வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்..!

Advertisement

Pana Varavu Athikarikka

வணக்கம் நண்பர்களே..! இன்றைய ஆன்மிகம் பதிவில் பணவரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். எல்லோருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அது வீட்டில் தங்கவில்லை என்று புலம்புபவர்களே இங்கு அதிகமாக இருக்கிறார்கள். அப்படி புலப்புபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை படித்து உங்கள் வீட்டில் பணவரவை அதிகரிக்க செய்யுங்கள்..!

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க பீரோவில் இந்த பொருட்களை வைத்து பாருங்கள்..!

பணவரவு அதிகரிக்க டிப்ஸ்:

பணவரவு அதிகரிக்க டிப்ஸ்

டிப்ஸ் -1

முதலில் ஒரு சதுர வடிவில் மஞ்சள் துணியை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1 ஸ்பூன் சோம்பு, ஏலக்காய் 3 மற்றும் இவற்றுடன் பச்சை கற்பூரம் வைத்து, அந்த துணியை ஒரு நூலை கொண்டு கட்ட வேண்டும்.

பிறகு அந்த துணியை வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டு குபேர மூலையில் வைக்க வேண்டும்.

நீங்கள் வீட்டில் பூஜை செய்து வழிபடும் போது இந்த மஞ்சள் துணிக்கும் பூஜை செய்து வர வேண்டும். இதுபோல செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும். சேராத செல்வங்கள் அனைத்தும் சேரும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் செல்வம் பெருக மணி பிளான்ட் செடியை எங்கு வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

டிப்ஸ் -2 

ஒரு சதுர வடிவிலான துணி ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிய அளவில் ஒரு படிகார கல்லை வைத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 துண்டு வசம்பை வைத்து அந்த துணியை ஒரு நூலை கொண்டு கட்ட வேண்டும்.

பிறகு இந்த துணியை ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அன்று பூஜை அறையில் வைத்து பூஜை செய்து, பின் அந்த துணியை உங்கள் வீட்டு முன் இருக்கும் நிலை வாசலில் கட்டி தொங்க விட வேண்டும்.

இந்த துணியை எல்லோரும் பார்க்கும் படி வெளிப்பக்கமாக கட்டி தொங்க விட வேண்டும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் சாம்பிராணி தூபம் காட்டும் போது இதற்கும் தூபம் காட்ட வேண்டும்.

இதுபோல செய்து வருவதால் வீட்டில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கி பணவரவு அதிகரிக்கும். செல்வங்கள் சேரும். கடன் பிரச்சனை நீங்கும்.

இதையும் படியுங்கள் ⇒ வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

 

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement