பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால் | Pournami Andru Kulanthai Pirakkalama

Pournami Andru Kulanthai Pirakkalama

பௌர்ணமியில் குழந்தை பிறந்தால்

பண்டைய காலத்தில் இருந்தே பௌர்ணமி அன்று வழிபடுவது மிகவும் சிறப்பான நாளாக உள்ளது. ஆனால் பௌர்ணமியில் குழந்தை பிறக்கலாமா என்று பலருக்கும் கேள்வி எழுந்துள்ளது? அவர்களின் கேள்விக்கு பதில் கூறும் வகையில் நாம் இந்த தொகுப்பில் பௌர்ணமி அன்று குழந்தை பிறந்தால் என்ன ஆகும் மற்றும் அதன் சிறப்புகளை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

பெளர்ணமியில்+பிறந்தவர்கள்:

  • சூரிய மற்றும் சந்திர சக்திகள் நேர் எதிரே இரண்டும் ஒளிரும் கிரகமும் ஒன்றையொன்று பார்த்து கொள்வது பௌர்ணமியாக பிரகாசிக்கிறது. பௌர்ணமி திதியில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்த தோஷமும் இருக்காது.
  • பௌர்ணமியில் குழந்தை பிறந்தால் நல்லது. கடவுள் அன்று தான் மிகவும் சந்தோஷமாக இருப்பார். இந்த திதியில் பிறந்த குழந்தைகள் மிகவும் புண்ணியம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
  • இந்த பௌர்ணமியில் ஆண், பெண் என எந்த குழந்தை வேணாலும் பிறக்கலாம். பௌர்ணமியில் பிறந்த குழந்தைகளுக்கு செல்வம், புகழ், பொருளாதார நிலை உயரும். கல்வியில் சிறந்தவர்களாக இருப்பார்கள். வெளியிடத்தில் இவர்களுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

பௌர்ணமி அன்று பிறப்பதன் சிறப்புகள் என்ன?

  • தொழிலில் இவர்களது புகழ் உயரும், எந்த ஒரு கடினமான வேலையையும் எளிமையாக செய்து முடிப்பார்கள். உங்களுடைய பேச்சுவார்த்தை மக்களை கவரக்கூடியதாக இருக்கும்.
  • யாரையும் சார்ந்து வாழாமல் தன்னிச்சையாக செயல்படுவார்கள். கலைத்துறையில் மிகவும் சாதிக்கக்கூடிய நபராகவும் இருப்பார்கள். நல்ல குணம் உடையவர்களாகவும், புத்திசாலியாகவும், நேர்மையானவராகவும் இருப்பார்கள்.

பௌர்ணமி திதியில் பிறந்தால்:

  • ஆனால் இவர்களது சொந்த வாழ்க்கையில் சிறந்தவர்களாக இருக்கமாட்டார்கள். திருமணம் நடப்பதற்கு சற்று தாமதம் ஆகும். சிலர் துறவியாக மாறுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
  • பௌர்ணமியில் பிறந்தவர்களை சூரியனும், சந்திரனும் கட்டுப்படுத்துவதால் இவர்கள் வெளியிடத்தில் சிறப்பானவர்களாகவும், சொந்த வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதவராகவும் இருக்கிறார்கள்.
பௌர்ணமி சிறப்புகள்
2022 ஆண்டிற்கான பௌர்ணமி நாட்கள் நேரம்

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்