தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை..!

Advertisement

தை அமாவாசை 2023

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளாக அமாவாசை இருக்கிறது. அதிலும் தை அமாவசை சிறப்பு பெற்றது. நாளை மறுநாள் அதவாது 21.01.2023 சனிக்கிழமை தை அமாவாசை வருகிறது. இந்த நாளில் நம் முன்னோர்களை நனைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைப்பதாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அதனால் தை அமாவாசையில் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை:

thai amavasai 2023 in tamil

அமாவாசை முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கழுவி விட வேண்டும்.

காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு ஒரு பாத்திரத்தில் எள் தண்ணீர் வைத்து இறைவனை வழிபட வேண்டும். இல்லையென்றால் அன்றைய நாள் கோவிலுக்கு சென்றீர்கள் என்றால் அந்தணர் செய்வார்கள்.

தை அமாவாசை வழிபாடும் முறை 2024

மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நெய்வேத்தியம் செய்திட வேண்டும். முக்கியமாக நீங்கள் நெய்வேத்தியம் செய்யும் நேரம் ராகு காலம் இல்லாமல் இருக்க வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்த உணவை செய்து வழிபடலாம். அடுத்து காகத்திற்கு உணவு வைக்க வேண்டும்.

மாலை நேரம் வீட்டில் விளக்கேற்றி முன்னோர்களை நனைத்து வழிபட வேண்டும்.

அடுத்து முக்கியமாக மதியம் இலை போட்டு படைத்த பிறகு முன்னோரை நனைத்து ஒரு 2 பேருக்காவது உணவு கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.  இப்படி செய்வதினால் முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

தை அமாவாசை அன்று செய்ய கூடாதவை:

அமாவாசை அன்று வாசலில் கோலம் போட கூடாது. மாமிசம் சாப்பிட கூடாது. மேலும் பூண்டு, வெங்காயம் போன்றவை சாப்பிட கூடாது. யாரிடமும் கடன் வாங்க கூடாது. அமாவாசை அன்று தீட்டு வீட்டுக்கு போக கூடாது.

இதையும் படியுங்கள் ⇒ தை அமாவாசை தினத்தில் செய்ய வேண்டியவைகள்..!

இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement