Panam Sera Pariharam in Tamil
இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது மிகவும் பயனுள்ள ஒரு தகவலை பற்றி தான். பொதுவாக நாம் அனைவருக்கும் உள்ள ஒரு கஷ்டம் என்றால் எவ்வளவு தான் நாம் சம்பாதித்தாலும் நமது வீட்டில் பணம் தங்கவே மாட்டேங்குது என்பது தான்.
உங்கள் வீட்டின் பணவரவை அதிகரித்து வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் அனைத்தும் நீங்க ஒரே ஒரு பரிகாரம் மட்டும் செய்தால் போதும். அது என்ன பரிகாரம் அதனை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை பற்றியெல்லாம் இந்த பதிவில் விரிவாக காண இருக்கின்றோம்.
வீட்டில் பணவரவு பலமடங்கு அதிகரிக்க இதை மட்டும் செய்தால் போதும்
Panam Vara Pariharam in Tamil:
உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பணக்கஷ்டங்களும் நீங்கி உங்கள் வீடுதேடி பணம் வர வீட்டின் பூஜை அறையில் இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்.
முதலில் உங்களுடைய பூஜை அறையில் ஒரு இடத்தை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பின்னர் சிறிதளவு மஞ்சள்தூள் தூவி கோலமிட்டுக் கொள்ளுங்கள். அதன் பிறகு மூன்று விளக்குகளை எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமபொட்டு வைத்து அதனை நாம் போட்டு வைத்துள்ள கோலத்தின் மீது வைத்து கொள்ளுங்கள்.
குறிப்பாக அந்த மூன்று விளக்குகளையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்து அதில் முதல் விளக்கு கிழக்கு திசையை பார்த்தும், இரண்டாவது விளக்கு வடக்கு திசையை பார்த்தும், மூன்றாவது விளக்கு மேற்கு திசையை பார்த்தும் இருக்குமாறு வைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் பசும் நெய் ஊற்றி பஞ்சித்திரி இட்டு விளக்கு ஏற்றிக்கொள்ளுங்கள். மேலும் அந்த மூன்று விளக்குகளையும் சுற்றி வாசனை மலர்களால் அலங்கரித்துக் கொள்ளுங்கள்.
இந்த விளக்கு பரிகாரத்தை செவ்வாய், வெள்ளி, கிருத்திகை மற்றும் பெளர்ணமி நாட்களில் மாலை 6 மணிக்கு மேல் செய்வதன் மூலம் உங்கள் வீட்டின் பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிப்பதை நீங்களே காணலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |