Own House Pariharam in Tamil
நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பெரிய கனவு என்றால் அது சொந்தவீடு வாங்குவது அல்லது கட்டுவதுதான். ஆனால் அதற்கு பல தடைகள் உங்களுக்கு வந்திருக்கும். அதனால் தான் இன்றைய பதிவில் அப்படி ஏற்படும் தடைகளை நீக்கி விரைவில் நீங்கள் சொந்த வீடு கட்டுவதற்கு பரிகாரம் பற்றி பார்க்க இருக்கின்றோம். அது என்ன பரிகாரம் அதனை எவ்வாறு செய்வது என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காணலாம். நாம் சொந்தவீடு கட்டவேண்டும் என்றால் அதற்கு பரிகாரம் மட்டும் செய்தால் போதாது. நம்முடைய சொந்த முயற்சியும் இருக்க வேண்டும். ஆனால் நமது முயற்சியுடன் இந்த பதிவில் கூறியுள்ள பரிகாரத்தையும் செய்தால் நீங்கள் விரைவில் சொந்த வீடு கட்டிவிடலாம். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.
சொந்த வீடு அமைய பரிகாரம்:
பொதுவாக சொந்தவீடு என்பது நாம் அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான ஆசை ஆகும். அதற்கான ஒரு சிறந்த பரிகாரத்தை பற்றி பார்க்கலாம். இந்த பரிகாரம் செய்வதற்கு முதலில் நாம் அனைவரின் வீட்டிலேயும் காமாட்சி விளக்கு அல்லது கஜலட்சுமி விளக்கு இருக்க வேண்டும்.
அப்படி இல்லை என்றால் நீங்கள் அன்றாடம் தெய்வ வழிபாடு செய்வதற்கு பயன்படுத்தும் விளக்கினை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்கும பொட்டு இடுங்கள், பின்னர் அதற்கு வெள்ளை நிற பூக்கள் அல்லது நறுமணம் வரக்கூடிய பூக்களை வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> சொந்த வீடு அமைய கார்த்திகை அன்று இந்த தீபத்தை மறக்காமல் ஏற்றுங்கள்
சீக்கிரம் வீடு வாங்க பரிகாரம்:
பிறகு இந்த விளக்கின் உள்ளே 5 ரூபாய் நாணயத்தை போட்டுக்கொள்ளுங்கள். பிறகு எண்ணெய் அல்லது நெயினை ஊற்றி திரியை போட்டு விளக்கினை ஏற்றிக்கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு தட்டினை எடுத்து அதற்கும் மஞ்சள் குங்கும பொட்டு இடுங்கள், பிறகு அதன் நடுவிலும் 5 ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மீது நாம் ஏற்றிவைத்துள்ள விளக்கினை வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் எதற்காக குறிப்பாக 5 ரூபாய் எடுத்துக்கொள்கிறோம் என்றால் அது குபேரனுக்கு உகந்தது. அதனால் தான் நாம் 5 ரூபாய் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த விளக்கினை தினமும் காலை 6.00 – 7.00 மணிக்குள் தொடர்ந்து ஏற்றி வந்தால் விரைவில் சொந்த வீடு கட்டிவிடுவீர்கள் நண்பர்களே.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |