காகம் எச்சம் பலன் | காகம் எச்சமிட்டு விட்டதா அதற்கு என்ன அர்த்தம்
வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் காகம் எச்சில் நம் மீது பட்டால் என்ன பலன் என்று தெரிந்துகொள்ள போகிறோம். நாம் அவசரமாக வெளியில் செல்வதற்கு கிளம்பி வரும் போது திடீரென காகம் எச்சில் இட்டு விடும். இதை அனைவரும் அனுபவித்து இருப்பீர்கள்.
அதற்கு உடனே அனைவரும் காகத்தை உனக்கு வேறு வேலை இல்லையா என்று திட்டுவது பழக்கமான ஒன்று. ஆனால் காகம் எதனால் நம் மீது எச்சில் இடுகிறது..? இதற்கு என்ன பலன் என்று யாரும் யோசிப்பது இல்லை. காகம் எச்சம் நம் மீது பட்டால் நல்லதா.! கெட்டதா.! என்று இந்த பதிவை முழுமையாக தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ எந்த பறவை வீட்டிற்குள் வந்தால் மிகவும் அதிர்ஷ்டம் உங்களுக்கு தெரியுமா..?
காகம் எச்சம் நம் மீது பட்டால் நல்லதா.! கெட்டதா.! | Kaka Echam Palangal in Tamil:
நாம் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்குவதற்குள் காகத்தை பார்க்காமல் இருக்க முடியாது. எல்லாரும் தினமும் அதை பார்கின்றனர். அதுபோல கருப்பாக உள்ள ஒரு மனிதரை திட்டுவதற்கு காக்கை போல கருப்பாக இருக்கிறாய் என்று சொல்வது பழக்கம்.
இந்த காகம் சனீஸ்வர பகவானின் வாகனமாக காணப்படுகிறது.
அத்தைகய காகம் மற்ற பறவைகளை விட அதிக திறமை வாய்ந்தது. அது மட்டும் இல்லாமல் எதிர் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என மூன்று காலங்களையும் அறியும் திறன் கொண்டுள்ளது.
திதி நாட்களில் காகத்திற்கு சாப்பாடு வைத்த பிறகு அனைவரும் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அந்த நாட்களில் காகம் சாப்பிட்டால் தான் நம் முன்னோர்களின் ஆசீர்வாதம் நமக்கு கிடைக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
- அப்படிப்பட்ட காகத்தின் எச்சில் நம் மீது பட்டால் அது நன்மை தரக்கூடிய பலனாக இருக்கிறது என்று சாஸ்திரத்தில் சொல்கிறார்கள்.
- நாம் வெளியில் செல்லும் போது காகம் எச்சில் நம் மீது பட்டால் நமக்கு வரப் போகும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.
- காகம் நமக்கு வரப்போகும் ஆபத்துகளை முன் கூட்டியே அறிந்து அதில் இருந்து விடுபடுவதற்காக தான் காகம் நம் மீது எச்சில் இடுகிறது.
- அப்படி காகம் எச்சில் இடும் போது சிறிது நேரம் அமர்ந்து விட்டு அதன் பிறகு உங்களது வேலையை பார்க்க வேண்டும்.
- இனி உங்கள் மீது காகம் எச்சம் பட்டால் என்ன பலன் என்று பயப்பட வேண்டாம். அது உங்களுக்கு மிகவும் நன்மை தான்.
காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |