கும்ப ராசிக்கு பொருத்தமான ராசி எது தெரியுமா..?

Advertisement

Suitable Zodiac Sign For Aquarius in Tamil | கும்ப ராசிக்கு எந்த ராசி பொருந்தும் | Kumbam Matching Rasi

வணக்கம் ஆன்மீக நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் 12 ராசிகளில் 11- வது ராசியாக இடம் பெற்றுள்ள கும்பராசிக்கு பொருத்தமான ராசி எது என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். கும்ப ராசி அவிட்டம், சத்யம், பூரட்டாதி என்ற மூன்று நட்சத்திரங்கள் அடங்கிய ஒரு ராசி. அந்த கும்ப ராசிக்காரர் எப்போதும் குடும்பத்தின் மீது அதிக அன்பு கொண்டவராகவும் மற்றவர்கள் மதித்து அனுசரித்து செல்பவராகவும் இருப்பார்கள். அதிக உழைப்பு மூலம் முன்னேற்றம் அடைய கூடியவர்கள். இத்தனை குணம் படைத்த கும்ப ராசிகாரர்களுக்கு வாழ்க்கையில் எந்த ராசிக்கார்கள் வாழ்க்கை துணையாக வருவார்கள் என்பதை தொடரை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ துலாம் ராசிக்காரர்களுக்கு பொருத்தமான ராசிகள் எது          தெரியுமா.?

கும்ப ராசிக்கு பொருத்தமான ராசி எது? | Kumbam Rasi Matching Rasi for Marriage in Tamil:

ஒரு குடம் போன்ற வடிவத்தில் உள்ள இந்த கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் நேர்மையுடன் செயல்படுவார்கள். குடத்தில் என்ன இருக்கும் என்பது வெளி தோற்றத்தை வைத்து முடிவு செய்ய முடியாது.

அதுபோல தான் இந்த கும்ப ராசிக்காரரையும் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. 10 நிமிடம் பேசிய பிறகு தான் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

ஆனால் கும்ப ராசிக்காரர்கள் நிறைய திறைமைகளை வெளிகாட்டமால் அதற்கான நேரம் வரும் வரை காத்திருப்பார்கள். சிலருக்கு அதற்கான தூண்டுகோல் கொடுப்பதற்கு யாரும் இல்லாததால் அந்த திறமைகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.

இத்தகைய குணம் கொண்ட இந்த கும்ப ராசிக்கார்கள் வாழ்க்கையில் எந்த ராசிக்காரரை திருமணம் செய்தால் நல்லது என்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கும்ப ராசியில் பிறந்த ஆண்:

கும்ப ராசியில் பிறந்த ஆணுக்கு சிம்ம ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்வது என்பது திருமண பொருத்தம் சிறப்பானதாக இருக்கும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது.

இந்த ராசிக்காரர் மேஷம், மீனம் இந்த ராசிக்காரரையும் திருமண செய்து கொள்ளலாம். அதனால் அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்ப ராசியில் பிறந்த பெண்:

கும்ப ராசியில் பிறந்த பெண்ணுக்கு மிதுனம், கன்னி, துலாம் இந்த ராசியில் உள்ள ஆண்கள் பொருத்தமானவர்களாக இருப்பார்கள். அவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கும்ப ராசியில் பிறந்த ஆண், பெண் இருபாலருக்கும் ரிஷிப ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி இந்த இரண்டு ராசிக்காரர்களும் பொருத்தமானவராக இருப்பார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement