வீட்டில் கல் உப்பை இந்த இடத்தில் வைத்துப் பாருங்கள் உங்கள் வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வரும்..!

வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வருவதற்கு இதை செய்யுங்கள்..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய ஆன்மிக பதிவில் உங்கள் வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். நம்மில் பலரும் நமது வீட்டைத்தேடி எப்படி அதிர்ஷ்டத்தை வர வைப்பது என்பதை பற்றி சிந்தித்து பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பீர்கள். ஆனால் அவையாவும் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், பணவரவையும் அதிகரிக்க உதவாமல் கைவிட்டிருந்தால் பரவாயில்லை. இன்றைய பதிவில் கூறியுள்ள குறிப்புகளை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்:

athirstam vara tamil

நமது வீட்டைத்தேடி அதிர்ஷ்டம் வரவைப்பதற்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் என்னவென்றால் கல் உப்பு தான். ஆம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் கல் உப்பை வைத்துதான் அதிர்ஷ்டத்தை நமது வீடுதேடி வரவைக்க போகின்றோம் அது எப்படி என்றுதானே யோசிக்கிறீர்கள். வாங்க எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

கல் உப்பை நமது வீட்டில் சில குறிப்பிட்ட இடங்களில் வைப்பதால் அதற்கென  தனித்துவமான சக்தி கிடைக்கிறது அதனால் நமது வீடுதேடி அதிர்ஷ்டத்தை வரவைக்க உதவுகின்றது.

இதையும் படியுங்கள் ⇒ உங்கள் வீட்டில் செல்வம் பெறுக வெள்ளிக்கிழமை கல் உப்பு வாங்கினால் போதும்..!

கல் உப்பை வைக்க வேண்டிய முறை மற்றும் இடங்கள்: 

பொதுவாக வீடுகளில் கல் உப்பை வாங்கி வைக்கும்போது அதனை கண்ணாடி ஜாடியில், பீங்கான் ஜாடியில் அல்லது மண் ஜாடியில் கொட்டிவைப்பதுதான் நல்லது.

முதலில் கல் உப்பு எடுத்துக் கொள்ளுங்கள் அது நீங்கள் உங்கள் வீட்டு பயன்பாட்டிற்காக புதிதாக வாங்கி வைத்திருக்கிறீர்கள் என்றால் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் புதிதாக கடையில் இருந்து வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்:1

நீங்கள் புதிதாய் வாங்கி வைத்த சிறிதளவு கல் உப்பை  ஒரு சிறிய கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.  கல் உப்பின்  மீது மஞ்சள் மற்றும் குங்குமம் ஆகிய இரண்டையும் பொட்டு போல வைத்து கொள்ளுங்கள். இப்பொழுது இதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

அதேபோல் சிறிதளவு கல் உப்பை எடுத்து ஒரு சிறிய கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் சேர்த்து கொள்ளுங்கள். அதனை உங்கள் வீட்டின் குளியல் அறையில் தண்ணீர் படாத அளவுக்கு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி வைப்பதால் உங்களிடம் உள்ள அனைத்து எதிர்மறை அதிர்வுகள் எல்லாம் நீங்கும்.

ஸ்டேப்:3

அடுத்து அதேபோல் சிறிதளவு கல் உப்பை எடுத்து ஒரு சிறிய கண்ணாடி பாத்திரம் அல்லது மண் பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி அதன் மீது சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து உங்கள் வீட்டின் வடகிழக்கு மூளை அல்லது தென்மேற்கு மூளையில் கொஞ்சம் உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த தண்ணீரை வாரத்திற்கு ஒரு முறை மாற்றிக் கொண்டே இருங்கள். அப்படி செய்வதால் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து எதிர்மறை அதிர்வுகள் எல்லாம் நீங்கும்.

மேலே கூறிய குறிப்புகளை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஹோரை எனப்படும் காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் செய்யுங்கள். இந்த குறிப்புகளை தொடர்ந்து செய்து பாருங்கள் உங்கள் வீடுதேடி அதிர்ஷ்டம் வருவதை நீங்களே காணலாம்.

இதையும் படியுங்கள் => சுக்கிர ஹோரையில் கல் உப்பை தொட்டால் இத்தனை மகிமையா?

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்