புதன் பெயர்ச்சி பலன்கள்
ஜோதிட ரீதியாக, நவகிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்படி, கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் போதும் 12 ராசிகளிலும், அவற்றின் தாக்கம் என்பது ஏற்படும். இதனால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் ஒரு சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளையும் ஏற்படும். அந்தவகையில் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு ஆகியவற்றின் தலைவனாக கருதப்படும் புதன், ஒரு வருடத்திற்கு பிறகு தனது சொந்த ராசியான மிதுனத்திற்கு வருகின்ற ஜூன் 24 -ஆம் தேதியன்று நுழைகிறார். இதனால் 12 ராசிகளில் 3 ராசிகள் மட்டும் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகிறது. எனவே, புதனின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும், அந்த 3 ராசிகாரர்கள் யாரென்று இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.
These Zodiacs Signs are Lucky Because of Mercury Moving to Gemini:
மேஷ ராசி:
மேஷ ராசியின் 3 -வது வீட்டில் புதன் நுழைய உள்ளார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்க போகிறது. முதலீடு செய்த தொழிலில் இருந்த இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயம் உண்டு. இக்காலத்தில் மேஷ ராசிக்காரர்கள், எதிரிகளை வீழ்த்தி வெற்றிபெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல், தைரியமும் வீரமும் அதிகமாக காணப்படும். நிதிநிலைமை நன்றாக இருக்கும். மேலும், நீதிமன்றம் வழக்குகளின் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
ஆண்டியையும் அரசனாக்கும் புத-ஆதித்ய யோகத்தால் அரசனாக போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்..!
கன்னி ராசி:
கன்னி ராசியின் 10 -வது வீட்டில் புதன் நுழைகிறார். 10 -வது வீடு என்பது தொழில் மற்றும் வியாபாரத்திற்கு உரிய வீடாகும். இதனால் தொழில் மற்றும் வியாபாரம் செய்யும் கன்னி ராசிக்காரர்கள் நல்ல லாபத்தையம் வெற்றியையும் பெறப்போகிறார்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற விரும்பினால் இக்காலம் நன்றாக இருக்கும். இதனால் விரும்பிய வேலையை பெறலாம். மேலும், தந்தையுடன் இருக்கும் உறவு அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் சிறந்த வளர்ச்சியினை அடைவீர்கள்.
கும்ப ராசி:
கும்ப ராசியின் 5 -வது வீட்டில் புதன் நுழைகிறார். இதனால், கும்ப ராசிக்காரரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்க போகிறது. இக்காலத்தில் பணவரவு அதிகரிக்கும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். நல்ல பண பலன்களை பெறுவார்கள்.
செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை அமோகமாக மாற போகிறது..
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |