Sevvai Dosham Pariharam in Tamil
ஜாதகம் பார்ப்பது அதேபோல் ஜாதகம் பார்த்து அதனை நம்புவது என்று சிலர் இருப்பார்கள். இன்னும் சிலர் சொல்வார்கள் வாக்கு சொல்வது போல் நடக்கிறது. அப்படி ஒவ்வொரு ஜாதகத்திலும் சிலருக்கு கட்டம் சரியாக உள்ளது என்று சொல்வார்கள். அதில் முக்கியமாக பார்ப்பது செவ்வாய் தோஷம் உள்ளது, ராகு கேது உள்ளது என்பார்கள். அதற்கு நிறைய பரிகாரம் செய்வது வழக்கம்..!
பரிகாரம் செய்தால் நல்லது நடக்கிறது, பரிகாரம் செய்தால் நன்மை உண்டாகும் என்பதால் மக்கள் அதிகமாக பரிகாரங்களை செய்வார்கள். இன்று இந்த பதிவின் வாயிலாக செவ்வாய் தோஷம் நீங்க இந்த மிக எளிமையான் 3 பரிகாரத்தை செய்யுங்கள். நன்மை கிடைக்கும் அது என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 செவ்வாய் தோஷம் கண்டுபிடிப்பது எப்படி..?
செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம்:
அரசமர வழிபாடு:
அரசமரத்திற்கு நல்லெண்ணெய் வழிபாடு செய்யவேண்டும். அதாவது நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அது எப்போது செய்ய வேண்டும் என்றால் 9 வாரம் செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் ஹோரை வரும் அல்லவா அந்த நேரத்தில் ஏற்றவேண்டும். அதாவது செவ்வாய் கிழமை காலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் போடவேண்டும். இப்படி செய்வதால் திருமணம் கைகூடும். தடங்கலான அனைத்து விஷயங்களும் கைகூடும்.
முருகன் வழிபாடு:
முருகனிடம் இருக்கும் வேல் வாங்கி வீட்டில் வைத்து வழிபடலாம். அல்லது கோவில்களுக்கு வேல் வாங்கிக் கொடுக்கலாம்.
இது இரண்டும் இல்லையென்றால் வீடு கட்டுபவர்களுக்கு செங்கல் வாங்கிக் கொடுக்கலாம். ஏனென்றால், செங்கல் என்றாலே அது சிவப்பு நிறத்தில் தான் இருக்கும். அது செவ்வாய் கிரகத்துடன் சேர்ந்தது. ஆகவே அதனை வாங்கி கொடுத்தால் நன்மை உண்டாகும்.
அதேபோல் தொடர்ந்து முருகனை மனதில் நினைத்து வணங்கி வருவதன் மூலம் உங்களுக்கு செவ்வாய் தோஷம் விலகி திருமண தடை நீங்கி சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉 ராகு கேது தோஷம் நீங்க பரிகாரம்..!
பித்ரு தோஷம் போக்கும் எளிய பரிகாரம்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Aanmeega Thagaval in Tamil |