உங்கள் வீட்டில் கஷ்டம் நீங்கி பணவரவு அதிகரிக்க இதை மட்டும் செய்யுங்க போதும்..!

Advertisement

வீட்டில் பண வரவு அதிகரிக்க | Panavaravu Athikarikka

இந்த உலகில் பணம் இல்லாமல் வாழவே முடியாது. ஒவ்வொன்றிற்குமே பணம் முக்கியமாக இருக்கிறது. அப்படி இருக்கையில் இன்று இருக்கும் பல வீடுகளில் பணக்கஷ்டம் என்பது இருந்துகொண்டே தான் இருக்கிறது. நாம் எவ்வளவுதான் சம்பாதித்தாலும் வீட்டிற்கு பணவரவே இல்லாமல் இருக்கிறது. இனி அப்படி இல்லாமல் வீட்டில் விரைவில் பணவரவு அதிகரிக்க செய்யும் பரிகாரம் ஒன்றை இப்பதிவில் கொடுத்துள்ளோம். அதனை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள். வீட்டில் பணவரவு அதிகரிக்க இந்த பரிகாரத்தை மட்டும் செய்து பாருங்கள்.

பணவரவு அதிகரிக்க பரிகாரம்:

வீட்டில் பணவரவு அதிகரிக்க மிளகை வைத்து ஒரு தாந்திரீக பரிகாரம் ஒன்று செய்யவேண்டும்.  பணத்தேவை இல்லாமல் யாருமே இருக்க முடியாது. அப்படி இருக்கையில் மிளகை வைத்து பரிகாரம் செய்தால் உங்களுக்கு பணம் வருவதற்கு ஏதாவது தடை இருந்தாலும் சரி வந்த பணம் கையில் தங்காமல் இருந்தாலும் சரி அதை முற்றிலுமாக போக்கி உங்களுக்கு பணவரவை அதிகரிக்கும்.

 வீட்டில் பண வரவு அதிகரிக்க

 இந்த பரிகாரத்தை நீங்கள் ஞாயிற்று கிழமை அன்று மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும். 
வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால் பணவரவும், அதிர்ஷ்டமும் அதிகரிக்குமாம்..!

 

முதலில் ஒரு ஐந்து மிளகை கையில் எடுத்துக்கொண்டு வீட்டின் வாசலுக்கு சென்று,  நீங்கள் தான் பரிகாரம் செய்ய போகிறீர்கள் என்றால் உங்கள் ஒரு கையில் மிளகை வைத்து மூடிக்கொண்டு உங்கள் தலையை சுற்றவும்.

 அதாவது 7 முறை வலது புறமாகவும், 7 முறை இடது புறமாகவும் சுற்றவும். சுற்றும் போதே நீங்கள், எனக்கு ஏதாவது பணம் வருவதற்கு தடை இருந்தால் அது நீங்கி விடவும் என்றும் எங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றும் மனதிற்குள்  சொல்லிக்கொண்டே சுற்ற வேண்டும். சுற்றிய பிறகு 5 மிளகில், 4 மிளகை கையில் எடுத்து நான்கு திசையிலும் வீசி விடுங்கள். மீதமுள்ள ஒரு மிளகை வானத்தை நோக்கி வீசி விடுங்கள். 

பிறகு முகம் கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள். அப்படி இல்லையென்றால் ஒரு ஈரத்துணியால் கை, கால் மற்றும் முகங்களை துடைத்து விட்டு வீட்டிற்குள் செல்லுங்கள்.

பீரோவிற்கு அடியில் இந்த பொருளை வைத்தால் எந்த கஷ்ட நஷ்டமும் இருக்காது, பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்..!

 

இந்த பரிகாரத்தை நீங்கள் ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் தொடர்ந்து செய்து வந்தால் பணக்கஷ்டம் நீங்கி விரைவில் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை நீங்கள் வீட்டில் மட்டுமில்லாமல் கடை, வியாபாரம் செய்யும் இடங்களிலும் செய்யலாம்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்

 

Advertisement