சாய்பாபா வழிபடும் முறை

Advertisement

Saibaba Valipadu Murai Tamil

ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். இன்றைய ஆன்மீக பதிவில் சாய்பாபா  வழிபடும் முறை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் அனைவருவே சாய்பாபா ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அதிலும் குறிப்பாக, வியாழன் கிழமை அன்று சாய்பாபா ஆலயத்திற்கு சென்று வழிபடுவது நல்லது.

பொதுவாக, ஒவ்வொரு கடவுளை வழிபடுவதற்கும் ஒரு  கிழமை உகந்த கிழமையாக இருக்கும். அதேபோல், சாய்பாபாவை வழிபடுவதற்கு வியாழக்கிழமை உகந்த கிழமையாக கருதப்படுகிறது. எனவே, சாய்பாபாவை எப்படி வழிப்பட வேண்டும் என்பதை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

How to Worship Sai Baba on Thursday in Tamil:

Saibaba Valipadu Tamil

சாய்பாபாவின் படத்தை  மாலை மலர்களால் அலங்கரித்து பூஜை செய்து விட்டு அதன் பிறகு பிறகு, சாய்பாபவை மனமுருக வணங்க வேண்டும்.

முதலில் சாய் பாபாவிற்கு நன்றி கூறி வணங்க வேண்டும். அதாவது, கிடைத்திருக்கும் வசதிகள், வாய்ப்புகள், அறிவுகள், உறவினர்கள், நண்பர்கள் என அனைத்திற்கும் நன்றி கூறி வழிபட வேண்டும். இவை அணைத்தும் நமக்கு சிறியதாக இருந்தாலும், நம்மை விட கீழ் நிலையில் உள்ளவர்களைவிட மேலான நிலையில் வைத்தமைக்கு நன்றி என கூறி சாய் பாபாவை மனதார வணங்க வேண்டும்.

அடுத்ததாக, சாய்பாபாவிடம் மன்னிப்பு கேட்டு வணங்க வேண்டும். அதாவது, இதுவரை நாம் தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு சில தீங்கினை செய்திருப்போம். எனவே, இவ்வாறு பிறருக்கு தீங்கினை செய்ய மாட்டோம் என்றும், இதுவரை செய்த தீங்கினை மன்னித்து கொள்வாயாக என மனமுருகி மன்னிப்பு கேட்டு வணங்க வேண்டும். மேலும், நம் மனதில் இருக்கும் தீங்கான எண்ணங்கள், வெறுப்பு, வஞ்சகம் போன்றவற்றால் பிறரை காயப்படுத்தி இருப்போம். எனவே, இத்தகைய தீங்கான மனப்பான்மை இருக்கக்கூடாது என்றும், காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கெட்டிக்கொள்கிறேன் என்றும் உண்மையான மனதுடன் வணங்க வேண்டும்.

விநாயகரை வழிபடும் முறை..!

பின்பு, நம்முடைய நியாமான பிராத்தனையை நிறைவேற்றி தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும். அதாவது, நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்கள் இருக்கும். அந்த வேண்டுதல்களை சாய் பாபாவிடம் கூறி நிறைவேற்றி தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.

அடுத்து, இறுதியாக நமக்கு மட்டுமின்றி நம் உறவினர்கள், நண்பர்கள், நமக்கு உதவி செய்த்தவர்கள் மற்றும் இவ்வுலகில் உள்ள நல்லுள்ளங்கள் என அனைவருக்கும் ஆரோக்கியத்தை அளித்து அவர்களின் வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருமாறு வேண்டிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீங்கள் தினமும் அல்லது வியாழன்கிழமைதோறும் வணங்கி வர சாய்பாபா என்று உங்களுக்கு துணையாக இருந்து உங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவார்.

சாய் பாபா காயத்ரி மந்திரம்

சாய்பாபா 108 போற்றி

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement