Life Quotes in Tamil | வாழ்க்கை பற்றிய கவிதை
கவிதை என்றாலே எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இதனை படிப்பதற்கு பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. கவிதை என்றாலே அழகு தான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கவிதைகளை ரசிப்பார்கள். சிலர் இயற்கை பற்றிய கவிதையை படிக்கும் போது ரசிப்பார்கள். சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களை பற்றிய கவிதைகளை எழுதுவதற்கும் சரி, படிப்பதற்கும் சரி ஆர்வமாக இருப்பார்கள். நம் வாழ்வில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அதை சமாளித்து வாழவேண்டும். இன்று இருக்கும் நிலை நாளை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அதனால் எதை பற்றியும் கவலை படக்கூடாது. இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி, அதை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இருந்தால் வாழ்க்கை அழகானதாக இருக்கும். இந்த பதிவில் வாழ்க்கை பற்றிய கவிதை வரிகளை அறிந்து கொள்வோம் வாங்க..
Short Life Quotes in Tamil:
அன்பை தருபவர்களை விட
அனுபவத்தை தருபவர்கள் தான்
வாழ்க்கையில் அதிகம்
Life Quotes in Tamil for Students:
அன்று உனக்காக சிரித்தவர்கள்,
இன்று உனக்காக அழுதால்..
நீ வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமானது
Short Life Quotes in Tamil for Students:
ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்காத பாடத்தை
வாழ்க்கை கற்றுக்கொடுக்கும்
அந்த பாடத்தை கற்க மறுத்தால்
வாழ்க்கை கடினமாகும்
Deep Short Life Quotes in Tamil for Students:
கடலில் கல் எறிந்தால்,
கடலுக்கு வலிப்பதில்லை மாறாக,
கல் தான் காணாமல் போகும்..
அதுபோல, வாழ்வில் விமர்சனங்கள் வந்தால்..
கடலாக இருங்கள், வலிகள் காணாமல் போகும்
Happy Life Quotes in Tamil for Students:
வாழ்க்கையை வாழும் போதே ரசித்து வாழுங்கள்
ஏனென்றால் எப்போது எதை இழப்போம்
என்பது நமக்கே தெரியாது
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |