீக அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இசைத்தமிழ் நீ செய்த பாடல் வரிகள் திருவிளையாடல் சிவனை போற்றி பாடிய பாடல். இந்த பாடல் பாடாத சிவன் கோவில்கள் இல்லை. நீ இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை இறைவா… என்ற வரிகளை கேக்கும் பொழுது இறைவனிடம் நம் குறைகளை சொல்லி உரையாடுவது போல இருக்கும். ஒரு சிலர் சிவனை வணங்கும் போது இந்த பாடி வாங்குவார்கள். இந்த பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். வாங்க இந்த பாடல் வரிகளை படித்து தெரிந்துகொள்வோம்.
இசைத்தமிழ் நீ செய்த பாடல் பாடியவர்:
இசைத்தமிழ் நீ செய்த பாடலை எழுதியவர்: கவிஞர் கண்ணதாசன்.
இசைத்தமிழ் நீ செய்த பாடலை பாடியவர்: T.R. மஹாலிங்கம்
இந்த பாடலுக்கு இசை அமைத்தவர்: K.V. மஹாதேவன்.
திருவாசகம் பாடல் வரிகள் |
இசைத்தமிழ் நீ செய்த பாடல் வரிகள் | Isai Thamizh Nee Seitha Song:
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை
வசை வருமே பாண்டி நாட்டினிலே இறைவா ஆ… ஆ..
வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
வசை வருமே பாண்டி நாட்டினிலே – குழலி
மணவாளனே உனது வீட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே
உயிர் மயக்கம் நாதப் பாட்டினிலே – வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ – வெற்றி
ஒருவனுக்கோ மதுரைத் தமிழனுக்கோ
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா…
வலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ – மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட உன்னை
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?
பேசும் தமிழ் அழைத்தும் வாராதிருப்பதென்ன?..
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா…
லிங்காஷ்டகம் தமிழ் பாடல் வரிகள் |
தாய்க்கொரு பழி நேர்ந்தால் மகர்க்கில்லையோ – அன்னை
தமிழுக்குப் பழி நேர்ந்தால் உனக்கில்லையோ
வேருக்கு நீரூற்றி விளைக்கின்ற தலைவா – உன்
ஊருக்குப் பழி நேர்ந்தால் உனக்கின்றி எனக்கில்லை
உனக்கின்றி எனக்கில்லை உனக்கின்றி எனக்கில்லை…..
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை – நீ
இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை – இறைவா…
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |