Lord Shiva Abhishekam Items and Benefits in Tamil
இன்றைய காலகட்டம் எவ்வளவு மாறி இருந்தாலும் இன்றைய சூழலிலும் மாறாமல் இருப்பது ஆன்மிகம் மட்டும் தான். இன்றைய சூழலிலும் நமக்கு ஒரு மனக்கவலையோ அல்லது வருத்தமோ இருந்தால் உடனடியாக ஆலயத்திற்கு செல்வோம். அப்படி நமது பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் கடவுள்களில் ஒருவரான சிவபெருமானின் அபிஷேகத்திற்கு எந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை வாங்கி தருவதன் மூலம், உங்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்கி உங்களின் வாழ்க்கை முன்னேற்ற பாதை நோக்கி செல்லும் என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> நாளை சனிப்பிரதோஷத்தில் இந்த பொருளை கோயிலுக்கு வாங்கிக் கொடுத்தால் சொந்த வீடு வாங்கும் யோகம் வரும்
Shiva Abhishekam Items and Benefits in Tamil:
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு எந்த பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் மஞ்சள் பொடி தான். இதனை வாங்கி தருவதன் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக நல்ல நட்பு கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு எந்த பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் திரவிய பொடி தான். இந்த திரவிய பொடியை வாங்கி தருவதில் மூலம் உங்களுக்கு ஏதாவது நாள்பட்ட தீராத நோய் இருந்தால் அது நீங்கும். மேலும் உங்களின் குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் எந்த பொருளை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தர வேண்டும் என்றால் அரிசி மாவு பொடி தான். நீங்கள் இந்த அரிசி மாவு பொடியை வாங்கி தருவதன் மூலம் உங்களுக்கு உள்ள அனைத்து கடன்களும் தீர்ந்து செல்வம் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் எந்த அபிஷேக பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் பசும் பால் தான். நீங்கள் பசும் பாலை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதன் மூலம் உங்களுக்கு நீண்ட ஆயுள் கிட்டும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> மகா சிவராத்திரி அன்று 10 ரூபாய் செலவு செய்து இந்த பொருட்களை வாங்குனீர்கள் என்றால் தீராத கடனும் தீர்ந்து விடும்
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் எந்த அபிஷேக பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் பசுந்தயிர் தான். இதனை வாங்கி தருவதன் மூலம் உங்களுக்கு பிள்ளைவரம் கிட்டும் மற்றும் சந்ததி வளரும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு எந்த பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் பஞ்சாமிர்தம் அல்லது தேன் தான். பஞ்சாமிர்தத்தை வாங்கி தருவதன் மூலம் நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் நீங்கள் தொட்ட காரியம் துலங்கும்.
நீங்கள் தேனை வாங்கி தருவதன் மூலம் பிள்ளைவரம் கிட்டும் மற்றும் சந்ததி வளரும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் சிவபெருமானின் அபிஷேகத்திற்கு எந்த பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் இளநீர் தான். நீங்கள் இளநீரை வாங்கி தருவதால் உங்களின் சந்ததி வளரும் மற்றும் உங்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
விருச்சிகம்:
துலாம் ராசிக்காரர்கள் எந்த அபிஷேக பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் பழச்சாறு தான். இதனை நீங்கள் வாங்கி தருவதால் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியம் கிட்டும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=>வீட்டில் வில்வ மரம் வளர்க்கலாமா வளர்க்க கூடாதா
தனுசு:
தனுசு ராசிக்காரர்கள் வாங்கி தர வேண்டிய அபிஷேக பொருள் என்னவென்றால் விபூதி தான். நீங்கள் இந்த விபூதியை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதன் மூலம் உங்களின் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் எந்த அபிஷேக பொருளை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தர வேண்டும் என்றால் பன்னீர் தான். இதனை நீங்கள் வாங்கி தருவதால் உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் எந்த அபிஷேக பொருளை வாங்கி தர வேண்டும் என்றால் வில்வ இலை தான். நீங்கள் வில்வ இலையை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதால் உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்கள் வாங்கி தரவேண்டிய அபிஷேக பொருள் என்னவென்றால் சந்தனம் தான். சந்தனத்தை சிவபெருமானின் அபிஷேகத்திற்கு வாங்கி தருவதால் உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு எந்தவித பொருளாதார பிரச்சனையும் ஏற்படாது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> பிரதோஷம் வகைகள்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |