மகா சிவராத்திரி 2024
சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும். மகா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும். இந்த பொன்னான நாளில் சில பொருட்களை வாங்கி வைத்தால் துன்பம் எல்லாம் பறந்து போகுமாம்.அது என்னென்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்வோம்.
சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய பொருட்கள்:
வில்வம்:
சிவராத்திரி அன்று வில்வத்தை வாங்கி சிவனுக்கு படைக்க வேண்டும். இந்த வில்வத்தை சிவனுக்கு அர்ச்சனை செய்வார்கள். இதனால் கடன் பிரச்சனை, முன் பாவங்கள் தீரும். வீட்டில் சிவன் படம் வைத்திருந்தாலும் வில்வத்தை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
விபூதி:
சிவபெருமானுக்கு விபூதி வாங்கி கொடுக்க வேண்டும். இந்த விபீதியை வைத்து கடவுளுக்கு அபிஷேகம் செய்வார்கள். இதனால் கடவுளின் அருள் முழுமையாக கிடைக்கும். மேலும் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.
விரலி மஞ்சள்:
மஹா சிவராத்திரி அன்று மஞ்சளை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். இதனால் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
மஹா சிவராத்திரி செய்ய வேண்டியவை:
ஒரு தாம்பூலம் எடுத்து அதில் விபூதியை முழுவதும் பரப்பவும். அந்த விபூதியின் மீது ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி அதில் வில்வம், துளசி, கற்பூரம், ஏலக்காய் சேர்த்து தாம்பூலத்தின் ஒரு பக்கம் வைக்கவும்.
மறுபுறம் ஒரு அகல் விளக்கு எடுத்து 5 திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 5 திரி போட்டு ஒரே முகமாக தீபம் ஏற்றினாலும் சரி தான். அப்பொழுது 1008 முறை ஓம் சிவாய நமஹ ஓம் நமச்சிவாய என்று சொல்ல வேண்டும். இந்த தீபம் இரவு முழுவதும் எரிய வேண்டும். இப்படி செய்வதினால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கும், தீராத கடனும் தெரிந்து விடும்.
(Mar 2024) மஹா சிவராத்திரி 2024
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |