கழுகுமலை முருகன் கோவில் வரலாறு..! Kalugumalai Murugan Temple History In Tamil..!
Kalugumalai Vettuvan Temple: பொதுநலம்.காம் பதிவில் கழுகுமலை வெட்டுவான் கோவிலின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை பற்றி பார்க்க போகிறோம். இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் அதிமதுர பாண்டிய மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது என்கிறார்கள். இந்த கோவிலின் சிறப்பு தலை கீழாக கட்டப்பட்டவை ஆகும். சரி வாங்க இந்த கழுகுமலை கோவிலின் முழு வரலாறு பற்றிய விவரங்களை விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
மகா சிவராத்திரி வரலாறு..! Maha Shivaratri History..! |
கழுகுமலை வெட்டுவான் கோவில் வரலாறு:
கழுகுமலை வெட்டுவான் கோவில்(kalugumalai temple) தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி எனும் வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் 8 ஆம் நூற்றாண்டில் அதிமதுர பாண்டிய மன்னர்களால் இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கழுகுமலை கோவில் இன்றும் தமிழ்நாட்டில் சிறந்து விளங்குகிறது. கழுகுமலை கோவிலை “எல்லோரா” என்று மற்றொரு பெயராலும் சிறப்புமிக்க கூறுகிறார்கள்.
கழுகுமலை வெட்டுவான் கோயில் சிறப்பம்சம்:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோவில் கற்களும் ஒன்றன் மீது ஒன்றன் கற்கள் வைத்து சிற்பிகள் கட்டியிருப்பார்கள். மற்றொன்று குகை போன்று கோவிலை குடைந்து கட்டுவார்கள்.
ஆனால் இந்த கோவிலின் சிறப்பு கற்களை மேலே இருந்து கீழே செதுக்கி தலை கீழாக இந்த கோவிலை கட்டியுள்ளனர். ஒரே பாறையால் வெட்டப்பட்டுள்ளதால் இந்த கோவிலை அனைவரும் “வெட்டுவான் கோவில்” என்றே அழைத்தனர்.
கோவிலில் காணப்படும் சிலைகள்:
இந்த கோவில் கோபுரத்தில் நான்கு புறத்திலும் நந்தி சிலைகளும், அடுத்து சிவன் பார்வதி, முருகன், பிரம்மன், விஷ்ணு. தக்ஷிணாமூர்த்தி போன்ற சிலைகள் இந்த கோவிலில் சிற்பமாக தோன்றுகிறது.
குறிப்பாக கோவில் முன் பகுதியில் பார்வதியும், சிவனும் அமர்ந்திருக்கும் சிலை பார்ப்பவர்களுக்கு கண்கள் கவர்ச்சியாக இருக்கும். சமண மதத்தில் ஜெய்ன மதம் என்று சொல்லக்கூடிய சமண மதம் 24 தீர்த்தங்கரின் சிற்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 24 ஆம் தீர்த்தங்கரான மஹாவீர் என்பவருக்கு தனி சிலைகளும் வைக்கப்பட்டு உள்ளது.
சாரங்கபாணி கோவில் தல சிறப்புகள்..! Sarangapani Temple History In Tamil..! |
கழுகுமலை கோவில் கல்வெட்டுகள்:
இந்த கோவிலில் வட்ட எழுத்து கல்வெட்டுகள், பாண்டிய மன்னர்களின் மீன் சின்னங்களும் இந்த கோவிலில் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளது.
வணங்கி வந்த தெய்வங்கள்:
சிவபெருமான், பார்வதி, முருகன், தெக்ஷிணாமூர்த்தி, இந்திரன் போன்ற கடவுளை போலே இந்த புத்த பெருமான், தீர்த்தங்கரை வணங்கி வந்துள்ளனர்.
அதிமதுர பாண்டியன் வரலாறு:
அதிமதுர பாண்டிய மன்னன் இந்த கழுகுமலை பகுதியை ஒரு காலத்தில் ஆட்சி செய்து வந்துள்ளார். இந்த கோவிலை “உவணம் கிரி” என்று சிறப்பாக அழைத்து வருகின்றனர். உவணம் என்பதற்கு “கழுகு” கிரி என்பதற்கு ” மலை என்பதும் பொருள்.
இந்த பகுதியை அதிமதுர பாண்டிய மன்னன் வேட்டையாடி வந்தான். வேட்டையாடி அயர்ந்து போன பிறகு ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுக்க வந்தான். அப்போது ஒரு பாறையின் பகுதியில் ஒரு மாடு தானாகவே மாடு பால் சுரந்துகொண்டு இருந்தது.
அதை பார்த்ததும் அதிமதுர பாண்டியன் மிகவும் அதிர்ச்சி அடைந்தான். மாட்டின் அருகில் சென்றதும் மாடு விலகி சென்றுவிட்டது. அந்த பகுதியில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு கனவு ஒன்று நேரியது. அவருடைய கனவில் முருகன் தனக்கு இந்த பகுதியில் கோவில் அமைக்கும்படி முருகன் கூறுகிறார்.
அதனையடுத்து பாண்டிய மன்னன் இந்த பகுதியில் பாறையை தோண்ட ஆரமிக்கிறார். அந்த சமயத்தில் மயிலின் மேல் முருகன் இருப்பது போல் ஒரு சிலை இருக்கிறது. அதை பார்த்து பாண்டிய மன்னன் ஆச்சரியப்பட்டான். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கழுகுமலை கோவிலை எழுப்பி அந்த பகுதியை பெரிய நகரமாக மாற்றி அமைத்தான் அதிமதுர மன்னன்.
தாமிரச்சத்து நிறைந்த தெப்ப நீர்:
இந்த கழுகுமலை கோவில் மலையில் நடு பகுதியில் குடைந்து கட்டியிருக்கிறார்கள். ஒரே கல்லின் மீது மிக நுணுக்கமாக செதுக்கிய கோவிலாகும். இந்த கோவிலின் அருகிலே பாண்டிய மன்னர்கள் தெப்பத்தை செதுக்கியிருக்கிறார்கள்.
மழை பெய்து கீழே வரும் மழை நீர் தெப்பத்தினுள் வந்தடையும். இந்த தெப்ப நீரில் தாமிரச்சத்து அடங்கியுள்ளது. அதனால் தாமிரச்சத்து நீரை அருந்தினால் நமது உடல் மிகவும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
பங்குனி திருவிழா:
கழுகுமலை கோவிலில் வருடா வருடம் பங்குனி மாதத்தில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெரும். இந்த திருவிழாவில் பாண்டிய வம்சத்தில் பிறந்த மன்னர்களுக்கு தனி மரியாதை அளிக்கப்படும்.
பங்குனி மாத திருவிழா, மன்னர்கள் மட்டுமே இந்த தேரினை இழுத்து செல்வார்கள். கெச்சிலாபுரம், கழுகுமலை, சங்கரலிங்கபுரம், ஆலங்குளத்தினை சேர்ந்தவர்கள் மட்டும் தேரினை தொடங்கி முடித்து வைப்பார்கள். இந்த திருவிழாக்கள் இன்றும் அங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தேரின் சிற்பம்:
இந்த கழுகுமலை கோவில் தேரினில் தேவேந்திரனின் சிற்பம், நான்கு குதிரைகள் இந்த தேரினில் இருக்கும். தேவேந்திரன் தொட்டால்தான் இந்த தேர் ஓடும் என்பது வழக்கம். இந்த கோவில் 25 நிலங்களை கொண்டுள்ளது.
இந்த கோவில் நிர்வாகத்தை ஆதிகாலத்தில் இருந்து பாதுகாத்து வந்தவர்கள் பாண்டிய மன்னர்கள் ஆவர். அந்நியர்கள் படைக்கு பின்னர் அவர்களின் கைக்கு சென்றது இந்த கோவில் பொறுப்பு. இப்போது இந்த கோவில் தமிழ்நாடு அரசு மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் பொறுப்பில் உள்ளது கழுகுமலை கோவில்.
கழுகுமலை கோவிலில் உள்ள புத்தர், தீர்த்தங்கரர் போன்ற சிலைகள் எல்லோரா கோவிலிலும் புத்தரின் சிலை முதன்மையாக வைக்கப்பட்டு உள்ளது.
எல்லோரா கோவில்:
எல்லோரா கோவிலிலும் “இந்திரசபை” என்று தனியாக சபை நிறுவப்பட்டது. இந்த எல்லோரா கோவிலில் இந்திரன், இராவணன், சிவன் போன்றவர்களின் சிலைகள் இன்றும் வைக்கப்பட்டு உள்ளது.
கழுகுமலை மற்றும் எல்லோரா கோவிலை ஒரே வம்சத்தை சார்ந்தவர்களால் கட்டப்பட்டுள்ளது என்றும் பலர் கூறுகிறார்கள். ஏனென்றால் இந்த இரண்டு கோவிலுமே ஒரே மாதிரியான செதுக்கங்களை கொண்டுள்ளதால் இப்பெயர் வந்துள்ளது.
எல்லோரா கோவிலை கட்டியவர்:
இந்த எல்லோரா கோவிலை மகாராஷ்டிராவை ஆண்ட ராஷ்டிர வம்சத்தினை சார்ந்த “முதலாம் கிருஷ்ணன்” என்ற அரசனால் இந்த எல்லோரா கோவிலானது கட்டப்பட்டது.
நான்கு லட்சம் டன் கற்களை அகற்றி 18 ஆண்டுகளில் எல்லோரா கோவில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது இந்த கோவிலை கட்டுவதற்கு 100 ஆண்டுக்கும் மேல் ஆகும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஒரே கல்லில் செதுக்கிய கழுகுமலை கோவில் இன்றும் முழுமை பெறவில்லை. இதன் காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
புத்தர் வரலாறு:
இந்த கோவிலில் இருக்கும் புத்தர் மள்ளர் பிரிவினை சார்ந்தவர் ஆவர். புத்தர் நேபாள நாட்டில் “லும்பினி” என்ற இடத்தில் பிறந்தவர். நேபாள நாட்டினை புத்த மதம் மள்ளர் வம்சத்தினை சார்ந்தவர்கள் 2 நூற்றாண்டுக்கு முன்புவரை இந்த நாட்டினை ஆண்டு வந்திருக்கின்றனர்.
நேபாள நாட்டின் தலைநகராகிய காத்மண்டில் மள்ளர்கள் கட்டி வந்த கோட்டைகள் முக்கியமான கோவில்களாக இன்றும் கருதப்படுகிறது.
Srirangam Temple..! ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் தல வரலாறு..! Sri Ranganathaswamy Temple..! |
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |