ஏப்ரல் 20 சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்!

ஏப்ரல் 20 சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள்! Suriya Kiraganam Rasi Palan 2023..!

Suriya Kiraganam Rasi Palan 2023 – இந்த 2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகின்ற ஏப்ரல் 20 தேதி நிகழ உள்ளது. கிரக சீற்றத்தினால் ஜோதிட ரீதியாக இங்கு கூறப்பட்டுள்ள ராசிக்காரர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த கிரகணத்தின் போது சூரியன் மேஷம் ராசியில் இருப்பார். இந்த கிரகணம் நிகழ்ந்து முடிந்த 2 நாட்களுக்கு பிறகு குருபெயர்ச்சி நிகழ உள்ளது. இத்தகைய கிரக மாற்றத்தினால் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

மேஷம்:

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷம் ராசிக்காரர்களுக்கு சில சிக்கலை ஏற்படுத்தலாம். ஆக மேஷம் ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிக மிக கவனம் செலுத்த வேண்டும். கிரகணம் நிகழும் போது நீண்ட தூரம் பயணம் செய்வதை தவிர்க்கவும். கிரகணம் நிகழ்ந்து முடிந்த பிறகு நிதி விஷயங்களிலும் தொழிலிலும் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆக இந்த விஷயங்களிலெல்லாம் மிகவும் கவனமாக இருக்கவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த பொருளை யாருக்கும் தப்பித்தவறி கூட அன்பளிப்பாக கொடுக்காதீர்கள்..!

சிம்மம்:சிம்மம்

சூரியன் சிம்ம ராசிக்காரர்களின் அதிபதியாவார். ஆக இந்த கிரகணத்தின் போது உங்களது ராசியில் 9-ஆம் வீட்டில் இருப்பார். கிரகணம் முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு குரு உங்கள் ராசியில் அதிர்ஷ்ட ஸ்தானத்திற்கு நகர்கிறது. ஆக இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு மிகவும் கவலையான பலன்களை கொடுக்கும். ஆக அடுத்த இரண்டு மாதங்கள் சிம்ம ராசிக்காரர்கள் பொறுமையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். உங்களுக்கு இந்த கால கட்டத்தில் உத்தியோகத்தில் சில ஏற்ற இரங்கல் இருக்கலாம். ஆக கவனமாக இருக்கவும்.

கன்னி:கன்னி ராசி தொழில்

இந்த சூரிய கிரகணம் கன்னி ராசிக்காரர்களுக்கு 8-ஆம் வீட்டில் நிகழும். ஆக இந்த கிரகணம் உங்களுக்கு நல்ல பலன்கள் கொடுத்தாலும். பயணங்களின் போது அதிக கவனமாக இருக்க வேண்டும். உங்களுடைய தவறான பழக்கவழக்கத்தினால் தொழில் சில நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது போன்ற நேரங்களில் உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக இருக்கும்.

விருச்சிகம்:விருச்சிகம்

இந்த சூரிய கிரகணம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 6-ஆம் வீட்டில் நிகழும். ஆக உங்களுக்கு எதிரிகளினால் தொல்லைகள் அதிகமாக இருக்கும். உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களுக்கு தீமை செய்ய வாய்ப்பு உள்ளது. ஆக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் சிறந்தது. இந்த நேரத்தில் உங்களுக்கு சளி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் தேவையில்லாத வீண் செலவுகளும் ஏற்ப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மற்றவர்களிடம் இருந்து இந்த 3 பொருளை வாங்கி விடாதீர்கள்..! மீறி வாங்கினால் கடன் பிரச்சனை அதிகரிக்கும்..!

மகரம்:மகரம்

இந்த கிரகணம் மகரம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்காது. சூரிய கிரகணம் உங்கள் ராசியில் 4-ஆம் வீட்டில் நிகழ்வதால் உங்கள் தாயிக்கு உடல் சார்ந்த ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும். மகிழ்ச்சியே இல்லாமல் இருப்பீர்கள். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆக இந்த காலத்தில் எதையும் கவனமுடன் யோசித்து செயல்படுவது மிகவும் சிறந்து.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்