Poojai Araiyil Vaika Kudatha Padangal
வீட்டில் முக்கிய இடமாக இருப்பது பூஜை அறை தான். மகாலட்சுமி குடியிருக்கும் இடம் என்றால் பூஜை அறை தான். அப்படிப்பட்ட பூஜை அறை சுத்தமாக தூசி இல்லாமலும், ஓட்டடை இல்லாமலும் இருக்க வேண்டும். அதே போல் சாமி படங்கள் நிறைய வைத்திருப்பார்கள். சில பேர் சாமி படங்களை வருட கணக்காக வைத்திருப்பார்கள். அப்படி வைத்திருப்பது பிரச்சனை இல்லை. அந்த படம் கிழிந்த நிலையிலோ அல்லது உடைந்தோ இருக்க கூடாது. மேலும் சாமி படம் தூசி இல்லாமல் பளிச்சென்று இருக்க வேண்டும். இந்த பதிவில் பூஜை அறையில் வைக்க வேண்டிய சாமி படங்கள், வைக்க கூடாத படங்கள் பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.
பூஜை அறையில் கட்டாயம் வைக்க வேண்டிய படங்கள்:
பூஜை அறையில் விநாயகர், சரஸ்வதி, முருகன், பெருமாள், மஹாலட்சுமி இந்த ஐந்து கடவுளும் உள்ள ஒரே படமாக கொண்டதாக உள்ள படத்தை வைக்க வேண்டும். இந்த படத்தை வைப்பதால் வீட்டிற்கு தேவையான எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ இந்த பூஜை அறை டிப்ஸ் மட்டும் தெரிந்தால் நீங்கள் தான் கில்லாடி.!
விநாயகர் நமக்கு உள்ள கஷ்டத்தை நீக்கி நன்மைகளை தருகிறார். சரஸ்வதி அறிவு, படிப்பு போன்றவற்றை தருகிறார். இவை மட்டும் இருந்தால் மட்டும் போதுமா செல்வம் வேண்டும் அல்லவா.! அதற்காக தான் மஹாலட்சுமி இருக்கிறார். பெருமாள் குடும்ப ஒற்றுமைக்கு வழி வகுக்கிறார். முருகன் தைரியத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கிறார். இந்த ஐந்து பண்புகளும் ஒரு வீட்டில் இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.நீங்கள் எந்த சாமி படம் வைத்தாலும் அதனை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஸ்லோகங்கள் சொல்லலாம் அல்லது பாடலை தொலைக்காட்சி அல்லது ரேடியோவில் போடலாம்.
வைக்க கூடாத சாமி படங்கள்:
காளி, நரசிம்ம மூர்த்தி, சரபேஸ்வரர் போன்ற கோபமாக உள்ள சாமி படத்தை வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதெல்லாம் வைப்பதால் ஒன்றும் கிடையாது. இந்த மாதிரி கடவுள் எதிரிகளை அழிப்பதற்காகவே ஆயுத்தை எடுத்தார்கள். அதனால் நம்மையும் எதிரிகளிருந்து காத்து அருள்புரிவார்கள்.
ஐயப்பன், ஆஞ்சினேயர் போன்ற படங்களை வைக்க கூடாது என்று சொல்வார்கள். இதற்கு என்ன காரணம் என்றால் ரொம்ப சுத்தமாக இருக்க வேண்டும். மேலும் பூஜை அறை தனியாக இருக்க வேண்டும். அந்த அறையில் எல்லாரையும் பூஜை செய்ய விட கூடாது. இதற்காக மட்டும் தான் இந்த மாதிரி சாமி படங்களை வைக்க கூடாது என்று சொன்னார்கள்.
சனீஸ்வரன், நவகிரங்கள் போன்ற சாமி படங்களை வைக்க கூடாது.
இறந்தவர்களின் படங்களை பூஜை அறையில் வைக்க கூடாது.
இதையும் படியுங்கள் ⇒ மறந்தும் கூட பூஜை அறையில் இந்தப் பொருட்களை வைக்காதீர்கள்..!
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |