Left Hand Astrology in Tamil
உங்கள் கைகளை வைத்தே உங்கள் குணாதிசயங்களை அறியலாம். அதேபோல் உங்கள் உடல் நலத்தை பற்றியும் அறிய முடியும். மேலும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் குறித்தும் அறியலாம். இரு கைகளில் இடது கை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது. உங்களது எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டம் மற்றும் உங்களை பற்றிய ரகசியங்களை பற்றியும் உங்கள் இடது கை மூலம் தெரிந்துகொள்ள முடியும். இடது கையை வைத்து ஒருவரது தனிப்பட்ட வாழ்வில் எப்படிப்பட்டவர் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். சரி இந்த பதிவில் உங்கள் இடது கை உங்களை பற்றி என்ன சொல்கிறது என்பதை பற்றி அறியலாம் வாங்க.
உங்கள் இடது கை உங்களை பற்றி சொல்லும்!!!
ஒருவருடைய இடது கையில் இருக்கும் ஆள்காட்டி விரலை விட மோதிர விரல் பெரியதாக இருந்தால், அதாவது நீளமாக இருந்தால், உங்களுக்கு இயற்கையாகவே தலைமை பண்பு இருக்கும். மேலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் மிகவும் உறுதியானவர்களாக இருப்பீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்கள் கை ஓட்டை கையா என்பதை கண்டறிவது எப்படி? மேலும் அதற்க்கான பலன்கள்..!
இடது கையில் இருக்கும் ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட பெரியதாக இருந்தால், நீங்கள் அனைவரிடமும் நேர்மையாக இருப்பீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு அனைவருமே முக்கியத்துவம் தருவார்கள்.
உங்கள் இடது கையில் இருக்கும் நடுவிரல் எந்த ஒரு வளைவுகளும் இன்றி நேராக இருந்தால், உங்களுக்கு நிறைய புரிதல் உணர்வு இருக்கும். இதனால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை எளிதில் புரிந்துகொள்வீர்கள். அதேபோல் நேர்மையாக இருப்பீர்கள்.
இடது கையில் இருக்கும் மோதிர விரலை விட ஆள்காட்டி விரல் பெரியதாக இருந்தால். உங்களுக்கு நிறைய படைப்பாற்றல் இருக்கும். நீங்கள் ஒரே மாதிரியான விஷயங்களை செய்ய விரும்ப மாட்டீர்கள். ஒவ்வொரு முறையும் புதிய புதிய விஷயங்களை செய்ய விரும்புவீர்கள்.
உங்களுடைய சிறு விரல்மோதிர விரலை விட ஒல்லியாக இருந்தால், நீங்கள் சமூகத்தில் தனித்துவமாக சிறந்து விளங்குவீர்கள். இதனால் நீங்கள் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மீது அடிக்கடி கோபம் கொள்வீர்கள். மேலும் நீங்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க விரும்புவீர்கள்.
உங்கள் இடது கை பார்ப்பதற்கு மிருதுவாக மற்றும் தொடுவதற்கு மென்மையாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும். இந்த ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் தனி நபராக நீங்கள் இருப்பீர்கள்.
இடது கையில் உள்ள ரேகைகள் தெளிவாக மற்றும் அழுத்தமாக இருந்தால் உங்களுக்கு தனித்துவமான திறமைகள் நிறைந்து இருக்கும். மேலும் மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் சிறந்த அனுபவசாலியாக நீங்கள் இருப்பீர்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உங்களின் கட்டை விரல் இப்படி உள்ளதா..? அப்படினா நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |