சனி பெயர்ச்சி 2023 எப்போது? யாருக்கெல்லாம் நன்மை? யாருக்கெல்லாம் தீமை?

Advertisement

 சனி பெயர்ச்சி 2023 எப்போது? | Sani Peyarchi 2023

கிரகங்களில் சனி பகவான் பிரதான கடவுளாக விளங்குகிறார். மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனியின் பெயர்ச்சி 2.5 முதல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். நீண்ட கால பெயர்ச்சியால், சனி பகவான் குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் பலன்களையும் வழங்குவார். இந்த ஆண்டு, திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி ஜனவரி மாதம் 17ம் தேதி, செவ்வாய்க் கிழமை மாலை 6.04 மணிக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் இரண்டாம் பாதத்திலிருந்து, மற்றொரு சொந்த ராசியான கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் மூன்றாம் பாதத்திற்க்கு பெயர்ச்சி ஆக உள்ளார். இந்நிலையில் சனி பகவான் இந்த பெயர்ச்சியால் யாருக்கு நன்மை அளிக்க போகிறார், யாருக்கு தீமையை விளைவிக்க போகிறார் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

 சனி பெயர்ச்சி 2023 பலன்கள் – Sani Peyarchi 2023

மேஷம்:

மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது 11-ஆம் இடத்தில் அதாவது லாப ஸ்தானத்தில் சஞ்சாரிக்க உள்ளார். ஆக உங்களுக்கு இது லாப சனி ஆகும். ஆக இந்த சனி பெயர்ச்சியின் போது உங்களுக்கு சனிபகவான் 90% நன்மைகளை மட்டுமே வழங்குவார். இருப்பினும் 10% தீமையை வழங்கவும் செய்வார். விவேகத்துடன் செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசிக்காரருக்கு 10-ஆம் இடமான ஜீவன் ஸ்தானத்தில் சஞ்சாரிக்க உள்ளார். ஆக இது உங்களுக்கு கர்ம சனி ஆகும். இந்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு பாதிப்புகள் குறைவாக தான் இருக்கும். அதேபோல் உங்கள் தொழில் மேலும் மேலும் வளர்ச்சி அடையும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 70 சதவீதம் நன்மையையும், 30 சதவீதம் தீமையும் நடக்கும்.

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு 09-ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு பாக்கிய சனி ஆகும். இந்த பெயர்ச்சிக்கு பிறகு உங்களுக்கு அஷ்டம சனி முடிவடைகிறது. இந்த பெயர்ச்சி காலத்தில் தெய்வ வழிபாடு உங்களுக்கு மேன்மையை அளிக்கும். மேலும் சனி பகவான் இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 75 சதவீதம் நன்மையையும், 25 சதவீதம் தீமையும் வழங்குவார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2023 ஆம் ஆண்டு அடுத்த சனி பெயர்ச்சி யாருக்கு? சனி பெயர்ச்சி இருந்து விடுபடுபவர் ராசி எது ?

கடகம்:

கடகம் ராசிக்காரர்களுக்கு 08-ஆம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு அஷ்டம சனி ஆகும். இந்த பெயர்ச்சி காலத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் திருமணம் தடையும் உண்டாகலாம். மேலும் சனி பகவான் 20 சதவீதம் நன்மைகளையும், 80 சதவீதம் தீமையும் வழங்குவார்.

சிம்மம்:

சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது 07-ஆம் இடத்தில் அதாவது சப்தம ஸ்தானத்தில் சஞ்சாரிக்க உள்ளார். ஆக உங்களுக்கு இது கண்டக சனி ஆகும். இந்த கால கட்டத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவுக்குள் மற்றும் நண்பர்களிடமும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 30 சதவீதம் மட்டுமே நன்மைகளை வழங்குவார், 70 சதவீதம் தீமையும் வழங்க உள்ளார்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு 06-ஆம் இடமான ரண குண ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு ரோக சனி ஆகும். இந்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு பாதிப்புகள் குறைவாக தான் இருக்கும். அதேபோல் உங்கள் இது யோகமான காலமாக இருக்கும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 85 சதவீதம் நன்மையையும், 15 சதவீதம் தீமையும் வழங்குவார்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு 05-ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு பஞ்சம சனி ஆகும். இந்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு அர்தாஷ்டம சனி முடிவடைகிறது. அதேபோல் உங்கள் இது வரை இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும் காலமாக இந்த காலம் இருக்கும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 75 சதவீதம் நன்மையையும், 25 சதவீதம் தீமையும் வழங்குவார்.

விருச்சிகம்:

விருச்சம் ராசிக்காரர்களுக்கு 04-ஆம் இடமான அர்தாஷ்டம ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு அர்தாஷ்டம சனி ஆகும். இந்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு அர்தாஷ்டம சனி ஆரம்பம் ஆகிறது. ஆக இந்த கால கட்டத்தில் உங்களுக்கு பூர்விக சொத்தில் பிரச்சனைகள் ஏற்படும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 40 சதவீதம் நன்மையையும், 60 சதவீதம் தீமையும் வழங்குவார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் நினைத்த காரியம் நடக்க பேப்பரில் இந்த மாதிரி எழுதி வையுங்க..!

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு 03-ஆம் இடமான தைர்ய, வீர்ய ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு சகாய சனி ஆகும். இந்த சனி பெயர்ச்சியில் உங்களுக்கு ஏழரை சனி முடிவடைகிறது. ஆக இந்த கால கட்டத்தில் உங்களுக்கு மனம் தெளிவு பெரும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 90 சதவீதம் நன்மையையும், 10 சதவீதம் தீமையும் வழங்குவார்.

மகரம்:

மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியின் போது 02-ஆம் இடத்தில் அதாவது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரிக்க உள்ளார். ஆக இது உங்களுக்கு பாத சனி ஆகும். இந்த கால கட்டத்தில் ஏழரை சனி கடைசி பகுதியில் இருக்கிறீர்கள். ஆக மிக மிக நிதானமாக இருக்க வேண்டும். இந்த பெயர்ச்சியில் உங்களுக்கு 30 சதவீதம் மட்டுமே நன்மைகளை வழங்குவார், 70 சதவீதம் தீமையைம் வழங்க உள்ளார்.

கும்பம்:

கும்பம் ராசிக்காரர்களுக்கு 01-ஆம் இடமான ஜென்ம ஸ்தானத்தில் பெயர்ச்சியாகிறார். ஆக இது உங்களுக்கு ஜென்ம சனி ஆகும். இந்த பெயர்ச்சி கால கட்டத்தில் ஏழரை சனி மத்திய பகுதி ஆகும். ஆக இந்த கால காலகட்டத்தில் 25 சதவீதம் நன்மையையும், 75 சதவீதம் தீமையும் நிகழும்.

மீனம்:

மீன ராசிக்கு லாப சனி முடிந்து, விரைய சனி தொடங்குகிறது. ஆக இது உங்களுக்கு ஏழரை சனி ஆகும். விரைய சனி ஏழரை சனியின் முதற்கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு ஜாதகத்தில் 2 1/2 ஆண்டு காலம் ஆட்சி செய்கிறது. இச்சனியின் காலத்தில் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement