வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு..!

வலங்கைமான் மாரியம்மன் கோவில்

வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு (Valangaiman temple history in tamil)..!

வலங்கைமான் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் அமைந்துள்ளது. இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு மற்றும் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்வோம் வாங்க…

மூலவர்  வலங்கைமான் மாரியம்மன்
ஊர்  வலங்கைமான்
மாவட்டம்  திருவாரூர் 
மாநிலம்  தமிழ்நாடு 

 

புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!

வலங்கைமான் மாரியம்மன் கோவில் சிறப்பு:-

இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது வேண்டுதல் நிறைவேற பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும்.

மேலும் இக்கோயிலில் பேச்சியம்மன், இருளன், மதுரைவீரன், விநாயகர் ஆகியோர் அருள்பலிக்கின்றனர்.

கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், திருமண தடை, பார்வை இழந்தவர்கள், அம்மை நோய் கண்டவர்கள் ஆகியோர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்து குணம் பெறுகின்றனர்.

நேர்த்திக்கடன்:-

இக்கோயிலின் மிக முக்கியமான வழிபாடு பாடைக்காவடி ஆகும். தந்தையை பாடைமீது படுக்கவைத்து அவர் பேச்சு, மூச்சு இல்லாமல் இருப்பது போல் நடிக்க. மகன் பக்திப் பரவசத்தோடு தீச்சட்டி ஏந்தி வருவார். பிராத்தனை செய்ப்பவரின் மனைவி கலியில் வேப்பிலை ஏந்தி வருவார். மகன் படையலை படித்திருக்க, தந்தையும் மற்ற உறவினர்களும் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.

9 நவகிரகங்கள் சுற்றுலா..! Navagraha Temples List..!

அம்மன் தோன்றிய விதம்:

வலங்கைமான் அருகில் உள்ள ஐயனார் கோயில் வழியாக ஒரு பிராமண தம்பதியரால் ஒரு பெண் குழந்தை விட்டு செல்லப்பட்டது. அந்த குழந்தையை அந்த பகுதியில் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் எடுத்து வளர்த்தனர். அந்த குழந்தை அம்மை நோய் கண்டு உயிர் பிரிந்தது. அவர்கள் குழந்தையை அவர்கள் வீட்டு கொல்லைப்புறத்தில், கீற்றுக்கொட்டகை அமைத்து சமாதி வைத்தனர்.

சமாதிக்கு தினமும் விளக்கேற்றிவந்தனர், வீட்டில் சமைக்கும் உணவுப்பண்டங்களை தினமும் படைத்தனர், காலப்போக்கில் சமாதியை அனைவரும் வழிபடத்துவங்கினர். வேண்டியவர்களுக்கு வேண்டிய பலன் கிடைத்ததால் அந்த குழந்தையை சீதளாதேவி என்று பெயரிட்டு அம்மனாக வழிபட்டனர். சீதளாம் என்றால் குளிர்ச்சி என்று பொருள் அம்மை ஏற்பட்டு குளிர்ந்து போனதால் அந்த பெண் தெய்வம் சீதளாதேவி என்று அழைக்கப்படுகிறாள்.

வலங்கைமான் மாரியம்மன் கோவில் வரலாறு (Valangaiman temple history in tamil):-

தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாக பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தான். ஆனால் சக்தியோ சிவனையே திருமணம் செய்து கொண்டால். தட்சன் யாகம் செய்த போது சக்தி அதில் விழுந்து மீண்டும் இமையமலையில் அவதரித்தாள். சக்தி தேவியின் உருவம் நெருப்பில் குளித்ததால் சிதைந்து போயிற்று.

எனவே திருமால் உலகத்தை காப்பாற்ற சிவபெருமானை அழகிய சக்தியை உருவாக்க கேட்டார். அவ்வாறு உருவான சக்தி பல தலங்களில் அமர்ந்தாள். அவற்றை சக்தி பீடங்கள் என்றனர். இந்த பீடங்கள் 108 தான். ஆனால் சக்தி பீடங்களையும் மிஞ்சும் வகையில் சில கோயில்கள் அமைந்தன அவற்றில் ஒன்றுதான் இந்த வலங்கைமான் மகா மாரியம்மன் கோயில் ஆகும்.

தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..!

வலங்கைமான் மாரியம்மன் கோவில் திருவிழா:

ஆவணி ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மற்ற ஞாயிற்று கிழமைகளில் இங்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

ஆலையம் திராக்கப்படும் நாள்:-

காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ஆலையம் திறக்கப்படும். அதன் பிறகு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆலையம் திறக்கப்படும்.

வலங்கைமான் மாரியம்மன் கோவில் முகவரி:-

அருள்மிகு வலங்கைமான் மகாகாளி திருக்கோயில், வலங்கைமான், திருவாரூர் மாவட்டம்.

 

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்