பெற்றோர் செய்த பாவம் பிள்ளையே சேருமா..? இல்லையென்றால் யாரை சேரும் உண்மை என்ன தெரியுமா..?

Advertisement

பெற்றோர் பாவம் பிள்ளைகளுக்கு சாபமா..?

நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவில் பயனுள்ள தகவல் என்னவென்றால் பெற்றோர் செய்த பாவம் பிள்ளையே சேருமா? அந்த பாவத்தை யார் அனுபவிப்பார்கள் என்று தெரிந்துகொள்ள போகிறோம். பொதுவாக இதனை பழமொழி என்று நினைத்து கொண்டு இருப்போம்.

நாம் வீட்டில் ஏதாவது தவறு செய்து விட்டால் அல்லது பாவம் செய்து விட்டால் இந்த பாவம் அனைத்தும் யாரை சேரப்போகிறதோ என்று சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அந்த பாவம் புண்ணியம் அனைத்தும் யாரை சேரும் வாங்க தெரிந்துகொள்ளலாம்.

பெற்றோர் செய்த பாவம்:

வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம் அதாவது பெற்றோர்கள் செய்த பாவம் பிள்ளைகளை வந்து சேரும். உன் காலம் முடிந்து விடும் ஏன் இவ்வளவு பாவம் செய்கிற என்று சொல்வார்கள்.

இப்படி சொல்வது உண்மையா? நாம் பெற்றோர்கள் சொல்வார்கள் என் அப்பா செய்த பாவம் என்னை துரத்தி வருகிறது என்று அதேபோல் அவர்களுக்கு ஏதேனும் நல்லது நடந்தால் என் பெற்றோர்கள் செய்த புண்ணியம் என்னை வந்து சேருகிறது என்று சொல்வார்கள்.

உன் பெற்றோர் செய்த பாவம் எப்படி உண்மை வந்து சேருகிறதோ அதேபோல் தான் பாவமும் உன்னை வந்து சேரும் என்று சொல்வார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 இந்த மாதிரியான பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பே இல்லை..!

பெற்றோர் பாவம் பிள்ளைகளுக்கு சாபமா?

பெற்றோர் செய்த பாவம் புண்ணியம் இரண்டும் பிள்ளைகளை வந்து சேர்க்கிறது என்று நினைத்தால் அது அவரவர் அறியாமையே என்று ஒரு பாடலில் மூலம் குதம்பை சித்தர் சொல்கிறார்.

 அவர் அந்த பாடலில் முடிவில் அவர் நமக்கு சொல்வது என்னவென்றால் அவர் அவர் செய்த நல்வினை தீவினை அனைத்தும் அவர் அவருக்கு வந்து சேரும். என்று அறிவுறுத்துகிறார். 

ஆகையால் நீங்கள் செய்த பாவம் உங்கள் பிள்ளைகளுக்கு சேராது. அதேபோல் நீங்கள் செய்த பாவம் அனைத்தும் அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு வந்து சேரும் என்கிறார்கள். ஆனால் இது கலியுகம் என்பதனால் அவர் அவர் செய்த பாவத்திற்கு பரிகாரமாகவும் படமாகவும் அவரவர் கண் எதிரே நடக்கும்.

உங்களுக்கு நடக்கும் போது நீங்களே அறிந்துகொள்வீர்கள் அன்று செய்த பாவத்திற்கு விளைவாக இன்று இது நடக்கிறது என்று.

யாரும் எந்த விதத்திரளும் செய்த பாவத்திற்கு கடவுளின் கண்களிருந்து தப்பிக்கவும் முடியாது. அவர் அவர் செய்த பாவத்திற்கு தண்டனையை அவரே அனுபவிப்பார்கள்.

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉 நவகிரக மந்திரம் சொன்னால் நன்மைகள் நடப்பதை நீங்களே தெரிந்துகொள்ளலாம்

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்
Advertisement