மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள் எப்படி இருக்கும்..?

Advertisement

மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் பலன்கள்..!  

ஹலோ பொதுநலம்.காம் பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் மகர ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.  ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ராசி இருக்கும். அதுபோல ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் இருக்கும்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்க போவது மகர ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்… செவ்வாயை அதிபதியாக கொண்ட நட்சத்திரங்களில் 3 ஆவது நட்சத்திரம் அவிட்டம். அவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் கடக ராசி பூசம் நட்சத்திரம் வாழ்க்கை பலன்கள்..! 

மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் குணங்கள்:

மகர ராசி அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பல வகை திறமைகளை கொண்டவர்களாக இருப்பார்கள். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றலை கொண்டவர்களாக இருப்பார்கள். தன்னுடைய முயற்சியால் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தவிடு கூட தங்கம் ஆகும் அளவிற்கு அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவிட்டம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனித்து இயங்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரம் சனியின் ராசி வீடுகள் என்பதால் இந்த ராசியில் பிறந்தவர்கள் விடாமுயற்சியும் உறுதியும் கொண்டவர்களாக இருப்பார்கள். மென்மையான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுத்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடத்திலும் மரியாதையுடன் பழகுவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தனித்து வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எளிமையாக வாழவேண்டும் என்று நினைப்பர்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆசைகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். தாராள மனப்பான்மையும் அதிகம் செலவுகள் செய்பவர்களாக இருப்பார்கள். கஷ்டபடுபவர்களுக்கு இரக்கப்பட்டு உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். அனைவரிடத்திலும் அன்புடன் பழகும் உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் துலாம் ராசி குணங்கள்

அவிட்டம் நட்சத்திரம் திருமண வாழ்க்கை:

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதலித்து திருமணம் செய்யவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காதல் செய்தாலும் பெற்றோர்களின் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வார்கள். பெற்ற பிள்ளைகளின் வளர்ச்சியால் மகிழ்ச்சி அடைவார்கள். தங்கள் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு அதிகம் இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரியவைகள்:

அதிதேவதைகள் – அனந்த சயன பெருமாள் மற்றும் அஷ்ட வசுக்கள்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உரியவைகள்
அதிதேவதைகள் அனந்த சயன பெருமாள்
அஷ்ட வசுக்கள்
பரிகார தெய்வம் முருகன்
உகந்த மலர் செண்பக மலர்
விருட்சம் வன்னி மரம்
அதிர்ஷ்ட மிருகம் பெண் சிங்கம்
அதிர்ஷ்ட பறவை வண்டு

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement