பிரதோஷம் அன்று திருமணம் செய்யலாமா..?

Advertisement

Pradosham Andru Thirumanam Seiyalama

இன்றைய ஆன்மிகம் பதிவில் பிரதோஷம் அன்று திருமணம் செய்யலாமா என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணம் ஆகும். அதனால் தான் திருமணம் செய்வதற்கு ஜாதக பொருத்தம் பார்க்கிறார்கள்.

அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி ஜாதக பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள். அதுபோல அவர்கள் திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் மட்டும் பார்க்காமல் நாள் பொருத்தமும் பார்த்து தான் திருமணம் செய்கிறார்கள். அந்த வகையில் இந்த பதிவின் வாயிலாக பிரதோஷம் அன்று திருமணம் செய்யலாமா செய்ய கூடாதா என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

கீழ் நோக்கு நாளில் திருமணம் செய்யலாமா..?

பிரதோஷம் அன்று திருமணம் செய்யலாமா..? 

பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு என்றும், இந்நாளில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் என்றும் அழைக்கப்படுகிறது.

இது தேய்பிறை மற்றும் வளர்பிறை ஆகிய 2 காலங்களிலும் திரயோதசி திதியில் கதிரவன் மறைவதற்கு முன் 4.30 முதல் 6.00 மணிவரை உள்ள நேரத்தையே பிரதோஷ காலம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 வீட்டில் இருப்பவர்கள் ஒரே ராசியாக இருக்கலாமா?

பிரதோஷம் அன்று பலரும் விரதம் மேற்கொண்டு சிவபெருமானை வழிபட்டு வருகிறார்கள். பிரதோஷம் அன்று விரதம் எடுப்பது மிகவும் சிறப்பு பெற்றது ஆகும். ஆனால் அந்த சிறப்பு நாளில் திருமணம் செய்யலாமா என்ற ஒரு கேள்வி இருக்கும். அதற்கான பதிலை இங்கு பார்ப்போம்.

 பிரதோஷ நல்ல தினம் என்பதால் பிரதோஷ நாளில் பெண் பார்க்க செல்வது, திருமணம் செய்வது, வளைகாப்பு செய்வது, புதிய தொழில் ஆரம்பிப்பது போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்யலாம். மேலும் நாம் செய்யும் சுப நிகழ்ச்சிகள் வளர்பிறை பிரதோஷமா இல்லை தேய்பிறை பிரதோஷமா என்று பார்த்து செய்வது நல்லது.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் அம்மா வீட்டிலிருந்து இந்த பொருட்களை மட்டும் தெரியாமல் கூட எடுத்துட்டு போகவே கூடாதாம்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement