உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்..!
Rasi Tholil Palan Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம் பதிவில் ஒவ்வொருவரின் ராசிக்கும் ஜாதகப்படி என்ன மாதிரியான தொழில் செய்தால் தொழில் சிறப்பாக விளங்கும் என்று இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துக்கொள்ளலாம். ஒருவருடைய நட்சத்திரத்தினை வைத்து அவர்களுடைய வாழ்க்கை, உடல்நலம், உறவு முறைகள், செய்யும் தொழில்களை பற்றி அறிந்துக்கொள்ள முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும்.
ஆதி கால கட்டத்தில் அனைவரும் செய்து வந்த ஒரே தொழில் விவசாயம் மட்டும்தான். விவசாயத்திலிருந்து இப்போது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து ஒருவர் அனைத்து தொழிலையும் செய்யும் அளவிற்கு மக்கள் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். சரி வாங்க நண்பர்களே இப்போது ஒவ்வொருவறும் அவர்களின் ராசி அடிப்படையில் எந்த தொழிலில் சிறந்து விளங்குவார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.
மேஷ ராசி குணம்- Mesha rasi character in tamil..! |
மேஷ ராசிக்காரர்கள்:
மேஷ ராசிக்காரர்கள் எப்போதும் இலட்சியத்துடனும், உறுதியாகவும், அடுத்தவர்களிடம் பேசும்போது வெளிப்படையாக இருப்பார்கள். இந்த ராசியினர் வெளியிடங்களுக்கு சென்று வருதல், இவர்கள் சுறுசுறுப்புடன் இருப்பதால் காவல், ஊடகம் போன்ற துறைகளில் மேஷ ராசியினர் சிறந்து விளங்குவார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள்:
ரிஷப ராசியினர் எப்போதும் கடினமாக உழைக்க கூடியவர்கள். இவர்கள் ஒரு நிலையான வாழ்க்கையினை பெற விரும்பும் ராசியினர் ஆவர். ரிஷப ராசிக்காரர்கள் பொறியியல், கணக்காளர், கணினி சம்மந்த வேலை, மருத்துவ துறை, வழக்கறிஞர் போன்ற தொழில்களில் இவர்கள் சிறப்பாக விளங்குவார்கள்.
மிதுனம் ராசிக்காரர்கள்:
மிதுன ராசியினர் ஒரே இடத்தில் தினமும் செய்யும் வேலைகளை செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். இவர்கள் வெளி இடங்களில் சுற்றி செய்யும் வேலைகளை மட்டுமே விரும்பி செய்வார்கள். டிவி, சினிமா, சீரமைப்பு வேலை, விளம்பரம், கட்டட வடிவமைப்பாளர் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
கடக ராசிக்காரர்கள்:
கடக ராசியினர் இயற்கையான சூழலை விரும்புபவர்கள். இவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கும் இடத்தில் வாழ நினைப்பவர்கள். கடக ராசியினர் கால்நடைமருத்துவர், தலைமை நிர்வாக அதிகாரி, வழக்கறிஞர், எழுத்தாளர், ஆசிரியர், சமூக சேவகர், மனித வள ஆர்வலர் போன்ற வேலை துறைகளில் ஈடுபாட்டுடனும் சிறந்து விளங்குவார்கள்.
சிம்மம் ராசிக்காரர்கள்:
சிம்ம ராசிக்காரர்கள் எப்போதும் தலை சிறந்த குணத்துடனும், மற்றவர்களை எளிமையாக ஈர்க்கும் தன்மை வாய்ந்தவர்கள். எந்த ஒரு காரியத்தினையும் தனியாக நின்று செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர். சிம்ம ராசியினர் முதன்மை நிர்வாக அதிகாரி, கலைஞர், வடிவமைப்பாளர், சுய தொழில், அரசியல் போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள் சிம்ம ராசிக்காரர்கள்.
கன்னி ராசிக்காரர்கள்:
கன்னி ராசிக்கு ஏற்ற தொழில்: இவர்கள் எந்த வேலைகளையும் தனியாக செய்யாமல் குழுவாக செய்வதில் ஆர்வம் கொண்டவர்கள். எந்த செயலையும் எளிதாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கன்னி ராசியினர் எழுத்தாளர், ஆசிரியர், கணக்காளர், விமர்சகர், தரவு ஆய்வாளர் போன்ற வேலைகளில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்யலாமா..! |
துலாம் ராசிக்காரர்கள்:
துலாம் ராசியினர் எப்போதும் துடிப்பானவர்கள். அடுத்தவர்களை டீல் செய்வதில் வல்லமை வாய்ந்தவர்கள். வாடிக்கையாளர் சேவை, விற்பனை துறை, மக்கள் தொடர்பு, மேலாண்மை போன்ற தொழில் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
விருச்சிகம் ராசிக்காரர்கள்:
விருச்சிக ராசியினரிடம் உள்ளுணர்வு மற்றும் படைப்புத்திறன் மிகவும் அதிகமாக கொண்டிருக்கும். எந்த ஒரு செயலையும் சுயமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர்கள். இவர்கள் மருத்துவம், விஞ்ஞானி, துப்பறியும் துறை, வழக்கறிஞர், ஆராய்ச்சி, ஊடகம் துறைகளில் சிறப்பாக விளங்குவார்கள்.
தனுசு ராசிக்காரர்கள்:
தனுசு ராசிக்காரர்கள் தீர்க்கமான முடிவுகளை எடுப்பதில் சிறந்து செயல்படுவார்கள். நல்ல எண்ணங்களை தன்னை சுற்றிருக்கும் இடங்களில் பரப்ப செய்வார்கள்.தனுசு ராசியினர் மக்கள் தொடர்பு, திரைப்பட தொலைக்காட்சி, ஆசிரியர் துறைகளில் சிறந்து விளங்குவார்கள்.
மகரம் ராசிக்காரர்கள்:
மகர ராசிக்காரர்கள் நேர கணக்கில் சரியாக இருப்பது, பணத்தினை சரியான முறையில் முதலீடு செய்வதில் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்கள். இவர்கள் மேலாளர், ஆசிரியர், வங்கி, அரசு வேலை, அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் போன்ற துறைகள் இவர்களுக்கு ஏற்ற தொழிலாகும்.
கும்பம் ராசிக்காரர்கள்:
கும்ப ராசியினர் புது புது ஐடியாக்களை வெளிப்படுத்துவதுடன், எதிர்கால தேவைக்கேற்றவாறு செயல்படுவதில் இவர்கள் வல்லவர்கள். கும்ப ராசிக்காரர்கள் ஒரே தொழிலில் இல்லாமல் பல வேலைகளில் ஈடுபட விரும்புபவர்கள். இவர்கள் தொழில் புரிவது, கலைகள், புதிய அறிவியல் கண்டிபிடிப்பு துறையில் மிகவும் சிறந்து விளங்கக்கூடியவர்கள்.
மீனம் ராசிக்காரர்கள்:
மீன ராசியினர் கற்பனை நயமும், படைப்பு திறனும் கொண்டவர்கள். இவர்கள் மக்கள் தொடர்பு, உளவியல், மக்கள் மேலாண்மை, கலை துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்..!
பெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..! |
இது போன்ற ஆன்மீக தகவலை தெரிந்துக்கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். | ஆன்மீக தகவல்கள் |