மருதாணி போட்டால் ஒரு வாரம் உங்களை எமன் நெருங்க மாட்டாரா ..!

Advertisement

மருதாணி போட்டால் உங்களை எமன் நெருங்க மாட்டாரா | எமனிடம் வரம் பெற்ற மருதாணி

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க. இன்றைய ஆன்மிக தகவலில் நாம் பார்க்க போவது நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த மருதாணியை பற்றி தான் பார்க்க போகிறோம். மருதாணி போடுவதால் எமன் நம்மை நெருங்க மாட்டராம்..! அது எப்படி என்றுதானே யோசிக்கிரீகள். இந்த பதிவினை முழுதாக படித்தால் உங்களுக்கே புரியும்.சரி வாங்க பதிவினுள் செல்லலாம். 

மருதாணி பெற்ற வரங்கள்:

நம் அனைவருக்கும் மருதாணி போடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அழகுக்காக போடும் மருதாணிக்கு எமன்,சீதாதேவி,சனிபகவான்,சுக்கிரபாகவன் போன்ற பல தெய்வங்கள் வரம் அளித்திருக்கிறார்கள் அதை பற்றி பார்க்கலாம்.

மருதாணி எமனிடம் பெற்ற வரம்:

கிரேதயுகத்தில் மருதவாசினி என்ற ஒரு பெண் மருதவனம் என்ற காட்டில் வாழ்ந்து வந்திருக்காள் அவள் பருக மிகவும் அழகாகவும் மிகவும் பார்க்க சிகப்பாகவும் மிக வசிகரமாகவும் இருந்திரிகிறாள் அவளுக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் சூரியபகவானையே தன்னோட  தாய் தந்தையாக எண்ணிக்கொண்டு வாழ்ந்து வந்திருக்காள். சூரியதேவனுக்கு எமன் மற்றும் சனிபகவான் என்று இரண்டு மகன்கள் அதில் முதல் மகனான எமனின் மனைவியின் பெயர் சமலாதேவி இவருக்கு ஐயோ என்று இன்னொரு பெயரும் உண்டு. 

இவர் ஒருமுறை எமனிடம் சண்டைபோட்டு கொண்டு பூலோகத்தில் உள்ள இந்த மருதவாசினி வாழும் மருதவனத்திற்கு வந்திருக்கிறார்கள் அப்பொழுது அவரை பார்த்த மருதவாசினி அவர் யார் என்ற முழுவிவரத்தைக் கூட கேட்காமல் அவருக்கு ஆறுதல் கூறி தான் வாழும் குடிலுக்கு அழைத்து சென்று தங்கவைத்து அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்து நன்கு பார்த்துக்கொண்டாள். இந்நிலையில் எமலோகத்தில் எமதர்மன் தன்னுடைய மனைவியை பிரிந்து இருக்க முடியாமல் தன்னுடைய எமதூதர்களை அழைத்து பூலோகத்திற்கு சென்று என்னுடைய மனைவியை அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டார்.

அதன்படி எமதூதர்கள் பூலோகத்திற்கு சென்று பல இடங்களில் சமலாதேவியை தேடி அலைந்து கடைசியில் சமலாதேவி இருக்கும் இடத்தை கண்டுபிடித்த எமதூதர்கள் அவரை அழைத்து செல்லுவதற்காக அவர் இருந்த குடிலுக்குள் செல்லுவதற்கு முயற்சித்தனர் அப்போது அவர்களை பார்த்த மருதவாசினி பயந்து தன்னுடைய விருந்தாளிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்று எண்ணிய அவள் அவர்களை தடுத்தாள் அப்போது அந்த எமதூதர்களுக்கு கோபம்வந்து அவளை கொடூரமாக வெட்டிவிட்டார்கள். மருதவாசினியின் உடலிருந்து இரத்தம் பீறிட்டு ஆறுபோல் ஓட அவளின் கூக்குரல் கேட்டு குடிலினுள் இருந்த சமலாதேவியை வெளியேவந்து பார்த்துவிட்டு அழுத்திருக்கிறாள். 

திருமணங்களில் மருதாணி போடுவது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?

இவரின் அழுகுரலை கேட்டு எமதர்மன்,சூரியபகவான்,சனிபகவான் அனைவரும் பூலோகத்திற்கு வந்து விட்டார்கள் அவர்களிடம் சமலாதேவி நடந்த அனைத்தையும் கூறினார் இந்த காட்டில் தனியாக அரவணைப்பு  இல்லாமல் கவலையாக இருந்த எனக்கு இந்த பெண் தான் அடைக்கலம் தந்து பாதுகாப்பாக வைத்திருந்தால் அவளை உங்களுடை இந்த எமதூதர்கள் கொன்றுவிட்டார்களே.

இவளுக்கு திரும்ப உயிர் கொடுத்து வரமளித்தால்தான் நான் திரும்ப உங்களுடன் எமலோகத்திற்கு வருவேன் இல்லையென்றால் இனி எப்பொழுதும் திரும்ப வரமாட்டேன் என்று கூறியிருக்கிறார்கள். அதற்கு எமன் உடனே எனக்கு ஒரு உயிரை எடுக்கத்தான் உரிமை இருக்கு திரும்ப உயிரை கொடுக்க அனுமதி இல்லை வேணுமென்றல் அவளின் இரத்த துளிகளில் இருந்து மகத்துவம் வாய்ந்த மருதாணி மரமாக மாற்றுகிறேன் என்று அருள் புரிந்திருக்கிறார்.

அப்பொழுது அந்த மரத்திடம் நடந்த அனைத்திற்கும் மன்னிப்பு கேட்டு உனக்கு என்ன வரம் வேண்டுமோ நீ கேளு நான் அளிக்கிறேன் என்று கூறுகின்றார். அதற்கு அந்த மருதவாசினி நான் சூரியபகவானைத்தான் என்னுடைய தாய்,தந்தையாக நினைத்து கொண்டு வாழ்ந்து வந்தேன் அந்தவகையில் நீங்களும் சனிபகவானும் எனக்கு சகோதரர்கள் பொதுவாக உங்களினாலும் உங்களின் தூதர்களினாலும் அனைவருக்கும் தீமைதான் நடக்கின்றது அதனால் என்னுடைய மரத்தின் இலைகளை யார் அரைத்து பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்கு இறப்பே நேரக்கூடாதுயென்று வரம் கேட்கிறாள் அதற்கு எமதர்மன் பிறப்பும் இறப்பும் உலக நியதி அதனால் அதை மற்ற முடியாது நீ வேறு ஏதும் வரம் கேளு என்கின்றார்.

அதற்கு மருதவாசினி சரி என்னுடைய இலையை பறித்து பயன்படுத்துபவர்களுக்கு 6 நாள் வரைக்கும் மரணம் நேரக்கூடாது என்ற வரத்தை கேட்டிருக்கிறாள் அதற்கு எமனும் அந்த வரத்தை அளித்திருக்கிறார். அதனுடன் அடுத்த யூகத்திலிருந்து மகாலெக்ஷிமியே உன்னிடம் வாசம் செய்வார்கள் என்ற இன்னொரு வரத்தையும் அளித்திருக்கின்றார். மேலும் சனிபகவானும் உன்னை பயன்படுத்துவர்களுக்கு என்னால் எந்த கெடுதலும் நேராது என்னுடை பார்வை அவர்களின் மீது விழாது என்று வரம் அளித்திருக்கின்றார்.

இந்த மருதாணியை அரைத்து வைத்தால் 6 நாள் வரைக்கு மட்டும் நல்ல கலரா தெரியும் அது என்னயென்றால் அந்த ஆறு நாளைக்கு நம்மளுக்கு எந்த கெடுதலும் நடக்காது என்று நம்பப்படுகிறது. மருதாணின் விதைகளை சம்பிராணியோடு சேர்த்து போட்டுவந்தால் அவர்களை எமதூதர்களோ மற்ற எந்த தீய சக்தியும் நெருங்காது என்று கூறப்படுகின்றது.மருதாணின் பூக்களை பறித்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் நிம்மதியான தூக்கம் வரும் என்று கூறப்படுகின்றது.

மருதாணி கனவில் வந்தால்

உங்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வரலாம் மருதாணியில் மகாலெட்சுமி வாசம் செய்கிறார் என்றால் அதை ஏன் காலில்யெல்லாம் வைக்கிறார்கள் என்று பொதுவாக சனிபகவான் காலிருந்துதான் பிடிப்பார் என்று கூறப்படுகின்றது.அதனால் யார் ஒருத்தர் மருதாணியை அரைத்து காலில் போடுகிறாரோ அவருக்கு சனிபகவானால் எந்தவித தீமையும் நிகழாது என்று நம்பப்படுகிறது.

இந்த மருதாணியை பற்றி ஆன்மிகத்தில் மட்டும் பெருமையாக கூறவில்லை அறிவியலிலும் கூறப்படுகிறது மருதாணி ஒரு சிறந்த கிருமிநாசினியாகும். நாம் அதனை நகத்தை சுற்றி அரைத்து தொப்பிபோல் வைத்தால் எந்தவித கிருமியும் நமலிடம் நெருங்காது என்று கூறப்படுகின்றது. மேலே கூறிய அனைத்து பலனும் மருதாணி மரத்திலிருந்து இலையை பறித்து அரைத்து பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தான். மஹாலெக்ஷிமி வாழும் இந்த மருதாணி செடியை அனைவரும் வீட்டிலே வளர்த்து பயன் பெறுங்கள்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement