ஒரிஜினல் ருத்ராட்சம் கிடைக்கும் இடம் | Rudraksha in Tamil

Rudraksha in Tamil

ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும் | How To Find Original Rudraksha in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று ஆன்மீகம் பதிவில் ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும் அதன் நன்மைகள் பற்றி பார்க்க போகிறோம். பொதுவாக சிவன் பக்தர்கள் அனைவரும் ருத்ராட்சம் அணிந்து பார்த்திருப்போம். சிறு குழந்தைகளும் அணிந்து பார்த்திருப்போம். பெரியவர்கள் தெய்வத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் அணிந்திருப்பார்கள் என்று சொல்வார்கள் ஆனால் அது எவ்வளவு உண்மையோ அதுபோல் ருத்ராட்சம் அணிவது நமக்கு நல்லது என்பதும் உண்மை. ருத்ராட்சம் அணிவதின் நன்மையை பற்றியும் ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக படித்து அறிவோம்.

ஒரிஜினல் ருத்ராட்சம் எங்கு கிடைக்கும்:

 • இமாலய பகுதியை சேர்ந்த மலைப்பகுதில் கிடைக்கின்றன. இந்த மரத்தின் பெயர் ஈல்லியோகார்பஸ் கனிற்றஸ் (Elaeocarpus ganitrus) என்ற பெயர்பெற்றுள்ள மரத்தின் விதை தான் ருத்ராட்சம் ஆகும். மிகவும் சிறந்த ருத்ராட்சம் இமாலய பகுதியில் கிடைக்கின்றன.
 • இது அதிகமாக காணப்படும் இடம் நேபாள், பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிகமாக காணப்படுகின்றன.
 • பொதுவாக ருத்ராட்சலத்திற்கு 21 முகங்கள் உள்ளது அதன் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நன்மைகள் உள்ளது. அதனை பின்பு பார்ப்போம்.

ருத்ராட்சம் முகம் பலன்கள்:

 • ருத்ராச்சம் நடுவில் கோடுகள் இருக்கும் அதனை முகங்கள் என்று சொல்வார்கள். ஐந்து கோடுகள் இருத்தல் ஐந்து முகம் ருத்ராட்சம் என்று பெயர். அதனை கண்டுபிடிப்பதும் மிகவும் சுலபம். ஆண்கள் பெண்கள் என அனைவரும் ருத்ராட்சம் அணிந்துகொள்ளலாம்.

ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள்:

ஐந்து முக ருத்ராட்சம் பலன்கள்

 • ஐந்து முக ருத்ராட்சம் (நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம்) போன்ற ஐம்பூதங்கள் சொல்லும் வகையில் அதிகம் ஐந்து முக ருத்ராட்சம் கிடைக்கும் இந்த ருத்ராட்சம் ஆண்கள், பெண்கள் என இருவரும் அணிந்துகொள்ளாம்.
ஸ்வஸ்திக் சின்னம் பலன்கள்

ஒரு முகம் ருத்ராட்சம் பலன்கள்:

ஒரு முகம் ருத்ராட்சம்

 • ஒரு முகம் ருத்ராட்சத்தை அடைவது மிகவும் கடினம். இதனை இறைவனின் திருப்பிறப்பு என்று சொல்வார்கள். இந்த ஒருமுக ருத்ராட்சத்தை ஒரு முறை தொடால் போதும் உங்களது பாவங்களை அனைத்தும் நீங்கும் என்று சொல்வார்கள். அதனை பார்த்தாலே நம்முடைய பாவங்கள் நீங்கும்.

இரண்டு முக ருத்ராட்சம் பலன்கள்:

இரண்டு முக ருத்ராட்சம்

 • இரண்டு முகங்கள் கொண்ட ருத்ராச்சம் மிகவும் அப்பூர்வமான ஒரு ருத்ராச்சம் ஆகும். ஏனென்றால் அதனை சிவன் சக்தி என்று சொல்வார்கள். இதன் விலை மிகவும் உயர்வாக இருக்கும். இதனை அணிந்தால் அவர்களின் பாவங்கள் போகும். உயிரினங்களை கொன்ற பாவங்கள் போகும்.

3 முக ருத்ராட்சம் பலன்கள்:

3 முக ருத்ராட்சம்

 • மூன்று முக ருத்ராட்சம் கிடைப்பதும் அரிதானது என்று கூறப்படுகிறது. சோம சூரிய அக்கினி எனும் சிவனின் முக்கண் வடிவானவை ஆகும். இதனை அணிந்தால் பெண்களை கொன்ற பாவம் நீங்கும். பசு ஹத்தி தோஷம் கூட விலகும், மேலும் இது போன்ற பாவங்கள் எரிந்து சாம்பலாகும்.

4 முக ருத்ராட்சம் பலன்கள்:

4 முக ருத்ராட்சம் பலன்கள்

 • நான்கு முகங்கள் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் பக்தி, செல்வம், மகிழ்ச்சி, மோட்சம், ஆகியவற்றைப் பெறலாம். இது பிரம்மாவை குறிப்பதாக சொல்லப்படுகிறது.

6 முக ருத்ராட்சம் பலன்கள்:

6 முக ருத்ராட்சம்

 • ஆறு முகங்கள் கொண்ட ருத்ராட்சம் முருகப்பெருமாளை குறிக்கும். இதன் கிரகம் சுக்கிரன் இவ்வகை மணிகளை அணிந்து கொண்டால் தமிழ்க் கடவுளான முருகன் அருள் பெருகும். பிராம்மணா்களை அளித்த பாவங்கள் குறையும்.

7 முக ருத்ராட்சம் பலன்கள்:

7 முக ருத்ராட்சம்

 • பிரம்மனின் கட்டளையினால் ஆதிசேஷன் அம்சம் என்று ஏழு முகங்கள் கொண்ட மணிகளை சொல்வார்கள். இதனை அணிவதால் பொன் பொருளைகளை திருடிய பாவங்கள் நீங்கும்.

8 முக ருத்ராட்சம் பலன்கள்:

8 முக ருத்ராட்சம்

 • 8 முக ருத்ராட்சம் அணிந்து கொண்டால் அஷ்ட வசுக்களின் ஆசிகள் கி்ட்டும். குருவை கொன்று குருபத்தினியைத் தீண்டிய கொடும் பாவங்களும் விலகி புண்ணியம் ஏற்படும் பொன் திருடிய குற்றங்கள் நீங்கும் அஷ்டமா சித்திகளும் வாய்க்கும் அஷ்ட லஷ்மிகளின் அருள் கிடைக்கும்.

9 முக ருத்ராட்சம் பலன்கள்:

9 முக ருத்ராட்சம்

 • இதனை அணிந்து கொண்டால் பில்லி சூனியம் விலகும் பலவகை கொலை பாவங்கள் பாம்புகளால் வரும் பிரச்சனைகள் நீங்கும். நவகிரங்களின் ஆசி கிட்டும்.
எந்த ஹோமம் செய்தால் என்ன பலன்

10 முக ருத்ராட்சம் பலன்கள்:

10 முக ருத்ராட்சம்

 • பத்து முகம் கொண்ட ருத்ராட்சம் அணிவதால் ஏவல், சூனியம் போன்ற ஏதும் நெருங்காது அப்படி இருந்தாலும். அதுவும் நீங்கும். பேய், பிசாசு, போன்ற தீயே சக்தியை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்