9 சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் கடன் பிரச்சனை காணாமல் போய்விடும்..!

Kadan Prachanai Neenga

Kadan Prachanai Neenga

இன்றைய ஆன்மிகம் பதிவில் கடன் பிரச்சனை காணாமல் போக என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கடன் என்பது அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, மருத்துவ செலவு போன்ற பலவற்றிற்காக மக்கள் கடன் வாங்குகிறார்கள். அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் பலரும் கஷ்டப்படுகிறார்கள். அப்படி இருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இதனை மட்டும் செய்தால் போதும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனை தீர்ந்துவிடும்..!

கடன் தொல்லை நீங்க: 

கடன் தொல்லை நீங்க

கடன் வாங்காதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. இன்றைய நிலையில் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை வைத்து வாங்கிய கடனை தான் அடைகிறார்கள். அதுபோல சிலர் சம்பாதிக்கும் பணம் கடன் அடைக்கவே சரியாக இருக்கிறது என்றும் புலம்புவார்கள்.

அதுபோல கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் பெருமாளை வணங்கி வாருங்கள். எல்லா சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வணங்கி வரலாம். இதனால் எப்பேர்ப்பட்ட கடன் பிரச்சனையும் நீங்கும். அதுபோல பணவரவும் அதிகரிக்கும்.

கடன் தொல்லை நீங்க பரிகாரம்:

கடன் பிரச்சனை தீர

வீட்டில் இருக்கும் கடன் தொல்லை நீங்க 9 வாரங்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதால் 1 ரூபாய் கூட கடன் இல்லாமல் தீர்ந்து விடும்.

முதலில் வெள்ளி அல்லது செம்புக் கலசத்தை எடுத்து கொள்ளுங்கள். அந்த கலசம் சுத்தமாக இருக்க வேண்டும். பின் அந்த கலசத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும்.

அதுபோல ஒரு தட்டு வைத்து அதன் மேல் தான் கலசத்தை வைக்க வேண்டும். பின் அந்த கலசம் மற்றும் தட்டு இரண்டிலும் மஞ்சள் தடவி குங்கும பொட்டு வைக்க வேண்டும்.

பின் அந்த கலசத்தை சுற்றி துளசி அல்லது வாசனை மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அடுத்து ஒரு வெள்ளை துணி மற்றும் வெள்ளை நூலை எடுத்து மஞ்சள் கலந்த நீரில் நனைத்து கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்திலிருந்து உங்களால் முடிந்த தொகையை அந்த கலசத்திற்குள் போட வேண்டும். நீங்கள் போடும் தொகை 100 ரூபாயாகவும் இருக்கலாம். 500 ரூபாயாகவும் இருக்கலாம்.

தொகையை கலசத்திற்குள் போட்ட பிறகு கலசத்தை மஞ்சள் துணியை வைத்து மூடி நூலை வைத்து இறுக்கமாக கட்ட வேண்டும். பின் இந்த கலசத்தை பூஜை அறையில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

இதுபோல 9 சனிக்கிழமைகளில் இந்த கலசத்தை வைத்து பூஜை செய்து 9 ஆவது சனி கிழமையில் கலசத்தில் இருக்கும் காணிக்கையை பெருமாள் கோவில் உண்டியலில் போட வேண்டும். 

இந்த பரிகாரத்தை செய்தால் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சனை நீங்கி செல்வ வளம் பெருகும். பணவரவு அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள் => கடன் பிரச்சனை தீர வீட்டில் தண்ணீரை இப்படி வையுங்கள்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்