உங்கள் நகத்தில் வெள்ளை புள்ளி இருக்கிறதா அப்போ உங்களின் அதிர்ஷ்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement

நகத்தில் வெள்ளை

வணக்கம் ஆன்மிகம் நண்பர்களே.! நகத்தில் வெள்ளை புள்ளி பலருக்கும் மாதத்தில் ஒரு முறையாவது தோன்றி விடும். இந்த வெள்ளை புள்ளி தோன்றினால் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒழுங்காக சாப்பிட வேண்டும் சத்து குறைபாட்டினால் வருகிறது என்று சொல்வார்கள். இந்த மாதிரி வெள்ளை புள்ளி தோன்றுவதை வைத்து அவர்களுக்கு நடக்க கூடிய அதிர்ஷ்டத்தை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கட்டை விரலில் வெள்ளை புள்ளி வந்தால்: 

கட்டை விரலில் புள்ளி ஏற்பட்டால் உங்களுக்கு பிடித்தமானவர்  நீங்கள் எதிர்பார்க்காத பரிசு அல்லது  விலை உயர்ந்த பொருட்களை வாங்கி தந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.

இதையும் படியுங்கள் ⇒ கையை இப்படி முறுக்கிறீங்களா..! அப்போ நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள்

சுண்டி விரலில் வெள்ளை புள்ளி வந்தால்:

சுண்டி விரலில் வெள்ளை புள்ளி தோன்றினால் நீங்கள் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள் என்று அர்த்தம். இந்த பயணம் உங்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை கொடுக்கும்.

மோதிர விரலில் வெள்ளை புள்ளி இருந்தால்:

உங்கள் கைகளின் மோதிர விரலில் வெள்ளை புள்ளி தோன்றினால் லட்சுமி கடாட்சம் நிறைந்ததாக கருதப்படுகிறது. மேலும் நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் உங்களுக்கு வாழ்க்கை துணை கிடைப்பதை உணர்த்தும். அதுமட்டுமில்லாமல் பணத்திற்கு பஞ்சமே இருக்காது என்பதையும் சொல்கிறது.

நடுவிரலில் வெள்ளை புள்ளி இருந்தால்:

நடுவிரலில் வெள்ளை புள்ளி ஏற்பட்டால் உங்களுக்கு தீங்கு ஏற்படுவதை குறிக்கிறது. மேலும் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திலும் கவனமாக இருக்க வேண்டும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் உங்களின் கூட இருப்பவர்களிடம் பார்த்து பழக வேண்டும். இவர்களால் கூட உங்களுக்கு ஆபத்து ஏற்படலாம்.

ஆள்காட்டி விரலில் வெள்ளை புள்ளி வந்தால்:

உங்கள் கைகளின் விரலில் ஆள்காட்டி விரலில் வெள்ளை புள்ளி ஏற்பட்டால் நண்பர்கள் புதிதாக கிடைப்பார்கள். நட்பு வட்டாரம் பெருகும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் வாழ்க்கை துணை கிடைப்பார்கள்.

இதையும் படியுங்கள் ⇒ மூக்கின் வடிவத்தை வைத்து நாம் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளலாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement