பெயரின் முதல் எழுத்தின் அர்த்தம்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் பெயரின் முதல் எழுத்தை வைத்து குணங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம். நம் பெயர் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களை உண்டாக்குகின்றது. பொதுவாகவே இன்றைய காலகட்டங்களில் ஆங்கிலத்தில் தான் கையெழுத்து செய்கிறார்கள். எனவே ஆங்கிலம் எழுத்துக்களை வைத்து உங்களுடைய மனம், எண்ணம் குணங்கள் எப்படி இருக்கும் என்று நம் பதிவில் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
பற்களின் வடிவத்தை வைத்து உங்கள் குணத்தை தெரிந்துகொள்ளலாம் |
பெயரின் முதல் எழுத்தின் அர்த்தம்:
A -எழுத்தின் குணங்கள்:
A எழுத்தை பெயராக கொண்ட இருக்கும் நீங்கள் எல்லாம் விஷயங்களிலும் ஆர்வமாக இருப்பீர்கள். இவர்களின் உடல் அமைப்புகள் மற்றவர்களை கவரும் அளவிற்கு இருக்கும். நல்ல பண்புகளை கொண்டிருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் நேசிப்பார்கள்.
B- எழுத்தின் குணங்கள்:
B எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் மற்றவர்களின் மீது அதிகம் அன்பு வைத்திருப்பார்கள். தைரியமும் தன்னபிக்கையும் அதிகம் இருக்கும். சில நேரங்களில் அவசர புத்திகள் அதிகம் இருக்கும்.
C- எழுத்தின் குணங்கள்:
C எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் வாயை வைத்து பிழைத்து கொள்ளும் திறமை உடையவர்கள். பல துறைகளை பற்றி ஆர்வமாக தெரிந்திருப்பார்கள். அதிகமாக செலவு செய்பவராக இருப்பார்கள்.
D-எழுத்தின் குணங்கள்:
D எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் தலைமை பண்புகள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செல்ல பிள்ளையாக இருப்பார்கள். அதிகம் நண்பர்கள் இருப்பார்கள். எல்லாரிடமும் உரிமையாக பாசமாக பழகுவார்கள்.
E- எழுத்தின் குணங்கள்:
E எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் அமைதியான குணங்களை உடையவர்களாக இருப்பீர்கள். பேச்சில் சிறந்தவராக இருப்பார்கள். நண்பர்களை அதிகம் பெற்றிடும் நபராக இருப்பார்கள்.
F- எழுத்தின் குணங்கள்:
F எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் எல்லாரிடமும் அன்பாக இருப்பீர்கள். நம்பிக்கை உடையவராக இருப்பார்கள். இவரக்ளை சுற்றி இருக்கும் நபர்களிடம் சந்தோசமாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டு செயல்படுவார்கள்.
G- எழுத்தின் குணங்கள்:
G எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் வரலாற்று சம்மந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வமுடையவராக இருப்பீர்கள். மற்றவர்கள் விஷயங்களில் ஈடுபட மாட்டார்கள். பயணம் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
H-எழுத்தின் குணங்கள்:
H எழுத்தை பெயராக கொண்ட நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். பிறரை சந்தோசப்படுத்துவதில் வல்லவராக இருப்பார்கள். இவர்களின் பேச்சின் மூலம் மற்றவர்களை கட்டுபடுத்தும் திறமை உடையவராக இருப்பார்கள்.
I எழுத்தின் குணங்கள்:
I எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் அழகு சம்மந்தப்பட்ட வேலைகளில் பணி புரிவார்கள். இவர்கள் எதற்கும் துணிந்தவர்கள் மற்றும் தைரியமாக இருப்பார்கள்.
J-எழுத்தின் குணங்கள்:
J எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் ஒன்றை அடைவதற்கு முயற்சிகள் அதிகம் எடுப்பார்கள். இவர்களின் வாழ்க்கை துணை இவர்கள் தான் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வார்கள். இவர்கள் எடுப்பதுதான் முடிவு என்று நினைப்பார்கள்.
K-எழுத்தின் குணங்கள்:
K எழுத்தை பெயராக கொண்டவர்களுக்கு வெட்கப்படும் குணங்கள் அதிகம் இருக்கும். தன்னுடைய வாழ்க்கை அர்த்தம் உள்ளதாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களை கோவப்படுத்தினால் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.
L -எழுத்தின் குணங்கள்:
L எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் அவர்களுக்கு பிடித்தவர்களிடம் சரியான முறையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.
M -எழுத்தின் குணங்கள்:
M எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் தத்துவம் பேசுவதில் வல்லவராக இருப்பார்கள். இவர்களுக்கு நட்பு கூட்டங்கள் அதிகம் இருக்கும்.
N -எழுத்தின் குணங்கள்:
N எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் எந்த ஒரு விஷயங்களையும் எடுக்கும் பொழுது அதை செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். முயற்சிகள் அதிகம் எடுப்பார்கள்.
O -எழுத்தின் குணங்கள்:
O எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் படிப்பாளியாக இருப்பார்கள். படிப்பிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒழுக்கத்தையும், தூய்மையையும் அதிகம் விரும்புவார்கள். இவர்கள் ஆசிரியர் பணியில் இருப்பார்கள்.
P -எழுத்தின் குணங்கள்:
P எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் அதிகம் பேசி கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு அறிவாற்றல் அதிகம் இருக்கும். மற்றவர்களை பற்றி அதிகம் தெரிந்தகொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள்.
Q -எழுத்தின் குணங்கள்:
Q எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் பத்திரிக்கை துறையில் இருப்பார்கள். இவர்களை பேச்சிலும், எழுத்திலும் வெல்வது மிகவும் கடினம்.
R -எழுத்தின் குணங்கள்:
R என்னும் எழுத்துக்களை கொண்ட இவர்கள் நல்ல குணங்களை உடையவராக இருப்பார்கள். மற்றவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள். சவால்களை அதிகம் எதிர்கொள்வார்கள்.
S -எழுத்தின் குணங்கள்:
S எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் வெற்றியடைவதை அதிகம் விரும்புவார்கள். மற்றவர்களின் கவனம் இவர்கள் மீது இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
T -எழுத்தின் குணங்கள்:
T எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் தைரியமாக செயல்படும் திறனை உடையவர்கள். அதிகம் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.
U -எழுத்தின் குணங்கள்:
U என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் ஓவியம் வரைவதிலும், கைவினை பொருட்கள் செய்வதிலும் திறமையுடன் இருப்பார்கள். எழுத்து துறையில் இவர்கள் இருந்தால் இவர்கள் முன்னேறி விடுவார்கள்.
V -எழுத்தின் குணங்கள்:
V என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் மென்மையான குணத்தை கொண்டவராக இருப்பார்கள். நடைமுறைக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் குணத்தை உடையவர்கள். எல்லாரிடமும் பாசத்துடனும், அன்போடும் நடந்துகொள்வார்கள்.
W -எழுத்தின் குணங்கள்:
W என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் புரிந்து கொள்ளும் தன்மைகள் இவர்களுக்கு இருக்காது. எல்லாரிடமும் அன்போடு நடந்துகொள்வார்கள்.
X -எழுத்தின் குணங்கள்:
X என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை அதிகம் விரும்புவார்கள். மற்றவர்களை கவரும் திறனை உடையவராக இருப்பார்கள்.
Y -எழுத்தின் குணங்கள்:
Y என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் எந்த செயல்களையும் துணிச்சலுடன் செயல்படுவார்கள். இவர்களுக்கு தைரியம் அதிகமாக இருக்கும்.
Z -எழுத்தின் குணங்கள்:
Z என்னும் எழுத்தை பெயராக கொண்ட இவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்ளும் தன்மைகளை அதிகம் உடையவராக இருப்பார்கள். இவர்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |