வீட்டின் முன் காகம் கரைந்தால்
காகம் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்காத பறவையாக இருக்கிறது. ஆனால் இந்த காகத்தை நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அதிகமாக வணங்கி வரும் ஒரு பறவையாகவும் இருக்கிறது. பொதுவாக அமாவாசை அன்று காக்கைக்கு உணவளிப்பது இறந்து போனவர்களுக்காக உணவளிப்பது என்று சொல்லப்படுகிறது. இப்படி நாம் தெய்வமாக வணங்கி வரும் காகம் நம் வீட்டில் காகம் கத்தினால் உறவினர்கள் வர போகிறார்கள் என்று சொல்வார்கள். காகம் கரைவதால் நல்ல சகுனமும் இருக்கும், கெட்ட சகுனமும் இருக்கும். வாங்க இந்த பதிவில் காகம் கரைந்தால் என்ன பலன் என்று இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வீட்டின் முன் காகம் கரைந்தால் உறவினர்கள் வருவார்களா.!
வீட்டின் முன் காகம் கரைந்தால் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று முன்னோர்கள் வருவார்கள் என்று சொல்வார்கள். இதில் உண்மையா.! பொய்யா என்று தெரிந்து கொள்வோம் வாங்க.
நம் முன்னோர்கள் காலத்தில் வணிகம் செய்வதற்கு கடல் தாண்டி செல்வர்களாம். அப்படி செல்லும் போது ஒரு காக்காவையும் அழைத்து செல்வர்களாம். ஏன் காக்காவை அழைத்து போகிறார்கள் என்றால் வணிகத்தை முடித்துவிட்டு வரும் போது கடலுக்குள் திசை தெரியாமல் போகும். அப்போது காக்காவை பறக்க விடுவார்களாம். அப்படி காக்கா எந்த திசையை நோக்கி செல்கிறதோ அந்த திசையை நோக்கி பயணிப்பார்கள். காக்கா பறந்து போகும் திசையில் உள்ள மக்கள் கடல் தாண்டி விருந்தாளிகள் வருவார்கள் என்று நினைத்து கொள்வார்கள்.காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்?
காகம் கரைந்தால் என்ன பலன்:
காக்காவிற்கு நம் வீட்டில் நடக்க போவதை அறிய கூடிய திறன் உண்டாம். காக்கா வீட்டில் கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் நன்மைகள் நடக்க போகிறது என்று அர்த்தம்.சில நேரங்களில் வெளியே செல்லும் போது காகம் எச்சம் விடும். இப்படி எச்சம் விட்டால் உங்களுக்கு ஏதோ ஒரு தீமை நடக்க போகிறது என்பதாகி உணர்த்துகிறது. காகம் வீட்டில் கத்தும் போது உணவு வையுங்கள்.
காகம் நம் வீட்டில் கிழக்கு திசையில் கத்தினால் நாம் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்பபடுகிறது. உங்கள் முயற்சியின் மூலம் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
எந்த திசையில் காகம் கத்தினால் என்ன பலன் கிடைக்கும்..?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |