Pengal Sivalingathai Valipadalama in Tamil
வணக்கம் நண்பர்களே..! பொதுவாக நாம் வாழும் இந்த உலகம் எவ்வளவு தான் மாறி இருந்தாலும் ஆன்மிகம் மட்டும் மாறாத ஒன்றாக உள்ளது. இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அப்படி ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்துபவர்கள் எதை செய்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். உதாரணத்திற்கு ஊருக்கு செல்வதாக இருந்தாலும் நல்ல நாள் பார்த்து தான் செல்வார்கள். அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு ஆன்மீக தகவல்களை பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும்.
பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா.. இருக்க கூடாதா
பெண்கள் சிவலிங்கத்தை வழிபடலாமா..?
பொதுவாக இன்றைய நிலையில் பலரும் சிவபெருமானை வழிபட்டு வருகிறார்கள். ஆனால் திருமணமாகாத பெண்கள் சிவலிங்கத்தை வழிபட கூடாது என்று சொல்கிறார்கள். அதற்கு காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இங்கு காணலாம்.
சிவலிங்கம் என்பது சிவன் தியானம் செய்யும் நிலை ஆகும். அந்த நேரத்தில் சிவன் தூய்மையான தியான நிலையில் இருப்பதால், பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவோ அல்லது கைகளால் தொட்டோ பூஜிக்க கூடாது என்று சொல்லப்படுகிறது.👉பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா.. அப்படி அணிவதால் என்ன பலன் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
சிவனின் தியானம் கலையாமல் இருப்பதற்காக மற்ற கடவுள்களே தியான நிலையில் இருக்கும் சிவலிங்கத்தை நெருங்கி பூஜிக்க அஞ்சுவார்கள். அதுபோல பெண் கடவுள்கள் கூட தியான நிலையில் இருக்கும் சிவபெருமானை வழிபட தயங்குவார்கள். அதனால் ஆண்கள் மட்டுமே சிவலிங்கத்தை பூஜிக்க வேண்டும். பெண்கள் சிவலிங்கத்தை வணங்க கூடாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது.
குறிப்பாக திருமணமாகாத பெண்கள் சிவலிங்கத்தின் அருகே செல்லவே கூடாது என்றும் சொல்லப்படுகிறது.
👉மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |