திருமணம் செய்ய உகந்த மாதங்கள் | Which Month is Good For Marriage in Tamil
அன்பான பொதுநலம்.காம் வாசகர்களே அனைவருக்கும் வணக்கம் பொதுவாக சொல்வார்கள் வீட்டை கட்டி பார், கல்யாணத்தை பண்ணிபார் என்பார்கள். அது உண்மைதான் ஒரு வீட்டைக்கட்டுவதும் கல்யாணம் செய்வதும் மிகவும் கடினம். கல்யாணம் செய்வதற்கு ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் எதோ ஒரு விதத்தில் அசதி பணக்கஷ்டம், மனகஷ்டம் போன்ற பல கஷ்டங்கள் வரும். அந்த வகையில் ஒரு திருமணம் செய்வதற்கான முடிவுகளை எடுப்பதற்கு பல முறை ஜோதிடர்களை பார்த்து அதன் பின் முடிவுகளை எடுப்பார்கள். அது போல் திருமணம் என்றால் நல்ல நாள், கிழமை, நல்ல மாதம், நல்ல நேரம், ராசி, லக்கனம் என இது போன்ற அனைத்தையும் பார்த்த பிறகு தான் திருமணத்தை செய்வார்கள். அந்த வகையில் இன்று இந்த பதிவில் திருமணம் செய்வதற்கு உகந்த நாள் மாதம் கிழமை போன்ற அனைத்தையும் பார்ப்போம் வாங்க.
திருமண சுப முகூர்த்த நாட்கள் |
திருமணம் செய்ய உகந்த மாதம்:
- திருமணம் செய்வதற்கு முதலில் இவருடைய பொருத்தத்தை பார்ப்பார்கள். பின்பு அவர்களுக்கு ராசியான மாதங்களை வைத்து கணிப்பார்கள் அதன் பின் அவர்களுக்கு எந்த மாதத்தில் திருமணம் செய்ய வேண்டும் என்பதை கணித்து சொல்வார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளது அந்த வகையில் திருமணத்திற்கு உகந்த மாதங்கள் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, மாசி, பங்குனி போன்ற மாதங்களில் திருமணம் செய்யலாம்.
திருமணம் செய்ய உகந்த திதி:
- திதி என்பதை அனைத்து விஷயத்திற்கும் பார்ப்பார்கள். சாதாரணமாக தீபாவளிக்கு துணி வாங்குவதர்க்கு சென்றால் கூட திதியை பார்ப்பார்கள் அஷ்டமி, நவமி போன்ற தினங்களில் எந்த சுபகாரியங்களையும் செய்யமாட்டார்கள். வளர்பிறை, துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, ஏகாதமி, திரயோதசி, தேய்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி போன்ற திதிகளில் திருமணம் செய்வார்கள்.
திருமணம் செய்ய உகந்த நாள்:
- பொதுவாக சில தினங்களில் சில முக்கிய முடிவுகளை கூட எடுக்கமாட்டார்கள். அது போல் தான் கல்யாணம் செய்வதர்க்கு சுபமுகூர்த்த தினமாக இருந்தாலும் அந்த தேதிகளில் திருமணம் செய்யமாட்டார்கள். முக்கியமாக செவ்வாய்கிழமை, சனிக்கிழமைகளில் திருமணம் செய்யமாட்டார்கள். மற்ற நாள்கள் அனைத்தும் திருமணம் செய்ய உகந்த நாட்கள்.
திருமணம் செய்ய உகந்த நட்சத்திரம்:
- திருமணம் செய்வதர்க்கு மணமகன், மணமகள் நட்சத்திரம் இருந்தால் போதும் என்று நினைத்துருப்பார்கள் ஆனால் திருமணம் செய்வதற்கு நாள் குறிக்கும் போதே அன்று என்ன நட்சத்திரம் இருக்கும். அந்த இருவருக்கிடையே நட்சத்திர பொருத்தம் இருக்கிறதா என்பதை கணிப்பார்கள். அது போல் சில 10 நட்சத்திரம் உள்ளது அது.. ரோகிணி, மிருகசீருஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் திருமணம் செய்யலாம்.
- குறிப்பாக ஆனி மாதத்தில் பிறந்த பெண்ணுக்கும், ஆனி மாதத்தில் பிறந்த ஆணுக்கும் திருமணம் செய்யக்கூடாது.
திருமணம் செய்ய உகந்த லக்னம்:
- ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் போன்ற லக்னங்களில் திருமணம் செய்யலாம். முக்கியமாக ஏழாம் இடத்திலும் எட்டாம் இடத்திலும் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் நன்மை.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |