9 நவகிரகங்கள் சுற்றுலா..! Navagraha Temples List..!

9 நவகிரகங்கள்

9 நவகிரகங்கள் சுற்றுலா..! Navagraha Temples List..!

9 நவகிரகங்கள் கோயில் சுற்றுலா செல்பவர்களா நீங்கள்…  இந்த 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள் அனைத்தும் கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்துள்ளது.

சரி இந்த பகுதியில் 9 நவகிரகங்கள் ஸ்தலங்கள் (Navagraha Temples) பற்றிய விவரங்களை, அதாவது 9 நவகிரகங்கள் எங்கு அமைந்துள்ளது, அங்கு செல்லும் வழி, எந்த ஸ்தலங்களில் என்னென்ன பரிகாரங்கள் மற்றும் பிராத்தனைகள் செய்ய வேண்டும், ஆலயம் நடைதிறப்பு நேரம் ஆகிய விவரங்களை இங்கு நாம் படித்தறிவோம் வாங்க…

பகுதி ஒன்றில் சந்திரன், செவ்வாய், குரு, கேது மற்றும் சனி ஆகிய நவகிரகங்கள் கோவில்களின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம். இப்போது மீதியுள்ள 9 நவகிரங்கள் (Navagraha Temples) கோவில்களின் விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..!

9 நவகிரகங்கள் சுற்றுலா..! முழுமையான தகவல்கள்..! பகுதி-1

 

9 நவகிரகங்கள் (சூரியன்) – சூரியனார் திருஸ்தலம்:-

சூரியநாராயணர் திருக்கோவில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருமங்கலக்குடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது, இந்த கோவில் 1800 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த திருஸ்தலமாகும். சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எனும் சிறப்பை சூரியனார் கோயில் பெற்றுள்ளது.

சூரியனார் செல்லும் வழி:-

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் ஆடுதுறைக்கு தெற்கில் 2 கி.மீ. தூரத்தில் சூரியனார் கோவில் (suryanar temple) அமைந்துள்ளது.

ஆலயம் திறக்கப்படும் நேரம்:-

காலை 06 மணி முதல் 11 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு மலை 4 மணி முதல் 8 மணி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

சூரியனார் திருக்கோவிலின் சிறப்பு..!

9 நவகிரகங்கள் திருவெண்காடு புதன் ஸ்தலம்:-

நாகை மாவட்டத்தில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் திருவெண்காடு சிவன் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு சுயம்பு மூர்த்தியாக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவஸ்தலமாக (Shiva Temple) இது விளங்குகிறது.

இங்கு சிவன் சுவேதாரண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அன்னை பிரம வித்தியம்பிகை என்ற பெயரிலும் அருள்பாலிக்கிறார். ஆதி சிதம்பரம் திருவெண்காடு என்ற புராண பெயரிலும் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.

ஆலயம் திறக்கப்படும் நேரம்:-

காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சன்னதி திறக்கப்படும்.

பின்பு மாலை 05.00 மணி முதல் இரவு 09.30 மணி வரை திறக்கப்படும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்பு..!

நவகிரகங்கள் (சுக்கிரன்) – கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருஸ்தலம்:-

நவக்கிரக ஸ்தலங்களில் (Navagraha Temples) சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் கஞ்சனூர். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த ஸ்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் அக்னீஸ்வரர் சுக்ரனாக காட்சியளிக்கிறார் மற்றும் தேவியின் பெயர் கற்பகாம்பாள். 

ஆலயம் திறக்கப்படும் நேரம்:-

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை திறக்கப்படும்.
பின்பு மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறக்கப்படும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

சுக்கிரன் ஸ்தலமான அக்னீஸ்வரர் திருக்கோயிலின் சிறப்பு..!

9 நவகிரகங்கள் (ராகு) – திருநாகேஸ்வரம் ராகு பகவான் ஸ்தலம்:-

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் திருநாகேஸ்வரம் ராகு பகவான் ஸ்தலம் அமைந்துள்ளது. இங்கு நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, சிவபெருமானை பூசித்த நாகநாதர் கோவில் உள்ளது. நாக அரசராகிய ராகு பூசித்த காரணத்தால், இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் ஏற்பட்டது.

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் தோஷம் நீங்கும். மேலும் திருமணம் தாமதமாதல், இல்லறத்தில் நிம்மதியின்மை, ஜாதகத்தில் புத்திர தோஷம், களத்திர தோஷம், காலசர்ப்ப தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்க இராகு தசை, இராகு புக்திகளில் இராகு பகவானுக்கு பாலாபிஷேகம், அர்ச்சனை, ஹோமம் செய்து வழிபட்டுப் பேறு பெறலாம்.

ஆலயம் திறக்கப்படும் நேரம்:-

காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரை.
மலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஆலயம் திறக்கப்படும்.

மேலும் இந்த ஆலயத்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து படிக்கவும்…

அருள்மிகு திருநாகேஸ்வரம் ராகு பகவான் ஸ்தலம் சிறப்புகள்..!

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்