வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தமிழ் மாதங்கள் பெயர்கள் | Tamil Mathangal List

Updated On: January 22, 2025 6:28 PM
Follow Us:
Tamil Month Names List in Tamil
---Advertisement---
Advertisement

தமிழ் மாதங்கள் பெயர்கள் | Tamil Mathangal List in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தமிழ் மாதங்களின் பெயர்களும், ஏன் தமிழ் மாதங்களுக்கு இந்த பெயர் வந்தது என்பதற்கான காரணத்தையும் பின்வருமாறு கொடுத்துள்ளோம். ஆங்கிலம் மாதங்களுக்கு எப்படி ஜனவரி முதல் டிசம்பர் வரை 12 மாதங்கள் உள்ளனவோ. அதே போன்று தமிழ் மாதங்களுக்கும் 12 மாதங்கள் இருக்கின்றன. அதாவது இந்த மாதங்கள் குறிப்பாக மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளை கொண்டுதான் நமது தமிழ் மாதங்கள் தோன்றப்பட்டன.

இருப்பினும் 12 ராசிகளை வைத்து நமது தமிழ் மாதங்கள் தோன்றினாலும் நமது முன்னோர்கள் ராசிகளின் பெயர்களை தமிழ் மாதங்களுக்கு பெயராக வைக்காமல் எந்த நட்சத்திரத்தன்று பௌர்ணமி வருகின்றதோ அந்த நட்சத்திரனின் பெயரை அந்த மாதத்திற்கு வடமொழியாளர்கள் சூட்டியுள்ளனர். சரி இந்த பதிவில் தமிழ் மாதப் பெயர்கள் பட்டியல்கள், ஒவ்வொரு மாதத்திற்கும் எத்தனை நாட்கள் உள்ளது போன்ற விவரங்களை இங்கு படித்து தெரிந்துகொள்வோம்.

தமிழ் மாதங்கள் பெயர்கள் வரிசை – Tamil Month Names List in Tamil:

தமிழ் மாதங்களின் பெயர்கள் நாட்களின்
எண்ணிக்கை
தமிழ் மாதம் தேதி
தமிழ் மாதத்தின் ஆரம்ப தேதி தமிழ் மாதத்தின் முடிவடையும் தேதி
சித்திரை 31 ஏப்ரல் 14 மே 14
வைகாசி 31 மே 15  ஜூன் 14
ஆனி 32 ஜூன் 15  ஜூலை 16
ஆடி 31 ஜூலை 17 ஆகஸ்ட் 16
ஆவணி 31 ஆகஸ்ட் 17 செப்டெம்பர் 16
புரட்டாசி 30 செப்டெம்பர் 17 அக்டோபர் 16
ஐப்பசி 30 அக்டோபர் 17 நவம்பர் 15
கார்த்திகை  30 நவம்பர் 16 டிசம்பர் 15
மார்கழி 29 டிசம்பர் 16 ஜனவரி 13
தை 30 ஜனவரி 14  பிப்ரவரி 12
மாசி 30  பிப்ரவரி 13 மார்ச் 14
பங்குனி 30 மார்ச் 15 ஏப்ரல் 13
தமிழ் மாதத்தின் ஆரம்ப தேதி மற்றும் முடிவடையும் தேதி ஒவ்வொரு வருடமும் மாறுபடும். ஆகவே இந்த எண்ணிக்கை அளவானது உதாரணத்திற்காக பதிவு செய்துள்ளோம்.

இந்த தமிழ் மாதப் பெயர்கள் எப்படி தோன்றியது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

தமிழ் மாதம் தோன்றியதற்கான காரணம்:

தமிழ் மாதம் தோன்றியதற்கான காரணம்

சித்திரை மாதம்:

சித்திரை மாதத்தில் சித்ரா நட்சத்திரம் அன்று தான் பௌர்ணமி வரும். அதனால் தமிழ் மாதத்தின் முதல் மாதத்திற்கு  சித்திரை மாதம் என்றானது.

வைகாசி மாதம்:

விசாக நட்சத்திரம் என்பது வைசாகம். விசாக நட்சத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாதம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.

ஆனி மாசம்:

அனுஷ நட்சத்திரம் சம்மந்தமானது ஆனுஷீ. அந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாதம் ஆனுஷீ மாதமாகும். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.

ஆடி மாசம்:

ஆஷாட நட்சத்திரத்தில் பூர்வ ஆஷாடம், உத்தர ஆஷாடம் என்று இரண்டு உள்ளது. பூர்வம் என்றால் முன், உத்தரம் என்றால் பின். பூர்வ / உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும். ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி. இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.

ஆவணி மாசம்:

ச்ராவணம் என்பது ச்ரவண நட்சத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் ஓணம் என்கிறோம். அது மஹாவிஷ்னுவின் நட்சத்திரம் என்பதால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நட்சத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும். இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து போய் ஆவணி மாதமாயிற்று.

புரட்டாசி மாதம்:

ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு. பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று. அஷ்ட என்பது அட்ட என திரிந்தது. உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று. இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.

ஐப்பசி மாதம்:

ஆச்வயுஜம், அச்வினி என்பதை அச்வதி என்கிறோம். அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.

கார்த்திகை மாதம்:

க்ருத்திகை நட்சத்திரம் தான் கார்த்திகை. இந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.

மார்கழி மதம்:

மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று. இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று. அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.

தை மாதம்:

புஷ்யம் தான் தமிழில் பூசம். புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர். பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம். அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.

மாசி மாதம்:

மகம் நட்சத்திரம் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி-யாக மருவி மாசி ஆயிற்று.

பங்குனி மாதம்:

தமிழ் மாதத்தில் கடைசி தமிழ் மாதம் என பங்குனி மாதம் அழைக்கப்படுகிறது. இந்த மாதம் எப்படி வந்தது என்பதை பார்ப்போம். பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம். இந்த இரு நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now