சங்கடஹர சதுர்த்தி விரதம் அன்று விரதம் இருப்பது எப்படி.?

Advertisement

 Sankatahara Chaturthi Viratham in Tamil | சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி

நண்பர்களே வணக்கம்..! இன்றைய ஆன்மிகம் பதிவில் சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி எதனால் சதுர்த்தி விரதம் எடுக்கவேண்டும். விரதம் எடுப்பதால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்துகொள்வோம் வாங்க..! பொதுவாக அமாவாசை, ஆவணி ஞாயிற்றுக்கிழமை, கார்த்திகை, பிரதோஷம், ஆடி வெள்ளி, சஷ்டி விரதம் ஏகாதசி விரதம் போன்ற விரதங்களை கடைபிடிப்பார்கள். அதுபோல் சிலர் சதுர்த்தி விரதம் இருப்பார்கள். வாங்க அதன் முறைகளை பற்றி தெரிந்துகொள்வோம்..!

சங்கடஹர சதுர்த்தி என்று சொல்ல காரணம் என்ன தெரியுமா?

விநாயகர் கைலாயத்தில் விளையாடிக்கொண்டு இருக்கும் பொழுது அவருடைய தோற்றத்தை கண்டு சந்திரபகவான் அவரை கேளி செய்திவிட்டார் அப்போது விநாயகருக்கு கோவம் வந்து. சந்திர பகவானுடைய ஒளியானது மங்கி போகட்டும் என்று சாபம் கொடுத்துவிட்டார். அதன் பின் சாபத்தை பெற்ற சந்திரபகவான் அனைவரிடத்திலும் வரம் கேட்டு வந்தார், அப்போது நீ யாரிடம் சாபத்தை பெற்றியோ அவரை வணங்கி தவம் புரியவேண்டும் என்று சொல்வார். உடனே சந்திர பகவான் விநாயகரை வணங்கி தவம் புரிந்தார் அதன் பின் விநாயகர் அந்த சாபத்திலிருந்து சந்திரபாகவனை விடுவித்தார்,

சாபத்திலிருந்து விடுவித்த நாளாய் சங்கடஹர சதுர்த்தி திருநாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது விநாயகர் சந்திரனுடைய சங்கடங்களை தீர்த்து வைத்த நாள் ஆகும்.

இந்த நாளில் விரதம் இருந்தால் விநாயகருடைய அருளுடன் சேர்ந்து சந்திரபகவான் அருளும் கிடைக்கும் என்பார்கள். மற்ற நாளுடன் இந்த நாளில் விரதம் இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது எப்படி? | Sankatahara Chaturthi Viratham in Tamil:

விரதம் இருப்பவர்கள் காலையில் எழுந்து குளித்துவிட்டு பக்கத்தில் இருக்கும் கோவில்களுக்கு சென்று 11 முறை சுற்றிவந்து வணங்கிவிட்டு அருகபில்லால் அவருக்கு மாலை கட்டி போடலாம், அப்படி இல்லையென்றால் அவரை வணங்கிவிட்டு வரலாம்.

அதன் பின் உபவாசம் இருக்கலாம். உபவாசம் இருப்பவர்கள் அவர்களுடைய உடல் நிலையை பொறுத்து எடுக்கவேண்டும். முழுவேலை விரதம் இருக்கமுடியவில்லை என்றால் பழங்களை மட்டும் சாப்பிட்டு விட்டு உணவை தவிர்த்துக்கொள்ளலாம்.

சதுர்த்தி விரதம் யார் எடுக்கவேண்டும்?

இந்த விரதத்தை குழந்தை இல்லாதவர்கள், நோய் உள்ளவர்கள், நல்ல வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவேண்டும் என்று இருக்கலாம், அதுபோல் நன்மைகள் நடக்கவேண்டும் என்று அனைவருமே இதனை மேற்கொள்ளலாம்.

விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம் 

சங்கடஹர சதுர்த்தி வழிபாடு:

வீட்டில் விநாயகர் சிலையா இருந்தால் அதற்கு உங்களால் முடிந்த பால் அபிஷேகம் செய்துவிட்டு அவருக்குப்பிடித்த கொழுக்கட்டை, பழங்கள், சுண்டல், ஏதேனும் பழ வகைகளை வைத்து வணங்கலாம். அவருக்கு இரவு தான் உகந்த நேரம் அந்த 6 மணிக்கு மேல் இதனை அனைத்தையும் வைத்து வணங்கலாம். வீட்டில் வணங்க முடியவில்லை என்றாலும் கோவில்களுக்கு சென்று அங்கு நடைபெறும் அதில் கலந்து கொண்டு உங்களால் முடிந்தவற்றை வாங்கி கொடுத்து மனதார பிரார்த்திக்கலாம். இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். சந்திரபகவான் மனதில்  ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்துவிடுவார்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மீக தகவல்கள்
Advertisement