காகம் கரையும் பலன்கள் | Kagam Palangal
Kagam Palangal:- காகங்கள் மனிதர்களுடைய பித்துருக்கள் என்று சொல்வார்கள். இறந்த நம் முன்னோர்கள் காகங்களின் வடிவில் தான் இருப்பார்கள் என்று பலரும் சொல்வதுண்டு. இதன் காரணங்களினால் தான் அம்மாவாசை மற்றும் அவர்களுடைய நினைவு நாட்களில், இறந்து போன நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களுக்கு எச்சில் படாமல் சமைத்து பட்டியலிட்டு அந்த படையலை காகத்திற்கு வைப்பார்கள்.
காகம் மனிதர்களுடைய ஒற்றுமைகளை விளக்குகின்ற ஒரு பறவை என்று கூறலாம். உணவுகளை பகிர்ந்துண்டு இந்த பறவைகள் மனிதர்களுக்கு ஏற்படும் நன்மை மற்றும் தீமைகளை தனது சகுனம் மூலம் மனிதர்களுக்கு கூறும் ஒரு பறவை என்றும் கூறலாம்.
சரி இந்த பதிவில் காகம் காட்டும் சகுனம் பற்றி தெரிந்துகொள்ளலாமா..?
காகம் பலன்கள்:-
- காகம் ஒருவருடைய வாகனம், குடை, காலணி அல்லது உடலில் மீது தனது சிறகால் தீண்டினால் அவர்களுக்கு அகால மரணம் ஏற்படும்.
- தாங்கள் எங்காவது பயணம் செல்லும் பொழுது உங்கள் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் தங்களுடைய பயணத்தை தவிர்க்கவேண்டும்.
- காகம் இன்னொரு காகத்திற்கு உணவு பகிரும் காட்சியினை பார்ப்பது மிகவும் இனிமையான செயலை குறிக்கின்ற சகுனமாகும்.
- காகம் பூக்கள், பழங்கள், ஏதாவது ரத்தின கற்களை தங்கள் வீட்டில் போட்டுவிட்டு சென்றால் அவர்கள் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும்.
- கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண் குழந்தை பிறக்கும்.
- மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும்.
- வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.
- சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும்.
- காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் அரசாங்க ஆதரவு, நண்பர் சேர்க்கை, தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.
காகம் கரையும் திசை பலன்கள் / kagam karaiyum palangal:-
- அதேபோல் காகம் தங்கள் எதிரில் வலப்புறமிருந்து இடதுபுறம் பறந்து சென்றால் லாபம் கிடைக்கும்.
- அதுவே இடதுபுறம் இருந்து, வலதுபுறம் பறந்து சென்றால் நஷ்டம் உண்டாகும் என்று பொருளாகும்.
- அதேபோல் காகம் தங்கள் வீட்டில் இருந்து தென்கிழக்கு திசையை நோக்கி கத்துகின்றது என்றால் தங்களுக்கு தங்க லாபம் கிடைக்க போகிறது என்று அர்த்தமாகும்.
- காகம் தென்மேற்கு திசை நோக்கி கரைகிறது என்றால் தயிர், எண்ணெய் மற்றும் உணவு அல்லது உணவு சம்மந்தமான பொருட்களில் லாபம் கிடைக்க போகின்றது என்ற சகுனமாகும்.
- மேற்கு திசை நோக்கி காகம் கரைகிறது என்றால் மது, நெல், முத்து, பவளம் மற்றும் கடல்விளை பொருட்கள் ஆகியவற்றில் அதிக லாபம் கிடைக்கபோகின்றது என்ற அர்த்தமாகும்.
- வடக்கு திசையை நோக்கி காகம் கரைகின்றது என்றால் ஆடைகள் அல்லது ஏதாவது ஒரு வாகனம் வாங்கபோகின்றீர்கள் என்ற சகுனமாகும்.
காகம் தலையில் தட்டினால் என்ன காரணம்? |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |