திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா..?

thiruvonam natchathiram

Thiruvonam Natchathiram

மனிதர்களை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலினத்தவர்கள் மட்டும் இருந்தாலும் கூட அவர்கள் அனைவருக்கும் பெயர்கள், உருவங்கள் மற்றும் குணங்கள் என அனைத்தும் ஒன்றுடன் ஒன்று வேறுபட்டு தான் காணப்படுகிறது. அதேபோல் ஆன்மீகத்தில் உள்ள 12 ராசிகள் தான் ஒருவருக்கும் மாறி மாறி வருகிறது. அதாவது ஒருவரின் பிறந்த தேதி, நேரம் மற்றும் கிரங்களின் அமைப்பு என இவற்றை அடிப்படியாக வைத்து தான் பலன்கள் ஆனது அமைகிறது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் ஒவ்வொருவரின் குணமும் அவ்வாறு தான் அமைகிறது. ஆகவே இன்றைய பதிவில் மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் முதல் கல்வி, வாழ்க்கை மற்றும் இதர அனைத்து பற்றிய தகவலையும் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

திருவோணம் நட்சத்திரம் குணங்கள்:

 திருவோணம் நட்சத்திரம் குணங்கள்

நட்சத்திரத்தில் 22-வது நட்சத்திரமாக இருப்பது திருவோணம் நட்சத்திரம் தான். இதன் படி பார்க்கும் போது மகர ராசி திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அசுபதியாக சந்திரன் அமைந்து இருக்கிறார்.

 • இத்தகைய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான தோற்றத்தை உடையவராகவும், இரக்க குணம் உள்ளவராகவும் காணப்படுவார்கள்.
 • வாழ்க்கையில் வரும் அனைத்து இன்னல்களையும் எளிதில் எப்படி கையாளுவது என்று சிந்திக்கும் குணம் உடையவர்கள். மேலும் அதற்கு அடுத்து வரும் பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் திறம்பட இருப்பார்கள்.
 • இவர்கள் செய்யும் செயலில் நேர்மையும், பக்தியும் கலந்து காணப்படும். பிறர் வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு உண்மையாக நடந்து கொள்வார்கள்.
 • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி கோபம் கொள்ளும் குணம் கொண்டவராக இருந்தாலும் கூட மிகவும் தூய்மையாக இருப்பதை மட்டுமே விரும்புவார்கள்.
 • அதேபோல் பிறர் ஒருவர் செய்யும் தவறினை பெரிது என கருதாமல் அதனை சுட்டிக்காட்டி தவறை உணரச் செய்வார்.
 • திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுயமரியாதையை எதிர்பார்க்கும் குணம் கொண்டவராக திகழ்வார்கள்.
 • ஒப்பனை செய்து கொள்வதிலும், ஆடை மற்றும் அணிகலன்கள் மீது அதிகம் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா 

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்:

குடும்பம்:

குடும்பத்தில் உள்ளவர்களின் மீது அதிக பாசம் கொண்டவராக இருப்பார்கள். சில நேரத்தில் கொஞ்சம் கோவமாக பேசினாலும் கூட அவர்களுக்கான தேவையினை சரியாக பூர்த்தி செய்து கொள்வார்கள்.

கல்வி:

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வல்லமை கொண்டவராக இருப்பார்கள். படிப்பிற்கு ஏற்ற வேலையினை செய்யவில்லை என்றாலும் கூட செய்யும் வேலையை விரும்பி செய்யும் குணம் படைத்தவர்கள்.

தொழில்:

சிறுவயதிலேயே தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் யுக்திகளை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு திட்டமிட்டு செயல்பட்டு முன்னிலையில் வருவார்கள்.

மேலும் இந்த நட்சத்திரக்காரர்களை பொறுத்தவரை பொறியியல், ஹோட்டல், மெக்கானிக்கல் அல்லது டெக்னிக்கல் வேலைகள் ஆகிய துறைகள் ஜோதிடத்தின் படி ஏற்றதாக இருப்பதாக கருதப்படுகிறது.

கும்ப ராசி சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம் பற்றி தெரியுமா 

அதிர்ஷ்டமான எண், மந்திரம் மற்றும் நிறம்:

மந்திரம்:

ஓம் விஷ்ணவே நம

அதிர்ஷ்டமான நிறம்:

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் என்றால் அது வெள்ளை மற்றும் கருப்பு ஆகும்.

அதிர்ஷ்டமான எண்:

2, 3, 9 ஆகிய எண்கள் இந்த ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்டமான எண் ஆகும்.

ராசி கல்:

இவர்களுக்கு முத்து கல் தான் ராசியான கல்லாக ஆன்மீகத்தில் கருதப்படுகிறது.

திருவோணம் நட்சத்திரம் பொருந்தும் நட்சத்திரம்:

ஆண் நட்சத்திரம்:

 • திருவோணம் நட்சத்திரம்- அசுவினி, மிருகசீரிடம் 1 மற்றும் 2-ஆம் பாதம், உத்திராட்டதி, அனுஷம்.
 • உத்திராடம் நட்சத்திரம் (2,3 மற்றும் 4-ஆம் பாதம்)- மிருகசீரிடம் 1 மற்றும் 2-ஆம் பாதம், பரணி.
 • அவிட்டம் நட்சத்திரம் (1,2 பாதம்)- விசாகம், திருவோணம், புனர்பூசம் 4-ஆம் பாதம், ஆயில்யம் மற்றும் சுவாதி.

பெண் நட்சத்திரம்:

 • அவிட்டம் நட்சத்திரம் (1 மற்றும் 2-ஆம் பாதம்)- மூலம், கார்த்திகை 1-ஆம் பாதம்.
 • உத்திராடம் நட்சத்திரம் (2,3 மற்றும் 4-ஆம் பாதம்)- பரணி, பூசம், அனுஷம், , பூராடம், அஸ்தம் மற்றும் உத்திரட்டாதி.
 • திருவோணம் நட்சத்திரம்- பூரட்டாதி 4-ஆம் பாதம், பரணி, சித்திரை, கேட்டை, புனர்பூசம் 4-ஆம் பாதம், உத்திரம் 2, 3 மற்றும் 4-ஆம் பாதம், பூராடம் மற்றும் அவிட்டம் 1 மற்றும் 2-ஆம் பாதம்.
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்