சர்க்கரை டப்பாவில் இந்த இரண்டு பொருட்களை வைய்யுங்கள்..! வீட்டில் பணவரவு அதிகரிக்கும்.!

Sakkarai Pariharam

Sakkarai Pariharam

வணக்கம் நண்பர்களே…! என்ன தான் நாம் கைநிறைய சம்பாதித்தாலும் வீட்டில் பணப்புழக்கம் குறைவாகவே தான் இருக்கும். பணத்தை சம்பாதிப்பதும் அதனை செலவு செய்வதுமாகவே இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க ஆன்மீகத்தில் சில பரிகாரங்கள் உள்ளது. அவற்றில் ஒன்றினை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். அதாவது வீட்டின் சமையலறையில் இருக்கும் சர்க்கரையை வைத்து செய்யக்கூடிய பரிகாரம் ஒன்றினை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டில் பண வரவு அதிகரிக்க:

வீட்டில் பண வரவு அதிகரிக்க

இப்பரிகாரத்தின் நன்மைகள்:

வெள்ளை நிறத்திலான இனிப்பு சுவை கொண்ட சர்க்கரை சுக்கிர பாகவானுக்கு பிடித்த பொருள். எனவே சர்க்கரை கொண்டு ஒரு பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் சுக்கிர பாகவானின் அருள் நமக்கு கிடைக்கும். சுக்கிர பாகவானின் அருள் கிடைத்தாலே மகாலக்ஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சுக்கிர பகவானுக்கு அதிபதியாக விளங்குபவள் மஹாலக்ஷ்மி. எனவே சுக்கிர பாகவான் மற்றும் மகாலக்ஷ்மியின் அருள் சேர்ந்து கிடைக்கும் போது அதன் பலனும் அதிகமாக இருக்கும். எனவே பணப்புழக்கம் அதிகரிக்க சர்க்கரை டப்பாவில் இந்த பொருட்களை வைத்து பரிகாரம் செய்யுங்கள்.

கல் உப்பு ஜாடியில் இந்த இரண்டு பொருளை வைய்யுங்கள்..  தீராத கடனும் தீர்ந்து விடும்..

சர்க்கரை பரிகாரம் செய்யும் முறை:

இப்பரிகாரத்தை நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 மணிவரை அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிவரை அல்லது இரவு 8 மணி முதல் 9 மணி வரை ஆகிய மூன்று நேரங்களில் இப்பரிகாரத்தை செய்யலாம்.

முதலில் ஒரு டப்பாவில் சர்க்கரையை நிரப்பி கொள்ளுங்கள். பிறகு, அதில் 3 கிராம்பு மற்றும் 1 துண்டு இலவங்கப்பட்டை சேர்த்து மூடி வைத்து கொள்ளுங்கள்.

 pana varavu pariharam

அதன் பின், பூஜை செய்யும் போது இந்த சர்க்கரை டப்பாவை பூஜை அறையில் வைத்து கொள்ளுங்கள். அதாவது 1 மணிநேரம் பூஜை அறையில் வைக்க வேண்டும்.

இப்போது இதனை எடுத்து வீட்டின் சமையலறையில் ஒரு ஓரத்தில் வைத்து விடுங்கள். 

1 மாதத்திற்கு பிறகு இதில் உள்ள சர்க்கரையை பறவைகளுக்கு வைத்து விடுங்கள். மீதமுள்ள கிராம்பினையும் இலவங்கப்பட்டையினையும் உங்கள் வீட்டு செடிகளில் போட்டு விடுங்கள்.

இதேபோல் அடுத்த மாதமும் பரிகாரம் செய்து கொள்ளுங்கள். 

இவ்வாறு நீங்கள் பரிகாரம் செய்து வருவதன் மூலம் உங்கள் வீட்டில் பணவரவு அதிகரிக்கும் என்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது. மேலும் பரிகாரம் செய்வதோடு மட்டும் இல்லாமல் பண வரவு அதிகரிப்பதற்கான முயற்சியினையும் விடாமல் செய்ய வேண்டும்.

பெண்கள் காலில் மெட்டி அணியும்போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.! பணக்கஷ்டம் வர இதுவும் ஒரு காரணம்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்