சனி பெயர்ச்சி 2023 எப்போது வருகிறது | Sani Peyarchi 2023 to 2026
ஒவ்வொரு ராசியின் படி அவர் அவர் ஜாதகத்தை பொறுத்து மாறுபடும். அதேபோல் நமக்கு வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமைகள் அனைத்தும் நம்முடைய ஜாதகத்தில் இருக்கும் கிரகங்கள் பொறுத்து மாறுபடும். அதில் சில கிரங்களில் மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் நிறைய மாற்றத்தை ஏற்படுத்தும். அதில் நிறைய நன்மைகளும் இருக்கும் அதேபோல் தீமைகளும் இருக்கும். அதில் நாம் அதிகமாக பயம் கொள்வது சனி பகவான் தான்.
இவர் ஒரு ராசியில் இரண்டரை வருடம் பயணிப்பார். அதேபோல் அவர் அந்த ராசியை விட்டு இன்னொரு ராசிக்கு மாறுவதை தான் சனி பெயர்ச்சி என்பார்கள். அனைத்து ராசிகளுக்கும் அப்படி இந்த 2023 முதல் 2026 வரை நடக்கும் சனி பெயர்ச்சியால், மற்ற ராசிகளுக்கும் அதேபோல் எந்த ராசி கொஞ்சம் கஷ்டகாலம் எந்த ராசிக்கு நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்..!
2025 தைப்பூசம் தேதி மற்றும் நேரம் இதோ.!
Sani Peyarchi 2023 to 2026:
கடந்த ஜனவரி 17 தேதி 6.04 மணிக்கு சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ந்தார். இந்த இட மாற்றத்தால் நல்ல நிலைக்கு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. நம்முடைய வாழ்க்கையில் செய்யும் தவறுகளை பொறுத்து தான் நமக்கு நன்மை தீமைகள் கிடைக்கும். அந்த வகையில் இந்த வருடம் ராசிகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
சனி பெயர்ச்சி 2023 மீனம்:
சாதாரண செலவுகளை போல் நிறைய செலவுகள் செய்ய நேரிடலாம். அதேபோல் சேமிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்யும் சிறு சிறு சேமிப்பை பற்றி கூட யாருக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்வது ஒன்றாக இருந்தாலும் மற்றவர்களுக்கு வேறு வழியில் சென்றடையும். வெளிநாடுகளில் குடியுரிமை வாங்குவதற்கும், நிலம் வாங்கும் அம்சங்களும் உண்டு. ஆகவே இந்த வருடம் கஷ்டங்கள் வந்தாலும் மாற்றங்களும் வரும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கும்பம்:
சனி பகவான் ஜென்மத்தில் வருவதால் நிறைய நன்மைகளை கொடுப்பார்கள். புதிது புதிதாக முயற்சி செய்வீர்கள். அதில் நன்மைகள் கிடைக்கும். அதேபோல் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். ஒவ்வொரு சனிக்கிழமை அன்று நல்லலெண்ணெய் தேய்த்து குளிக்கவும். ஜென்ம சனியிலிருந்து விடுபடுவருவதற்கு வாய்ப்பு அபாரமாக உள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகள் கடன் அடையும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மகரம்:
கடந்த இரண்டரை வருடம் கொரோனா காலம் ஜென்ம சனி உங்களை வாட்டி வதக்கி எடுக்கும். இப்போது உங்கள் ராசியிலிருந்தும் லக்னத்திலிருந்தும் இரண்டாம் இடத்துக்கு சனி பகவான் பெயர்ச்சி அடையப்போகிறார். அதனால் முக்கியமான சில விஷயங்கள் நடக்கும். அதேபோல் பேசும் பேச்சில் கவனம் தேவை. நீங்கள் எதை தொட்டாலும் அது அனைத்திலும் நன்மை கிடைக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 தனுசு:
அனைத்து விஷயத்திலும் தத்துரூபமாக நடக்கும். சில இட மாற்றம் ஏற்படும். புதிய தொழில்களில் ஈடுபட தொடங்குவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் சிறு சிறு பிரச்சனைகள் வர கூடும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு நல்ல மாற்றம் நடக்கும். இருந்த இடத்தைவிட்டு வெளியேறினால் நல்ல லாபம் பார்க்க முடியும். இரும்பு மற்றும் அறிவு சார்ந்த தொழிலில் ஈடுபடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வண்டி வாகனம், வீடு வாங்கும் சந்தர்ப்பங்கள் அமையும். உடல்நலனில் மிக கவனமாக இருக்கவும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 துலாம்:
துலாம் ராசிக்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியை அளிக்கும். அதேபோல் குழந்தை பாக்கியம் கைகூடும். திருமண வாழ்க்கையும் மகிழ்ச்சி மிக்க வகையில் இருக்கும். உடல்நில பாதிப்புகளும் ஏற்ற வகையில் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு தொழிலில் உயர்பதவிகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்குவது தொடங்கி புதுமனை புகுவிழா நடத்தும் அளவுக்கு இந்த இரண்டரை ஆண்டுகள் அமோகமாக இருக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கன்னி:
இனிமேல் உங்களுக்காக உழைக்கப்போகிறேன் என்ற எண்ணம் மனதில் ஏற்படும். புதிய முயற்சிகள் கைகூடும். எல்லா விஷயங்களிலும் போட்டி உணர்வு மேலோங்கி இருக்கும். அனைத்திலும் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அதிகம் இருக்கும். அரசு உத்தியோக வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்னைகள் நிவர்த்தியாகும். குடும்ப வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
சனி பெயர்ச்சி 2023 to 2026 சிம்மம்:
சொந்த தொழில் செய்ய நினைத்தால் சிம்ம ராசிக்கு இந்த வருடம் சனி பகவான் அதற்கான வழியை காட்டுவார். வாகனங்கள் வீடு வாங்குவதற்கு நிறைய வழிகள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சந்தோசம், அவமானம் கிடைத்த இடத்தில் மரியாதையும் இந்த இரண்டு வருடத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சனி பெயர்ச்சி 2023 to 2026 கடகம்:
அடுத்த இரண்டரை ஆண்டுகள் கடக ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். மூன்று நட்சத்திரங்களில் பயணம் செய்யும்போது மூன்று விதமான கெடு பலன்கள் நடக்கும். இதில் நீங்கள் கவனத்தில் வைத்துக்கொள்வது ஒன்று தான். எதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருங்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அம்மா அப்பாவுக்கு பாதபூஜை செய்து வணங்குங்கள். அதுவே நல்ல பலனை கொடுக்கும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மிதுனம்:
இந்த வருடம் நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு நல்ல தருணங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் படாத கஷ்டம், அவமானம், துக்கம் இல்லை. இந்த சனிப்பெயர்ச்சியில் இவை அனைத்தையும் விட்டு வெளியே வந்துவிடுவீர்கள்.வெளிநாடுகள் செல்ல வாய்ப்பு உள்ளது. குலதெய்வத்தை வணங்குவது நல்லது. அது உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 ரிஷபம்:
ரிஷப ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். அதேபோல் தொழிலில் பணம் சேர்க்கும் நிலை கடினமாக இருக்கும். உங்களின் சொல்லில் ராஜாவாக இருப்பீர்கள். மாமனார் வீட்டில் உள்ளவர்கள் உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு எதிரிகள் தொல்லை அதிகமாக இருக்கும். ஆகவே தெய்வ வழிபாட்டை தவறாமல் செய்யுங்கள்.
சனி பெயர்ச்சி 2023 to 2026 மேஷம்:
மேஷ ராசிக்கு இந்த வருடம் அனைத்திலும் 100 சதவீதம் மகிழ்ச்சியாக இருக்கும். பணி உயர்வு, திருப்தி, சந்தோஷம் என எல்லா வித ஆசைகளும் நிறைவேறும். பணி உயர்வு இடமாற்றம் என சில மாற்றங்கள் நடக்கும். நீண்ட நாளாக இருந்து வந்த கடன் அடைய வாய்ப்பு உள்ளது. நோய்கள் உங்களை விட்டு நீங்கும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வெட்டி வேர் ஆன்மிகம் | Spiritual Benefits of Vetiver in Tamil
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |