தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் இதை பாருங்கள் அதிர்ஷ்டம் வரும்..!

Things To See When You Wake Up in Tamil

Things To See When You Wake Up in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய ஆன்மிகம் பதிவில் நாம் தூங்கி எழுந்ததும் பார்க்க வேண்டிய பொருட்கள் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நிலையில் நாம் தூங்கி எழுந்ததும் மொபைல் போனை தான் பார்க்கிறோம்.

ஆனால் நாம் தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் சில பொருட்களை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். தூங்கி எழுந்ததும் எந்த பொருட்களை பார்த்தால் அதிர்ஷ்டம் வரும் என்பதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இது மாதிரியான பொருட்களை வீட்டில் வைக்கவே கூடாது

தூங்கி எழுந்ததும் பார்க்க வேண்டிய பொருட்கள்:

நாம் தூங்கி எழுந்ததும் அதிர்ஷ்டம் தரக்கூடிய சில பொருட்களை பார்க்க வேண்டும். அந்த பொருட்களை பார்ப்பதால் நம் வாழ்க்கையில் உள்ள கஷ்டம் தீரும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள்.

சாமி படங்கள்: 

சாமி படங்கள்

நாம் தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் சாமி படங்களை பார்க்கலாம். சாமி படங்களை பார்ப்பதால் அந்த நாள் எந்த ஒரு தீங்கும் ஏற்படாத நாளாக இருக்கும். தூங்கி எழுந்து முதலில் சாமி படங்களை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நன்மை உண்டாகும் என்றும் நம்பப்படுகிறது.

சூரிய உதயம்: 

சூரிய உதயம்

காலையில் தூங்கி எழுந்தவுடன் சூரிய உதயத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். காலையில் சூரிய உதயத்தை பார்ப்பதால் வாழ்க்கையில் உள்ள கஷ்டம் தீர்ந்து நன்மை உண்டாகும் என்று கூறப்படுகிறது.

கடிகாரம்:

கடிகாரம்

தினமும் காலையில் நாம் தூங்கி எழுந்தவுடன் ஓடும் கடிகாரத்தை பார்க்க வேண்டும். கடிகாரத்தை பார்ப்பதால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

எல்லோருடைய வாழ்விலும் நேரம் என்பது இன்றியமையாத ஓன்று. நேரத்தை வீணடிக்க கூடாது என்று கூறுவார்கள். நிற்காமல் ஓடிக்கொண்டிருப்பது தான் கடிகாரம்.

நிற்காமல் சுற்றி கொண்டிருக்கும் கடிகாரத்தை நாம் தூங்கி எழுந்ததும் பார்ப்பதால் அதைப்போல நாமும் நம் வாழ்க்கையில் முன்னேற முடியும். அதனால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

கண்ணாடி:

கண்ணாடி

நாம் தூங்கி எழுந்ததும் கண்ணாடி பார்க்க வேண்டும். கண்ணாடி பார்ப்பதால் நமக்கு நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள். கண்ணாடியை தெய்வ சக்தி கொண்ட ஒரு பொருள் என்று கூறலாம்.

நல்ல நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படும் மங்கள பொருட்களுடன் கண்ணாடியும் கொடுப்பார்கள். காலை எழுந்ததும் கண்ணாடி பார்ப்பதால் நம் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்களை கொடுக்கிறது.

அதனால் காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்ப்பது நல்லது என்றும் அதிர்ஷ்டம் தரும் என்றும் கூறுகிறார்கள்.

மலர்கள்:

தினமும் தூங்கி எழுந்ததும் நறுமணம் மிக்க மலர்களை பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் கிடைக்கிறது. அதனால் தூங்கி எழுந்ததும் மணமிக்க மலர்களை பார்ப்பது நல்லது. இதனால் வீட்டில் செல்வம் வளம் பெருகும்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்